உள்ளடக்கத்துக்குச் செல்

வாரிஸ் பஞ்சாப் தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாரிஸ் பஞ்சாப் தே
உருவாக்கம்29 செப்டம்பர் 2021; 3 ஆண்டுகள் முன்னர் (2021-09-29)
நிறுவனர்தீப் சிங் சித்து
வகைஅரசியல் குழு
தலைமையகம்
ஆட்சி மொழி
பஞ்சாபி மொழி
ஜதேதார்
அம்ரித்பால் சிங்
(2022 வரை)

வாரிஸ் பஞ்சாப் தே (Waris Punjab De, பொருள்: "பஞ்சாபின் வாரிசுகள்")[1][2] என்பது இந்தியாவின், பஞ்சாப்பை தளமாக கொண்ட சீக்கிய-தன்னார்வ அரசியல் குழு ஆகும். இது துவக்கத்தில் பஞ்சாபின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு அழுத்தக் குழுவாக இருந்தது.[3] பின்னர் இது காலிஸ்தானுக்கு ஆதரவான அரசியல் குழுவாக மாறியது.[4] 2022 பெப்ரவரியில் தீப் சிங் சித்து இறக்கும் வரை குழுவின் நிறுவனர்-தலைவராக இருந்தார்.[4] இதன் நிறுவனர் இறந்த பிறகு அம்ரித்பால் சிங் குழுவின் பொறுப்பை ஏற்றார்.[5]

வரலாறு

[தொகு]

உருவாக்கம்

[தொகு]

29 செப்டம்பர் 2021 அன்று, தீப் சித்து என்று அழைக்கப்படும் சந்தீப் சிங் சித்து, "பஞ்சாபின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் போராடுவதற்கும், சமூகப் பிரச்சினைகளை எழுப்புவதற்கும் ஒரு அழுத்தக் குழுவாக" வாரிஸ் பஞ்சாப் தேயை உருவாக்குவதாக அறிவித்தார்.[3][6][7] இதன் நிறுவனர் தலைமையில் 2020-2021 இந்திய விவசாயிகள் போராட்டத்தில் இந்த அமைப்பு பங்கு வகித்தது.[7] போராட்டங்களின் போது, ​​விவசாயிகளைத் திரட்டுவதற்காக நடிகரும் ஆர்வலருமான சித்துவால் நிறுவப்பட்ட வாரிஸ் பஞ்சாப் தேயில் அம்ரித்பால் சிங் இணைந்தார்.[8]

அமிர்த்பால் சிங்கின் பதவிக்காலம்

[தொகு]
அமிர்த்பால் சிங் சாந்துவின் ஒளிப்படம்

இந்த அமைப்பின் நிறுவனர் வாகன விபத்தில் மரணமடைந்ததை அடுத்து அம்ரித்பால் சிங் தலைவராக பொறுப்பேற்றார். தீப் சித்துவும் அம்ரித்பால் சிங்கும் நிஜ வாழ்க்கையில் சந்தித்ததில்லை என்றும் சமூக வலைதளங்களில் மட்டுமே உரையாடியதாகவும் கூறப்படுகிறது.[9] தீப் சித்துவின் குடும்பத்தினர், அம்ர்த்பால் சிங்கின் தலைமைப் பொறுப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.[10] அம்ரித்பால் சிங் தலைமைக்கு வந்த பிறகு, இந்த அமைப்பின் நோக்கம் "சீக்கிய சமயத்தின் கொள்கைகளைப் பின்பற்றுதல்" மற்றும் "கல்சா இராஜ்ஜியத்தை நிறுவுதல்" ஆகிய நோக்கங்களை நோக்கி நகர்ந்துள்ளது.[11] இந்த அமைப்பு 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஷிரோமணி அகாலி தளத்தை (அமிர்தசரஸ்) ஆதரித்தது.[12] 2022 நவம்பரில் பஞ்சாப் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணங்கள் மூலம் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் வரதட்சணை போன்ற நடைமுறைகளை கண்டித்தும், சீக்கியர்களை அம்ரித் சன்ஸ்கார் சடங்கு விழாவை கால்சா வரிசையில் நடத்துவதற்கு ஒரு இயக்கத்தைத் தொடங்கியது. 23 பிப்ரவரி 2023 அன்று, பஞ்சாபின் அஜ்னாலாவில் இக்குழுவின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதலின் போது சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பின் பிரதியை எடுத்துச் சென்றதற்காக குழு விமர்சிக்கப்பட்டது, சிலர் அதை "கேடயமாக" பயன்படுத்தியதாக வாதிட்டனர்.[13] இந்த அமைப்புக்கு பாகிஸ்தானின் ஐ. எஸ். ஐ. நிதியுதவி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.[14]

