மெர்க்குரி (தொன்மவியல்)
Appearance
மெர்க்குரி | |
---|---|
பிரான்சின் உயிசு அருகே கண்டெடுக்கப்பட்ட மெர்க்குரியின் பண்டை உரோமை காலச் சிலை (பிரித்தானிய அருங்காட்சியகம்) | |
அதிபதி | நிதி இலாபம், வணிகம், சொற்றிறம் (கவிதை), செய்தி/தொடர்பாடல், பயணிகள், எல்லைகள், அதிட்டம், ஏமாற்று மற்றும் திருடர்களின் கடவுள்[1][2] |
துணை | இலருண்டா |
பெற்றோர்கள் | மையா, ஜூபிடர் |
குழந்தைகள் | இலாரெசு |
மெர்க்குரி (Mercury) உரோமை தொன்மவியலில் வணிகம், வணிகர்கள், திருடர்கள், பயணிகளுக்கான கடவுள் ஆகும். இவர் மற்ற கடவுள்களின் தூதராகவும் கருதப்பட்டார். பெரும்பாலும் சிறகுள்ள காலணிகளை அணிந்தவராகவும் இரண்டு பாம்புகள் சூழ்ந்த கம்பை வைத்திருப்பவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். இறந்த ஆவிகளுக்கு பாதாள உலகத்திற்கான வழி காட்டினார்.