அம்ரித்பால் சிங்
அம்ரித்பால் சிங் | |
---|---|
2022ல் அம்ரித்பால் சிங் | |
பஞ்சாபின் வாரிசுகள் இயக்கத்தின் 2வது தலைவர் | |
முன்னையவர் | தீப் சிங் சித்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1993 ஜல்லுப்பூர் கைரா, அமிர்தசரஸ் மாவட்டம், பஞ்சாப், இந்தியா[1] |
அறியப்படுவது | காலிஸ்தான் இயக்கம் |
அம்ரித்பால் சிங் சாந்து (Amritpal Singh Sandhu) (பிறப்பு: 1993) பஞ்சாப் பிரிவினையைக் கோரும் காலிஸ்தான் இயக்கத்தை தீவிரமாக ஆதரிக்கும் சீக்கியர் ஆவார்.[2][3][4][5] மேலும் தன்னைத்தானே சீக்கிய மதகுருவாக அறிவித்தக் கொண்டவரும்,[5][6][6][7][7][8] அரசியல்வாதியும் ஆவார். இவர் அவர் 2024 முதல் கதூர் சாகிப் நாடாளுமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.[9][10][11]
இவர் பிரிவினை இயக்கமான காலிஸ்தான் இயக்கத்தை ஆதரிக்கும் பஞ்சாபின் வாரிசுகள் இயக்கத்தின் தலைவர் ஆவார்.[1] செப்டம்பர் 2022ல் இவர் துபாய் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய பிறகு, பிப்ரவரி 2022ல் வாகன விபத்தில் இறந்த நடிகரும், பஞ்சாப் வாரிஸ் தே-யின் குழுவின் தலைவருமான தீப் சிங் சித்துவிற்கு பதிலாக வாரிஸ் பஞ்சாப் தே இயக்கத்தின் தலைமைப் பதவியை 4 மார்ச் 2022 அன்று ஏற்றார்.[12][13]
செயற்பாடுகள்
[தொகு]25 செப்டம்பர் 2022 அன்று அனந்த்பூர் சாஹிப் நடைபெற்ற பெரிய அளவிலான கூட்டத்தில் அம்ரித்பால் சிங் தனது முதல் சொற்பொழிவை ஆற்றி தனது இருப்பை சீக்கியர்களிடத்தில் வெளிப்படுத்திக் கொண்டார். பின்னர் அமிர்தசரஸ் நகரத்திலிருந்து பஞ்சாப் முழுவதும் தனது இயக்கச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.[14]
சர்ச்சைகள்
[தொகு]அக்டோபர் 2022ல் அம்ரித்பால் சிங் யேசு கிறிஸ்து பேசிய பேச்சு சர்ச்சைக்கு இடமானது.[15][16][17] அம்ரித்பால் சிங் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்றும், பஞ்சாப் மற்றும் விவசாயம் குறித்து ஏதும் அறியாதவர் என்றும் பாரதிய கிசான் ஒன்றியத்தின் தலைவர் ஜோகிந்தர் சிங் உக்கிரகான் குற்றம் சாட்டினார். மேலும் அம்ரித்பால் சிங் தன்னை பகத் சிங்குடன் தொடர்புறுத்தி பேசிக்கொண்டார்.
2 அக்டோபர் 2022 அன்று சிவ சேனா தலைவர் தாக்கரே, பிந்தரன்வாலா போன்று பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அம்ரித்பால் சிங் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.[18] காலிஸ்தான் பிரிவினை பேச்சிற்காக 7 அக்டோபர் 2022 அன்று அம்ரித்பால் சிங்கின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.[12] அம்ரித்பால் சிங்கின் பிரிவினைவாத நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு பஞ்சாப் மாநில அரசை இந்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.[19] டிசம்பர் 2022ல் சிங்கின் இன்ஸ்டாகிரம் உலகம் முழுவதுமாக முடக்கப்பட்டது.[20]
பிப்ரவரி 2023 இறுதியில் சிங்கின் கூட்டாளியான லவ்பிரீத் சிங்கை அஜ்னலா காவல் நிலைய அதிகாரிகள் கைது அடைத்து வைத்திருந்தனர். இதனால் சிங்கின் ஆதரவாளர்கள் கத்தி, ஈட்டி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் காவல்துறையினரை மிரட்டி லவ்பிரீத்தை விடுவித்தனர். மேலும் காவல்துறையினர் லவ்பிரீத் சிங்கை தவறுதலாக கைது செய்தற்காக அம்ரித்பால் சிங் ஆதராவளர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.[21][22]
கைது
[தொகு]தனி நாடு கோரும் காலிஸ்தான் இயக்க ஆதரவாளரான அம்ரித்பால் சிங்கை 23 ஏப்ரல் 2023 அன்று காவல்துறையினர் மோகா மாவட்டத்திலுள்ள் ரோட் கிராமத்தில் வைத்து கைது செய்ததும், பட்டிண்டா விமானப்படை தளத்திற்கு அழைத்துச் சென்று, பின்னர் அங்கிருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகார் நகரத்திற்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.[23][24]
நடிகர் தீப் சித்துவால் தொடங்கப்பட்ட பஞ்சாபின் வாரிசுகள் இயக்கத்தின் தலைமை பொறுப்பில் அம்ரித்பால் சிங் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Menon, Aditya (6 October 2022). "Amritpal Singh: How a 29-Year-Old From Dubai Rose Dramatically in Sikh Politics". The Quint. https://www.thequint.com/news/india/amritpal-singh-waris-punjab-de-sikhs-deep-sidhu-aap-bjp.