18 மார்ச் 2023 அன்று, அம்ரித்பால் சிங் மீது கொலை முயற்சி, சட்ட அமலாக்கத்திற்கு இடையூறு செய்தல், சமூகத்தில் "ஒழுக்கமின்மையை" ஏற்படுத்தியது போன்ற கற்றச்சாட்டுகளை காவல்துறை எழுப்பியதைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகள் அம்ரித்பால் சிங்தைத் தேடத் துவங்கினர்.[15] இந்த வேட்டையின் போது, ​​இந்திய அதிகாரிகள் ஆயிரக்கணக்கான துணை ராணுவப் போலீஸாரை நியமித்தனர். மேலும் பஞ்சாப் மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்களுக்கு இணையம் மற்றும் செல்லிடைப்பேசி செய்தி சேவைகளை கட்டுப்படுத்தினர்.[15]

இந்திய அதிகாரிகள் 200க்கும் மேற்பட்டோரை இச்சமயத்தில் கைது செய்தனர்.[16][17][18] இதற்கிடையில், அம்ரித்பால் சிங் எங்கும் காணப்படவில்லை.[19] ஒரு மாதத்திற்கு பிறகு, 23 ஏப்ரல் 2023 அன்று, அம்ரித்பால் சிங் பஞ்சாபின், மோகா மாவட்டம், ரோட் கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் அசாம் மாநிலத்தில் உள்ள உயர் பாதுகாப்புக்கு திப்ருகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.[20]

