உள்ளடக்கத்துக்குச் செல்

மாலைத்தீவுகள் நாட்டுப்பண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவ்மீ சலாம்

ஆங்கிலம்: National Salute
ޤައުމީ ސަލާމް
மாலத்தீவுகளின் சின்னம்

 மாலைத்தீவுகள் தேசியம் கீதம்
இயற்றியவர்முகமது ஜமீல் தீதி, 1948
இசைடபிள்யூ. டி. அமரதேவ, 1972
இசை மாதிரி
கவ்மீ சலாம் (இசைக்கருவியில்)

கவ்மீ சலாம்Qaumii Salaam ) (திவெயி: ޤައުމީ ސަލާމް; National Salute) என்பது மாலைத்தீவிகளின் நாட்டுப்பண் ஆகும். இதன் வரிகள் முகமது ஜமீல் தீதி என்பவரால் 1948 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இதன் மெல்லிசையை அமைத்தவர் இலங்கையைச் சேர்ந்த இசை மேதை பண்டிதர் டபிள்யூ. டி. அமரதேவ[1] 1972 இல் இசையமைத்தார்.[2]

வரலாறு

[தொகு]

1948க்கு முன்பு வரிகளற்று வெற்று இசையே நாட்டுப்பண்ணாக மாலைத்தீவில் இசைக்கப்பட்டது. சலாமாதி ராஜாங்க இசைக்குழுவால் அரசு விழாக்களின்போது மட்டும் கீதம் இசைக்கப்பட்டுவந்தது. பின்னர்தான் சட்ட அமைச்சராகவும், நாட்டின் தலைமை நீதிபதியாகவும் உயர்ந்தவரான ஷேக் முகமது ஜமீல் தீதியால் இயற்றப்பட்ட பாடல் நாட்டுப்பண்ணாக ஏற்கப்பட்டு இதற்கு புதிய இசைவடிவம் தரப்பட்டது. இது நீண்ட பாடலாக இருந்தாலும், முதல் ஆறு வரிகள் மட்டுமே இசைக்கப்படுகின்றன. மாலத்தீவின் தேசிய கீதம் சுமார் 100 விநாடிகள் வரை நீடிக்கும். [3]

வரிகள்

[தொகு]
மாலைத்தீவு மொழி தமிழ் ஒலிபெயர்ப்பு தமிழ் மொழிபெயர்ப்பு

ޤައުމީ މިއެކުވެރިކަން މަތީ ތިބެގެން ކުރީމެ ސަލާމް
ޤައުމީ ބަހުން ގިނަހެޔޮ ދުޢާ ކުރަމުން ކުރީމެ ސަލާމް

ޤައުމީ ނިޝާނަށް ޙުރުމަތާއެކު ބޯލަނބައި ތިބެގެން
އައުދާނަކަން ލިބިގެން އެވާ ދިދައަށް ކުރީމެ ސަލާމް

ނަސްރާ ނަސީބާ ކާމިޔާބުގެ ރަމްޒަކަށް ހިމެނޭ
ފެއްސާއި ރަތާއި ހުދާ އެކީ ފެނުމުން ކުރީމެ ސަލާމް

ފަޚްރާ ޝަރަފް ގައުމަށް އެހޯދައިދެއްވި ބަތަލުންނަށް
ޒިކްރާގެ މަތިވެރި ޅެންތަކުން އަދުގައި ކުރީމެ ސަލާމް

ދިވެހީންގެ އުންމެން ކުރި އަރައި ސިލްމާ ސަލާމަތުގައި
ދިވެހީންގެ ނަން މޮޅުވުން އަދައި ތިބެގެން ކުރީމެ ސަލާމް

މިނިވަންކަމާ މަދަނިއްޔަތާ ލިބިގެން މިޢާލަމުގާ
ދިނިގެން ހިތާމަތަކުން ތިބުން އެދިގެން ކުރީމެ ސަލާމް

ދީނާއި ވެރިންނަށް ހެޔޮހިތުން ހުރުމަތް އަދާކުރަމުން
ސީދާ ވަފާތެރިކަންމަތީ ތިބެގެން ކުރީމެ ސަލާމް

ދައުލަތުގެ އަބުރާ ޢިއްޒަތާ މަތިވެރިވެގެން އަބަދަށް
އައުދާނަވުން އެދި ހެޔޮދުޢާ ކުރަމުން ކުރީމެ ސަލާމް

க்கௌவ் மி இகுவேரிகன் மதீ திபேகென் குரீமெ சலாம்.
க்கௌவ் மீ பஹுன் கினா ஹெயு துஆ குரமுன் குரீமெ சலாம்.