- ↑ Amritpal Singh: The self-styled preacher raising fears in India's Punjab
- ↑ Amritpal Singh Sandhu: Punjab in panthic ferment
- ↑ "'Bhindranwale 2.0': Radical Khalistan Sympathiser Amritpal Singh Active In Punjab". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
Often escorted by armed supporters and donning a flowing white 'chola' and a navy-blue turban, radical preacher and Khalistan sympathiser Amritpal Singh has been very active for some time in Punjab.
- ↑ 5.0 5.1 Sethi, Chitleen K. (2023-02-23). "Radical activist Amritpal storms Ajnala police station with supporters, secures aide's release". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
- ↑ 6.0 6.1 Vasudeva, Vikas (2023-02-23). "Pro-Khalistan leader Amritpal Singh’s supporters attack police in Punjab’s Ajnala" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/pro-khalistan-leader-amritpal-singhs-supporters-attack-police-in-punjabs-ajnala/article66545817.ece. "Armed with swords, guns and sharp weapons, scores of supporters of the self-styled Sikh preacher and pro-Khalistan (sovereign state for Sikhs) propagator Amritpal Singh on Thursday indulged in a scuffle with Punjab police personnel, injuring a few in Amritsar’s Ajnala."
- ↑ 7.0 7.1 "Bhindranwale 2.0: Who is Khalistani separatist leader Amrit Pal Singh?". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
The self-styled chief of the separatist Khalistani pressure group - 'Waris Punjab De', Amrit Pal Singh, is trying to establish himself as Jarnail Singh Bhindranwale 2.0.
- ↑ "As Amritpal Singh's followers run amok, a brief history of the Khalistan movement". The Indian Express (in ஆங்கிலம்). 2023-02-24. பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
Openly pushing the separatist idea of Khalistan, Amritpal challenges the theory of nationalism, and draws parallels between the idea of Sikh sovereignty and Hindu Rashtra. He even dresses like Jarnail Singh Bhindranwale, calling him his "inspiration".
- ↑ "Amritsar unrest: Who are 'Waris Punjab De' Lovepreet Toofan and Amritpal Singh?". Livemint. 24 February 2023 இம் மூலத்தில் இருந்து 2 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230302103824/https://www.livemint.com/news/india/amritsar-unrest-who-are-waris-punjab-de-lovepreet-toofan-and-amritpal-singh-11677228458047.html. "Bhai Amritpal Singh Sandhu, who was born on 17 January 1993, is the second leader of the Punjabi-centric social organisation, Waris Panjab De."
- ↑ "Jailed Khalistani preacher Amritpal Singh wins from Punjab's Khadoor Sahib seat". Firstpost (in அமெரிக்க ஆங்கிலம்). 4 June 2024. பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.
- ↑ "Jailed Khalistani Leader Amritpal Singh Wins Khadoor Sahib, Sarabjeet Khalsa Leading in Faridkot". News18 (in ஆங்கிலம்). 4 June 2024. பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.
- ↑ 12.0 12.1 "Preacher, 'influencer', ideologue: Meet Amritpal Singh, head of Waris Punjab De". 8 October 2022. https://indianexpress.com/article/cities/amritsar/preacher-influencer-ideologue-meet-amritpal-singh-8196944/.
- ↑ "Deep Sidhu, actor-activist accused in Red Fort violence, dies in car crash". The Indian Express. 15 February 2022. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
-Menon, Aditya (15 February 2022). "Deep Sidhu Dies in Accident: He Wanted Farmers Protest To Lead to Larger Change". TheQuint. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022. - ↑ "What Explains Amritpal Singh's Mystifying Rise as the New Poster Boy of Radical Sikh Politics?". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
- ↑ "Christians demand arrest of Sikh activist Amritpal Singh, lodge protest at Jalandhar's PAP Chowk". Tribune News Service.
- ↑ "Members of Christian community hold four-hour protest in Jalandhar". Hindustan Times. 17 October 2022.
- ↑ "Christians protest against Sikh 'preacher' Amritpal Singh for 'hurting religious sentiments', urge govt to book him". The Indian Express. 18 October 2022.
- ↑ "Govt must arrest radical speaker Amritpal Singh, demands Shiv Sena". Tribune News Service.
- ↑ "Amritpal Singh Twitter account suspended: Is government planning some big move against the Waris Punjab De Chief?". True Scoop News.
- ↑ "Amritpal Singh’s Instagram Suspended By The Government, Details Inside". Dariya News. 28 December 2022. https://www.5dariyanews.com/news/398903-Amritpal-Singhs-Instagram-Suspended-By-The-Government-Details-Inside.
- ↑ 'நான் இந்தியன் இல்லை' - இந்தியாவுக்கு அச்சத்தை விளைவிக்கும் இந்த மத போதகர் யார்?
- ↑ Waris Punjab De: What is the mission of this outfit, floated by Deep Sidhu and now led by Amritpal Singh?
- ↑ காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது: அசாம் சிறையில் அடைப்பு
- ↑ 'காலிஸ்தான்' அம்ரித்பால் சிங் கைது