அக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அக்கி வகைகள்
இந்நோய்கான தீநுண்மங்கள்

அக்கி (ஆங்கிலம்:Herpes) என்பது மனிதத்தோலின் மேல் தோன்றும் தீநுண்ம நோய் ஆகும். இது பலவகைப்படும். அவற்றுள் இயல்பான அக்கி, அக்கிப்புடை என்பவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இயல்பு அக்கி[தொகு]

இயல்பான அக்கி, மேற்தோலில் தோன்றக்கூடியது. இது தோன்றும் முன் நமைச்சலும், எரிச்சலும் உண்டாகும். இந்நேரத்திலேயே தோலின் மீது நைட்ரசு ஈதர் பூசி, இந்நோய் வராவண்ணம் தடுக்கும்வழக்கம் உள்ளது. நோய் தோன்றும் பாகம் சிவந்து காணப்படும்.பின்னர், விரைவில் கொப்புளங்கள் தோன்றும். பொதுவாக இது முகத்திலும், கன்னத்திலும்,மூக்கின் மேலும் வரும். மார்ச்சளி, வயிற்றுக் கோளாறுகள், நியுமோனியா, மலேரியா ஆகிய நோய்கள் பீடித்திருக்கும் போது இந்நோய் வரலாம்.அக்கி ஒருமுறை வந்தால், மீண்டும் பலமுறை வரும் இயல்புடையது ஆகும். ஆனால், அளவான மின்சாரத்தை உடலில் செலுத்தும் மின்மருத்துவம் செய்து மீண்டும் வராவண்ணமும் சில மருத்துவர்களால் கொடுக்கப்படுகிறது.

அக்கிப்புடை[தொகு]

அக்கிப்புடை (Herpes Zoster) என்ற இந்நோய் அக்கியை விடச் சிக்கலானது. இது தொற்றுநோயாகப் பரவக்கூடும். அதிகமான நரம்புவலிக்குப் பின் திடீரெனச் சிரங்கு தோன்றும். பல மாதங்கள் இந்த அக்கிப்புடை தோன்றிய இடத்தில் வலி இருக்கும். இந்நோய் வருவதற்கு முன் சிலருக்கு காய்ச்சல், உடற்சோர்வு வரும். இப்புடை ஒருமுறை வந்தால், மீண்டும் பல ஆண்டுகளுக்கு வருவதில்லை. நச்சு நீக்கும் பசைகளைத் தடவாமல் இருப்பது நல்லது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

ஊடகங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அக்கி&oldid=1657985" இருந்து மீள்விக்கப்பட்டது