க்கௌவ் மீ நிஷானா ஹுர் மதா எகு போலான்பாய் திபேகின்,
ஔதா நகன் லிபிகின் ஏ வா திதா யா குரீமெ சலாம்.

நஸ்ரா நசீபா காமியாபுகே ரம்சக ஹிமெனே,
ஃபெஸ்ஸா ரத்தா யுஹுதா எகீ ஃபெனுமுன் குரீமெ சலாம்.

ஃபக்ரா சரஃப் கௌவ்மா எ ஹோதாய் தெவ்வி பதலுன்னா,
சிக்ரகே மதிவேரி இஹென்தகுன் அதுகை குரீமி சலாம்.

திவெஹீங்கே உம்மென் குரி அராய் சில்மா சலாமாதுகா,
திவெஹீங்கே நன் மொல்ஹு வுன் அதாய் திபெகன் குரீமி சலாம்.

மினிவன்கமா மதனிய்யதா லிபிகன் மி ஆலாமுகா,
தினிகன் ஹிதாமா தகுன் திபுன் எதிகன் குரீமி சலாம்.

தீனை வெரின்னா ஹெயோ ஹிதுன் ஹுருமே அதா குரமுன்,
சீதா வஃபாதெரிகன் மதீ திபகன் குரீமி சலாம்.

தௌலதுகே அபுரா இசதா மதிவெரி வெகன் அபதா,
ஔதானா வுன் அதி ஹெயோ துஆ குரமுன் குரீமி சலாம்.

நாட்டு ஒற்றுமையால் நினக்கு வணக்கம்.
நல்வாழ்த்துகளுடன் தாய்மொழியால் வணங்குகிறோம்,

தேசிய சின்னத்தை மதித்துத் தலை வணங்குகிறோம்.
(அவ்வளவு) வலிமை வாய்ந்த கொடிக்கு; வணக்கம் செலுத்துகிறோம்.

வாகை நல்வாய்ப்புடன் வெற்றியின் களத்தில்,
பச்சை சிவப்பு வெள்ளையுடன் அது இருக்கிறது, அதனால் அதனை வணங்குகிறோம்.

தேசத்துக்குக் கவுரவமும் பெருமையும் தேடித் தந்த வீரதீரர்களுக்கு
நினைவுகளின் சுபமான சொற்களிகளில் வணக்கம் செலுத்துகிறோம்.

மாலத்தீவர்களின் தேசம், காவல், பாதுகாப்பின் கீழ்
மாலத்தீவர்களின் பெயரால் பெருமை கொள்ளட்டும்.

உலகில் அவர்களின் (மாலத்தீவர்களின்) சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்துக்கு வாழ்த்துகிறோம்.
துயரங்களிலிருந்து விடுதலைக்காகவும், நின்னை வணங்குகிறோம்.

நமது மதம் மற்றும் நமது தலைவர்களுக்கு முழு மரியாதை, உளமார்ந்த ஆசிகளுடன்,
நேர்மையால் வாய்மையால் நாங்கள் வணங்குகிறோம்.

சுபமான கவுரவம் மற்றும் மரியாதையை அரசு எப்போதும் பெற்று இருக்கட்டும்.
உன்னுடைய தொடர் வலிமைக்கு வாழ்த்துகளுடன், நின்னை நாங்கள் வணங்குகிறோம்.

  • பொதுவாக, பாடும் போது மட்டும் முதல் மூன்று சரணங்கள் படிக்க வேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. R. K. Radhakrishnan (28 June 2011). "India honours doyen of modern Sinhala music". The Hindu (Colombo). http://www.thehindu.com/news/international/article2141369.ece. பார்த்த நாள்: 25 April 2013. 
  2. "Maldives". National Anthems. பார்க்கப்பட்ட நாள் 2013-04-25.
  3. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (29 சூன் 2016). "நாட்டுக்கொரு பாட்டு- 12: நீதிபதியால் வந்த தேசிய கீதம்!". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2016.