இராஜீவ் காந்தி தேசிய தர விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜீவ் காந்தி தேசிய தர விருது
Rajiv Gandhi National Quality Award
விருது வழங்குவதற்கான காரணம்மொத்த தர மேலாண்மையின் கொள்கைகளைப் பயன்படுத்துவதில் சிறந்து விளங்கும் இந்திய வணிகங்களை அங்கீகரித்தல்
இதை வழங்குவோர்இந்திய தர நிர்ணய அமைவனம்
நாடுஇந்தியா
முதலில் வழங்கப்பட்டது1992
இணையதளம்www.bis.org.in/other/rgnqa_geninfo.htm

இராஜீவ் காந்தி தேசியத் தர விருது (Rajiv Gandhi National Quality Award) என்பது இந்தியத் தர நிர்ணய அமைவனம் சார்பாகச் செயல்திறனில் சிறந்து விளங்கும் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தேசியத் தர விருதாகும். இது இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் நினைவாகப் பெயரிடப்பட்டது. மேலும் இந்தவிருதானது இராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு 1991-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருது நுகர்வோருக்கு தரமான சேவைகளை மேம்படுத்துவதையும், இந்தியாவின் தரமான இயக்கத்திற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கும் நிறுவனங்களுக்குச் சிறப்பு அங்கீகாரத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.[1]

இந்த விருது நிதியாண்டின்படி ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மேலும் இது அமெரிக்காவின் மால்கம் பால்ட்ரிஜ் தேசிய தர விருது, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பியத் தர விருது மற்றும் சப்பானின் தெமிங் பரிசு போன்ற உலகளவில் உள்ள பிற தேசிய தர விருதுகளைப் போலவே வழங்கப்படும் சிறப்புக்குறியது.[1]

விருதுகள்[தொகு]

பெரிய அளவிலான உற்பத்தி, சிறிய அளவிலான உற்பத்தி, பெரிய அளவிலான சேவைத் துறை, சிறிய அளவிலான சேவைத் துறை மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்தவை என ஐந்து பரந்த பிரிவுகளின் கீழ் நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மேலும், உயிரித் தொழில்நுட்பம், வேதிப்பொருள்கள், மின்னணுவியல், உணவு மற்றும் மருந்துகள், உலோகம், ஜவுளி, அணிகலன், கல்வி, நிதி, சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு 14 பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.[1][2]

சான்றிதழ் மற்றும் விருதுகளைத் தவிர, ஒட்டுமொத்தமாகச் சிறப்பிடம் பெறுபவர் ரூபாய் 5,00,000 பணப் பரிசைப் பெறுகிறார். மற்ற நான்கு விருதுகளுக்கும் ரூபாய் 2,00,000 பரிசாக் கொண்டுள்ளன. பாராட்டுச் சான்றிதழானது ரூபாய் 1,00,000 நிதியினை ஊக்கத் தொகையைக் கொண்டுள்ளது.[1]

"ஒட்டுமொத்த சிறந்த விருது" வெற்றியாளர்கள் [3] [4] [5]
ஆண்டு பெறுபவர்
1991 – 92 கிர்லோஸ்கர் கம்மின்ஸ் லிமிடெட், புனே
1993 இந்திய உருக்கு ஆணையம், பிலாய்
1994 ஐடிசி லிமிடெட் ஐஎல்டிடீ பிரிவு சிராலா, ஆந்திரப்பிரதேசம்)
1995 ஐடிசி லிமிடெட் ஐஎல்டிடி பிரிவு, அனபர்ட்டி, ஆந்திரப்பிரதேசம்
1996 டாட்டா பேரிங்க்ஸ் (டாட்டா ஸ்டீல் பிரிவு), கரக்பூர், மேற்கு வங்கம்
1997 லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், பெங்களூர் வெடிமருந்து தொழிற்சாலை, காட்கி புனே, மகாராட்டிரா
1998 இந்தியன் நிறுவன லிமிடெட்டின் மதுரா சுத்திகரிப்பு நிலையம், மதுரா
1999 குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு லிமிடெட் (அமுல்), ஆனந்த்
டாடா கம்மின்ஸ் லிமிடெட், ஜாம்ஷெட்பூர்
2000 டாட்டா குழுமம் தேவாஸ்
2001 பிர்லா செல்லுலோசிக், பருச்
2002 (விருது இல்லை)
2003 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (குஜராத் சுத்திகரிப்பு நிலையம்), வதோதரா
கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (கெமிக்கல் பிரிவு), நாக்டா
2005 மோசர் பேர் இந்தியா லிமிடெட், கிரேட்டர் நொய்டா
2006 இந்திய உருக்கு ஆணையம், பிலாய்
2007 இந்திய உருக்கு ஆணையம் பொகாரோ
2008 சட்லுஜ் ஜல் வித்யுத் நிகாம் லிமிடெட், சிம்லா, இமாச்சல பிரதேசம்.
2009 டாட்டா மோட்டார்ஸ், லக்னோ, உத்தரப் பிரதேசம்
2010 விக்ரம் சிமென்ட் ஒர்க்ஸ் (அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட்டின் ஒரு அலகு), கோர், மத்தியப் பிரதேசம்
2011 டிஏவி ஏசிசி மூத்தோர் மேனிலை பொதுப் பள்ளி பர்மனா, இமாச்சல பிரதேசம்
2012 ரயில் சக்கர தொழிற்சாலை, யெலஹங்கா, பெங்களூர்
2013 நவ்ஜாத் பாஸ்கர்
2014 லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Bureau of Indian Standards. "Rajiv Gandhi National Quality Award". Bureau of Indian Standards. Archived from the original on 9 May 2015. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  2. Kakkar. Renaissance of HRM; Through Creativity and Quality. Laxmi Publications, Ltd.. https://books.google.com/books?id=UpUayZnpew8C&pg=PA89. 
  3. Shrawan (2013-05-29). "ANNEX IV: LIST OF AWARD WINNERS OF RAJIV GANDHI NATIONAL QUALITY AWARDS" (PDF). bis.org.in. New Delhi: Bureau of Indian Standards. பார்க்கப்பட்ட நாள் 2014-05-15.
  4. "RAJIV GANDHI NATIONAL QUALITY AWARD, 2011" (PDF). bis.org.in. பார்க்கப்பட்ட நாள் 15 May 2014.
  5. "RAJIV GANDHI NATIONAL QUALITY AWARD 2010" (PDF). apeda.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 May 2014.

வெளி இணைப்புகள்[தொகு]