உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் வரதட்சணை முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் வரதட்சணை முறை (Dowry system in India) [1] மணமகளின் குடும்பம், அவரது பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் திருமணத்திற்காக, பணம் மற்றும் அசையா அல்லது அசையும் சொத்துக்களை மணமகன் வீட்டிற்குக் கொடுப்பதனைக் குறிக்கிறது.[2] வரதட்சணை என்பது அடிப்படையில் பணம் அல்லது மணமகனுக்கு அல்லது அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் சில வகையான பரிசுகள் மற்றும் பணம், நகைகள், மின் உபகரணங்கள், தளபாடங்கள், படுக்கை, மட்பாண்டங்கள், பாத்திரங்கள், வாகனங்கள் மற்றும் பிற வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவைகளைக் கொடுப்பதனையும் உள்ளடக்கியதாகும். புதுமணத் தம்பதிகள் தங்கள இல்லற வாழ்க்கையினைத் துவங்க இது வழிவகுக்கிறது.[3] வரதட்சணை என்பது அரபியில் தகெஸ் என அறியப்படுகிறது.[4] இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் வரதட்சணை ஆவுன்பாட் என்று அழைக்கப்படுகிறது. 

வரதட்சணை முறை மணமகளின் குடும்பத்திற்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. [5] சில சந்தர்ப்பங்களில், வரதட்சணை முறை பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது, உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் காயம் முதல் இறப்புகள் வரையிலான பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு இது காரணமாக அமைகின்றது. [6] நீண்ட காலமாக வரதட்சணை கொடுப்பது என்பது இந்திய தண்டனைச் சட்டம் 1961 பிரிவு 304B மற்றும் 498 A ஆகியவற்றின்படி தண்டனைக்குரிய செயலாக பார்க்கப்படுகிறது.[7] வரதட்சணை தடைச் சட்டம் வரதட்சணை என்பதனை பின்வருமாறு வரையறை செய்கிறது."வரதட்சணை என்பது நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ திருமணத்திற்காக ஒரு தரப்பில் இருந்து மற்றொரு தரப்பிற்கு , இருவீட்டார்களது பெற்றோர்களோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ எந்தவொரு சொத்து அல்லது மதிப்புமிக்க பொருட்களை கொடுக்கவோ அல்லது கொடுப்பதாக ஒப்புக்கொள்ளப்படுவதோ ஆகும். [8]

வரதட்சணைத் தடைச் சட்டம், 1961 ன் பிரிவு 3 ஆனது எந்த வித நிபந்தனையும் இல்லாத போது திருமணத்தின் போது ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினருக்கு வரதட்ணையானது கொடுக்கவோ அல்லது பெறப்பட்டாலோ அததகைய சமயங்களில் மணமகன் அல்லது மணமகள் மீது இந்தத் தண்டனைச் சட்டம் பொருந்தாது எனக் குறிப்பிடுகிறது.[9]

வரதட்சணைக்கு எதிரான இந்திய சட்டங்கள் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்தாலும், அவை பயனற்றவையாகவே உள்ளது என்று பரவலாக விமர்சிக்கப்படுகின்றன. [10] வரதட்சணை காரணத்தினால் பல பகுதிகளில் நடைபெறும் கொலைகள், இந்த சட்டம் விமர்சனத்திற்கு உள்ளாவதற்கான முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. [11]

வரதட்சணை கொடுமை குறித்து மனைவி புகார் செய்தால், மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498 ஏ குறிப்பிடுகிறது. இந்த சட்டம் பரவலாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டது, மேலும் 2014 ல், உச்சநீதிமன்றம் இந்த புகார்கள் மீது ஒரு குற்றவியல் நடுவர் அனுமதியின்றி கைது செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது. [12]

வரலாற்று சூழல்[தொகு]

திருமண ஊர்வலம்- பரிசுகளுடன் ஒரு விதானத்தின் கீழ் மணமகள். ((1800).

மைக்கேல் விட்செல் என்பவர் பண்டைய இந்திய இலக்கியம் வேத காலத்தில் வரதட்சணை நடைமுறைகள் குறிப்பிடத்தகுந்த அளவில் இல்லை என்று கூறுகிறார். [13] பண்டைய இந்தியாவில் பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்கப்பட்டதாகவும், பெற்றோர்கள் தாங்களாகவே வழங்கியதாகவும் அல்லது ஆண் பிள்ளைகள் இல்லாத சமயத்தில் பெண் பிள்ளைகளுக்கு சொத்தில் உரிமை வழங்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

மேக்டொனெல் மற்றும் கீத்தின் கூற்றும் விட்செல்லின் கருத்தோடு ஒத்துப்போகிறது, ஆனால் தம்பியாவின் கருத்துக்களில் இருந்து வேறுபடுகின்றன;அவர்கள் பிரம்மாவின் திருமணத்தில் கூட வரதட்சணை கொடுக்கப்பட்டதாக பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன எனக் கூறினர். பண்டைய இந்தியாவில் பெண்களுக்கான சொத்து உரிமைகள் வழங்கப்படுவது அதிகமாக இருந்ததாக , மேக்டொனெல் மற்றும் கீத் ஆகியோர் பரிந்துரைக்கின்றனர். [14]

சான்றுகள்[தொகு]

 1. "- Moneycontrol.com". 8 March 2007. Archived from the original on 11 January 2012.
 2. Rani Jethmalani & P.K. Dey (1995). Dowry Deaths and Access to Justice in Kali's Yug: Empowerment, Law and Dowry Deaths. pp. 36, 38.
 3. Paras Diwan and Peeyushi Diwan (1997). Law Relating to Dowry, Dowry Deaths, Bride Burning, Rape, and Related Offences. Delhi: Universal Law Pub. Co. pp. 10.
 4. Waheed, Abdul (February 2009). "Dowry among Indian muslims: ideals and practices". Indian Journal of Gender Studies 16 (1): 47–75. doi:10.1177/097152150801600103. 
 5. Anderson, Siwan (2007). "The Economics of Dowry and Brideprice". The Journal of Economic Perspectives 21 (4): 151–174. doi:10.1257/jep.21.4.151. https://archive.org/details/sim_journal-of-economic-perspectives_fall-2007_21_4/page/151. 
 6. Anita Rao and Svetlana Sandra Correya (2011). Leading Cases on Dowry. New Delhi: New Delhi: Human Rights Law Network.
 7. Rao (2019). INDIAN SOCIAL PROBLEMS. S.Chand.
 8. "The Dowry Prohibition Act, 1961". Archived from the original on 27 January 2021.
 9. Manchandia, Purna (2005). "Practical Steps towards Eliminating Dowry and Bride-Burning in India". Tul. J. Int'l & Comp. L. 13: 305–319. 
 10. Spatz, Melissa (1991). "A "Lesser" Crime: A Comparative Study of Legal Defenses for Men Who Kill Their Wives". Colum. J. L. & Soc. Probs. 24: 597, 612. 
 11. "No arrests under anti-dowry law without magistrate's nod: SC". The Times of India. Archived from the original on 7 July 2014.
 12. Witzel, Michael. "Little Dowry, No Sati: The Lot of Women in the Vedic Period." Journal of South Asia Women Studies 2, no. 4 (1996).
 13. MacDonell, Arthur and Keith, Arthur. Vedic Index: Names and Subjects, Indian Text Series (John Murray, London, 1912), Volume 1:482-485 ページ出版