எண் வகைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்களை அவற்றின் பண்புகளைக் கொண்டோ அல்லது அவை எழுதப்படும் விதங்களைக்கொண்டோ வகைப்படுத்தலாம்.

முக்கிய வகைகள்[தொகு]

எண்ணுவதற்குப் பயன்படுத்தப்படும் எண்களான {1, 2, 3, ...} என்பவை இயல் எண்கள் எனப்படுகின்றன. எனினும் 0 உட்பட்ட {0, 1, 2, 3, ...} ஆகிய எதிர்மமற்ற எண்களும் இயல் எண்கள் எனப்படுகின்றன. மேலும் 0 உள்ளிட்ட இயல் எண்கள், "முழுமை எண்கள்" (whole numbers) எனவும் அழைக்கப்படுகின்றன.[1][2]

பின்ன வடிவில் (பகுதி பூச்சியமற்ற முழு எண்ணாக இருக்க வேண்டும்) எழுதக்கூடிய எண்கள்.[3] அனைத்து முழு எண்களும் விகிதமுறு எண்கள்; இதன் மாற்றுக் கூற்று உண்மையில்லை. அனைத்து விகிதமுறு எண்களும் முழு எண்களல்ல. எ.கா: −2/9.

ஒரு கோட்டின் மீதமையும் ஒவ்வொரு புள்ளிக்கும் ஒத்த எண்கள். இவை நேர்மமாக அல்லது எதிர்மமாக அல்லது பூச்சியமாக இருக்கலாம். எல்லா விகிதமுறு எண்களும் மெய்யெண்களாக இருக்கும். ஆனால் இதன் மறுதலை உண்மையில்லை.

விகிதமுறு எண்களாக இல்லாத மெய்யெண்கள்

ஒரு மெய்யெண் மற்றும் −1 இன் வர்க்கமூலத்தின் பெருக்கற்பலனாக அமையும் எண்கள். எண் '0' மெய்யெண்ணாகவும் கற்பனை எண்ணாகவும் இருக்கும்.

மெய்யெண்கள், கற்பனை எண்கள், மெய் மற்றும் கற்பனை எண்களின் கூடுதலாகவும் வித்தியாசங்களாகவும் அமையும் எண்கள்.

  • மீச்சிக்கலெண்கள் (Hypercomplex numbers)

பல்வேறு எண் தொகுதிகளின் நீட்சிகளடங்கியது: நான்கன்கள் (), எண்மன்கள் (), மற்றும் பிற பொதுவற்ற வேறமைவுகள்.[4]

  • p-வழி எண்கள்:

மெய்யெண்களை உருவாக்கும்போது பயன்படுத்திய 'எல்லை' என்பதன் கருத்திலிருந்து வேறுபட்டு, விகிதமுறு எண்களின் எல்லைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பல்வேறு எண் முறைமைகள்

எண் உருவகிப்புகள்[தொகு]

குறியிட்ட எண்கள்[தொகு]

பூச்சியத்திற்குக் குறி கிடையாது (பூச்சியம் நேர்ம எண்ணோ அல்லது எதிர்ம எண்ணோ அல்ல) என்பதால், பூச்சியத்தை எடுத்துக்கொள்ளும்போது கீழ்வரும் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன:

  • எதிர்மமில்லா எண்கள்: பூச்சியத்திற்கு சமமான அல்லது பூச்சியத்தைவிடச் சிறிய மெய்யெண்கள்; எனவே ஒரு எதிர்மமில்லா எண்ணானது பூச்சியமாகவோ அல்லது நேர்ம எண்ணாகவோ இருக்கும்.
  • நேர்மமில்லா எண்கள்: பூச்சியத்திற்கு சமமான அல்லது பூச்சியத்தைவிடப் பெரிய மெய்யெண்கள்; எனவே ஒரு நேர்மமில்லா எண்ணானது பூச்சியமாகவோ அல்லது எதிர்ம எண்ணாகவோ இருக்கும்.

முழுஎண்களின் வகைகள்[தொகு]

  • இரட்டை மற்றும் ஒற்றை எண்கள்: ஒரு முழுஎண்ணானது 2 இன் மடங்காக இருந்தால் அது ஓர் இரட்டை எண்ணாகும். அவ்வாறில்லை எனில் அது ஒரு ஒற்றை எண்.
  • பகா எண்: அதே எண் மற்றும் '1' என இரண்டேயிரண்டு நேர்ம வகுஎண்களைக் கொண்ட நேர்ம எண்ணானது பகா எண் எனப்படும். பகா எண்கள் ஒரு முடிவுறா தொடர்வரிசையாக அமையும்: 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, ...
  • பகு எண்: ஒரு நேர்ம எண்ணை அதனைவிடச் சிறு நேர்ம எண்களின் பெருக்கற்பலனாக காரணிப்படுத்தக்கூடியதாக இருந்தால் அது பகு எண் எனப்படும். '1' ஐவிடப் பெரிய முழுஎண் ஒவ்வொன்றும் பகா எண்ணாகவோ அல்லது பகுஎண்ணாகவோ இருக்கும்.
  • பல்கோண எண்கள்: ஓர் ஒழுங்கு பல்கோணியின் வடிவில் புள்ளிகளைக் கொண்டு வடிவமைக்கூடிய நேர்ம எண்கள் பல்கோண எண்களாகும்.
பல்கோண எண்களுக்கு எடுத்துக்காட்டுகள்: முக்கோண எண்கள், வர்க்கங்கள், ஐங்கோண எண்கள், அறுகோண எண்கள், எழுகோண எண்கள், எண்கோண எண்கள், நவகோண எண்கள், தசகோண எண்கள், வடிவ எண்கள், பன்னிருகோண எண்.

இயற்கணித எண்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Weisstein, Eric W., "Natural Number", MathWorld.
  2. "natural number", Merriam-Webster.com, Merriam-Webster, பார்க்கப்பட்ட நாள் 4 October 2014
  3. W., Weisstein, Eric. "Rational Number". mathworld.wolfram.com.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Sedenions (), trigintaduonions (), tessarines, coquaternions, and biquaternions.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்_வகைகளின்_பட்டியல்&oldid=3819146" இலிருந்து மீள்விக்கப்பட்டது