தலைவர்கள்

[தொகு]
வரிசை எண் பெயர் உருவப்படம் கால தொடக்கம் கால முடிவு பணிக்காலம்
1. தீப் சிங் சித்து செப்டம்பர் 2021 15 பிப்ரவரி 2022  138 நாட்கள்
2. அம்ரித்பால் சிங் 29 செப்டம்பர் 2022 பதவியில்  1 ஆண்டு, 249 நாட்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Explained: What is Waris Punjab De and why has its rise set alarm bells ringing?". The Hindu. 3 March 2023 இம் மூலத்தில் இருந்து 25 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230325073809/https://www.thehindu.com/news/national/waris-punjab-de-punjab-amritpal-singh/article66567088.ece/amp/. 
  2. "Waris Punjab De: What is the mission of this outfit". The Indian Express. 24 February 2023 இம் மூலத்தில் இருந்து 25 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230325073809/https://indianexpress.com/article/explained/waris-punjab-de-deep-sidhu-amritpal-singh-8464095/lite/. 
  3. 3.0 3.1 Goyal, Divya (2023-02-24). "Waris Punjab De: What is the mission of this outfit, floated by Deep Sidhu and now led by Amritpal Singh?". The Indian Express (in ஆங்கிலம்). Archived from the original on 25 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
  4. 4.0 4.1 "Is Sikh Militancy Returning to India's Punjab State?". The Diplomat. 28 February 2023 இம் மூலத்தில் இருந்து 25 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230325073810/https://thediplomat.com/2023/02/is-sikh-militancy-returning-to-indias-punjab-state/. 
  5. "What is Waris Punjab De group, Khalistan sympathiser Amritpal Singh's outfit?". Deccan Herald. 20 March 2023 இம் மூலத்தில் இருந்து 25 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230325073810/https://www.deccanherald.com/amp/national/what-is-waris-punjab-de-group-khalistan-sympathiser-amritpal-singhs-outfit-1201915.html. 
  6. Sharma, Anu (30 September 2021). "'Waris Punjab De' Social organisation to fight for legitimate demands of people of Punjab". Chandigarh City News இம் மூலத்தில் இருந்து 9 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221109011600/https://www.chandigarhcitynews.com/waris-punjab-de-social-organisation-to-fight-for-legitimate-demands-of-people-of-punjab/. 
  7. 7.0 7.1 "Amritpal Singh's 'predecessor', who was Waris Punjab De founder Deep Sidhu?". The Indian Express (in ஆங்கிலம்). 2023-02-24. Archived from the original on 2023-03-19. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  8. "India's Manhunt for a Hardline Sikh Leader Leads to Internet Shutdowns and Global Protests". Time. 23 March 2023. Archived from the original on 24 March 2023. பார்க்கப்பட்ட நாள் 25 March 2023.
  9. Menon, Aditya (2022-10-06). "Amritpal Singh: How a 29-Year-Old From Dubai Rose Dramatically in Sikh Politics". TheQuint (in ஆங்கிலம்). Archived from the original on 2022-11-09. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  10. "Unaware how Amritpal Singh declared himself head of 'Waris Punjab De', says Deep Sidhu's kin". Financialexpress (in ஆங்கிலம்). Archived from the original on 2023-03-19. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  11. Goyal, Divya (2023-02-24). "Waris Punjab De: What is the mission of this outfit, floated by Deep Sidhu and now led by Amritpal Singh?". The Indian Express (in ஆங்கிலம்). Archived from the original on 25 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
  12. "Amritpal Singh Controversy: Much Ado About Very Little". NewsClick (in ஆங்கிலம்). 2023-03-23. Archived from the original on 2023-03-27. பார்க்கப்பட்ட நாள் 2023-03-27.
  13. ""Those Who Took Guru Granth Sahib...": Bhagwant Mann On Amritsar Rampage". NDTV.com. Archived from the original on 2023-03-01. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  14. "Does Pakistan's ISI have a role in Khalistan propagator Amritpal Singh's rise in Punjab?". Firstpost (in ஆங்கிலம்). 2023-02-28. Archived from the original on 2023-03-01. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  15. 15.0 15.1 "Khalistan: The outlawed Sikh separatist movement that has Indian authorities on edge". CNN. 22 March 2023 இம் மூலத்தில் இருந்து 23 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230323121949/https://amp.cnn.com/cnn/2023/03/22/india/india-separatist-khalistan-movement-explainer-intl-hnk/index.html. 
  16. Lawler, Dave (23 March 2023). "Manhunt for Sikh separatist in India stirs up old fears" (in en). Axios. https://www.axios.com/2023/03/23/amirtpal-singh-manhunt-india-sikh-separtist. 
  17. "India arrests more than 100 people in manhunt for Sikh separatist" (in en). www.aljazeera.com. 20 March 2023. https://www.aljazeera.com/news/2023/3/20/india-arrests-more-than-100-people-in-manhunt-for-sikh-separatist. 
  18. "Manhunt for fugitive Sikh separatist puts India's Punjab on edge". Financial Times. 4 April 2023. https://www.ft.com/content/1e11a2f2-78c3-41be-ae34-1de5f226a60d. 
  19. "India Cuts Off Internet to 27 Million People to Catch One Man" (in en). www.vice.com. 22 March 2023. https://www.vice.com/en/article/ak3z4e/amritpal-singh-india-khalistan-sikh-punjab. 
  20. "Amritpal Singh: Sikh separatist arrested after weeks on the run". BBC News. 23 April 2023. https://www.bbc.com/news/world-asia-india-65063620. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரிஸ்_பஞ்சாப்_தே&oldid=3997063" இலிருந்து மீள்விக்கப்பட்டது