கரோலஸ் லின்னேயஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கரோலசு லின்னேயசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கரோலஸ் லின்னேயஸ் (Carl Linnaeus)
Carl von Linné.jpg
கரோலஸ் லின்னேயஸ் அலெக்சாண்டர் ரோசலின் 1775ல் வரைந்தது.
பிறப்பு மே 13, 1707(1707-05-13) (see
article note:[1])
பிறப்பிடம் ரோஸ்ஹுல்ட், ஹெல்ம்ஹுல்ட், சுவீடன்
இறப்பு சனவரி 10 1778 (அகவை 70)
இறப்பிடம் உப்சாலா, சுவீடன்
வாழிடம் சுவீடன்
தேசியம் சுவீடன்
துறை விலங்கியல், மருத்துவம், தாவரவியல்
கல்வி கற்ற இடங்கள் லுண்ட் பல்கலைக்கழகம்
உப்சாலா பல்கலைக்கழகம்
University of Harderwijk
அறியப்படுவது அறிவியல் வகைப்பாட்டு, உயிரியல் பெயர்முறை
ஒப்பம் கரோலஸ் லின்னேயஸ்'s signature
கரோலஸ் லின்னேயஸ் தனது தேசிய உடையில்.

கரோலஸ் லின்னேயஸ் (Carl Linnaeus) (மே 23, 1707 - ஜனவரி 10, 1778) சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு (scientific classification) முறைக்கும், பெயர்முறைக்கும் (nomenclature) அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் (ecology) முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

கார்ல் வி. லின்னே என்று தன்கையொப்பத்தில் இட்டுள்ளார். கடை எழுத்தாகிய e மீது ஏகாரத் திரிபுக் குறியிட்டுக் காட்டியுள்ளார்.

பொருளடக்கம்

பெயர் [தொகு]

"கார்ல் லின்னேயஸ்", "கரோலஸ் லின்னேயஸ்", கார்ல் வொன் லின்னே, "கார்ல் லின்னே" போன்ற பல்வேறுபட்ட பெயர்கள்வழி இவர் குறிப்பிடப்படுகின்றார். இவரது உண்மையான சுவீடிய மொழிப் பெயர் பற்றி இப்பொழுதும் குழப்பம் நிலவுகிறது. 'கார்லஸ் லின்னேயஸ்' என்பது லத்தீனாக்கம் செய்யப்பட்ட பெயராகும். இப்பெயரையே அவர், இலத்தீன் மொழியில் தான் எழுதிய அறிவியல் நூல்களில் பயன்படுத்தியுள்ளார்.

வகைப்பாட்டியல் [தொகு]

லின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். இவரது வகைப்பாட்டில் ஐந்து படிநிலைகள் (levels) அமைந்திருந்தன:

  1. திணை(இராச்சியம்) (kingdom)
  2. வகுப்பு (class)
  3. வரிசை (order)
  4. பேரினம் (genus)
  5. இனம் (species)

திணைகள் (இராச்சியங்கள்), பிளாண்டே (plantae - தாவரங்கள்), அனிமேலியா (animalia - விலங்குகள்) என இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தன. இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன.

வரலாறு [தொகு]

கார்லஸ் லின்னேயஸ், 1707 ஆம் ஆண்டு மே 23 ஆம் நாள், ஒரு பண்ணையில் பிறந்தார். ராஷல்ட் (Råshult) என அழைக்கப்பட்ட இது, தென் சுவீடனில் ஸ்மாலாந்து (Småland) மாகாணத்திலுள்ள Älmhult Municipality இல் அமைந்துள்ளது.

இவரது தந்தையார், மற்றும் தாய்வழிப் பாட்டனைப் போல இவரும் ஒரு தேவாலயக் குருவாவதற்காகவே வளர்க்கப்பட்டார். ஆனாலும் இவருக்கு அத்துறையில் நாட்டம் செல்லவில்லை. இவருக்குத் தாவரவியலில் இருந்த ஆர்வத்தைக் கண்ட இவரது ஊர்க்காரரான மருத்துவர் ஒருவரின் தூண்டுதலால் இவர் லுண்ட் பல்கலைக் கழகத்துக்கு சென்றார். ஓர் ஆண்டிற்குப் பின் உப்சாலா பல்கலைக் கழகத்துக்கு மாறினார். பூக்களிலுள்ள பாலுறுப்புக்கள் பற்றிய கட்டுரை ஒன்றால் கவரப்பட்ட இவர், அதே தலைப்பில் தானும் கட்டுரை ஒன்றை எழுதியதன் மூலம் தாவரவியற் பூங்காவில் பதவியொன்றைப் பெற்றார்.

1732 இல், அக்காலத்தில் அதிகம் அறியப்பட்டிராத லாப்லாந்து (Lapland) பற்றிய ஆய்வுப் பயணம் ஒன்றுக்கு உப்சாலா அறிவியல் அக்காடமி இவருக்கு பொருள் உதவி செய்தது.

மேற்கோள்கள் [தொகு]

  1. “Carl Linnaeus was born in Råshult, Småland, in 1707 on May 13th (Old Style) or 23rd according to our present calendar.” Citation: Linnaeus the child by Uppsala University. "Old Style" in the cited text refers to the Swedish calendar.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கரோலஸ்_லின்னேயஸ்&oldid=1342761" இருந்து மீள்விக்கப்பட்டது