முதலாம் நந்திவர்மன்
Appearance
பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலப் பல்லவர்கள் | |
பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
விசய கந்தவர்மன் | |
புத்தவர்மன் | |
விட்ணுகோபன் I | |
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு | |
குமாரவிட்ணு I | |
கந்தவர்மன் I | |
வீரவர்மன் | |
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436 | |
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477 | |
கந்தவர்மன் III | |
நந்திவர்மன் I | |
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம் | |
விட்ணுகோபன் II | |
சிம்மவர்மன் II | |
விட்ணுகோபன் III | |
பிற்காலப் பல்லவர்கள் | |
சிம்மவர்மன் III | |
சிம்மவிட்டுணு | பொ. யு. 556 - 590 |
மகேந்திரவர்மன் I | பொ. யு. 590 - 630 |
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | பொ. யு. 630 - 668 |
மகேந்திரவர்மன் II | பொ. யு. 668 - 669 |
பரமேசுவரவர்மன் | பொ. யு. 669 - 690 |
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) | பொ. யு. 690 - 725 |
பரமேசுவரவர்மன் II | பொ. யு. 725 - 731 |
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | பொ. யு. 731 - 796 |
தந்திவர்மன் | பொ. யு. 775 - 825 |
நந்திவர்மன் III | பொ. யு. 825 - 850 |
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | பொ. யு. 850 - 882 |
கம்பவர்மன் (வட பகுதி) | பொ. யு. 850 - 882 |
அபராசிதவர்மன் | பொ. யு. 882 - 901 |
தொகு |
முதலாம் நந்திவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.
காலம்
[தொகு]இவனது தந்தையான மூன்றாம் கந்தவர்மன் காலம் கி.பி. 460-475 என்பதாலும், விட்ணுகோபன் ஈறான அரசர் பலர் இறந்தபின் பிறந்தவன்: சிவபிரான் அருளால் வன்மை மிக்க நாக அரசனை நடனம் செய்வித்தான் என்று ஐந்தாம் நூற்றாண்டு பட்டயம் கூறுவதாலும் இவனது காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியில் அமைந்தது எனக் கொள்ளலாம்.[1]
நாக அரசன்
[தொகு]தென்னிந்தியாவில் சூட்டுநாகர், கதம்பர், சாளுக்கியர் ஆகியவர்களே தங்களை நாகர்கள் எனக்கூறினர்.[2] இவர்களில் சூட்டுநாகர் இந்த நந்திவர்மன் காலத்தில் மறைந்துவிட்டனர். இரவிவர்மனுக்குப் பின் வந்த கதம்பர் போர் செய்ததாக குறிப்புகள் இல்லை. அதனால் அக்காலத்தில் அதிகம் போரிடுவர்களாக அறியப்படும் சாளுக்கியர்களில் ஜெயசிம்மன் அல்லது இரணதீரனே அந்த நாக அரசனாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.