லியம் பிளன்கட்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | லியம் பிளன்கட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 3 அங் (1.91 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 628) | நவம்பர் 29 2005 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சூன் 7 2007 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 190) | திசம்பர் 10 2005 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | சூலை 7 2007 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 24 2009 |
லியம் எட்வர்டு பிளன்கட் (Liam edward Plunkett,[1] பிறப்பு: ஏப்ரல் 6 1985, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இங்கிலாந்து அனிக்காக விளையாடியுள்ளார்.மேலும் 155 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 184ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூர்ப் போட்டிகளில் இவர் தர்ஹாம் அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் அதிக இலக்குகளைக் கைப்பற்றினார். இதனால் நவம்பர்-டிசம்பர், 2005 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அனிக்கு எதிரான தொடரில் இவருக்கு இடம் கிடைத்தது. அந்தத் தொடரில் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டு முதல் 2007 வரை இவர் இங்கிலாந்து அணிக்காக 9 தேர்வுத் துடுப்பாட்டங்கள் மற்றும் 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.
சர்வதேச போட்டிகள்
[தொகு]நவம்பர்-டிசம்பர், 2005 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அனிக்கு எதிரான தொடரில் இவருக்கு இடம் கிடைத்தது. சைமன் ஜோன்ஸ்க்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைத்தது. லாகூரில் நடைபெற்ற மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 125 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். ஆட்டத்தின் முதல் பகுதியில் 51 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்தார்.இரண்டாவது பகுதியில் 6 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் சுஐப் அக்தரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி வெற்றி பெற்றது.[2]
டிசம்பர் 10, 2005 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 9 ஓவர்கள் பந்துவீசி 51 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சு சராசரி 5.66 ஆகும். மேலும் சுஐப் அக்தரை ரன் அவுட் ஆக்கினார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.[3] இரண்டாவது போட்டியில் அணியின் மொத்த ஓட்டங்கள் 130/8 என இருந்தபோது இவர் களம் இறங்கினார். இவரும் விக்ரம் சொலன்கியும் இணைந்து 9 ஆவது இணைக்கு 100 ஓட்டங்கள் சேர்த்து அணியின் மொத்த ஓட்டங்கள் 231 ஆவதற்கு உதவினர். இந்தப் போட்டியில் இவர் 63 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் பந்துவீச்சில் காம்ரான் அக்மலின் இலக்கினைக் கைப்பற்றினார்.[4]
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரின் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 29* ஓட்டங்கள் எடுத்தார். மேலும் பந்துவீச்சில் 43 ஓட்டங்கள் கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். மேலும் கனடா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 46 ஓட்டங்கள் கொடுத்து 2 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் சிறப்பாகச் செயல்படவில்லை. இந்தப் போட்டியில் இவர் 7 ஓவர்கள் வீசி 71 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 இலக்கினை மட்டுமே கைப்பற்றினார். இருந்த போதிலும் இங்கிலாந்து அணி 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 இலக்குகள்
[தொகு]# | செயல்பாடு | போட்டி | எதிரணி | மைதானம் | நகரம் | நாடு | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|
1 | 5/64 | 11 | இலங்கை | எடிங்லி துடுப்பாட்ட அரங்கம் | லீட்சு | இங்கிலாந்து | 2014 |
சான்றுகள்
[தொகு]- ↑ "Liam Plunkett", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-20
- ↑ "3rd Test, England tour of Pakistan at Lahore, Nov 29-Dec 3 2005 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-20
- ↑ "1st ODI (D/N), England tour of Pakistan at Lahore, Dec 10 2005 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-20
- ↑ "Player v Player Statistics". Usa.cricinfo.com. 12 December 2005. பார்க்கப்பட்ட நாள் 24 November 2012.