மலைக்காடை
மலைக்காடை | |
---|---|
ஒரு இந்திய ஆண் பறவை | |
குடும்பம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. argoondah
|
இருசொற் பெயரீடு | |
Perdicula argoondah (Sykes, 1832) |
மலைக்காடை (rock bush quail (Perdicula argoondah) என்பது இந்திய தீபகற்பத்தின் சில பகுதிகளில் காணப்படும் காடை இனமாகும். இது பரந்த அளவில் காணப்படும் ஒரு பொதுவான இனமாகும். இதை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்று பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் மதிப்பிட்டுள்ளது.
வகைபிரித்தல்
[தொகு]இதில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட கிளையினங்கள் உள்ளன:
- P. a. argoondah மத்தியப் பிரதேசத்திலிருந்து தெற்கே தமிழ்நாடுவரை காணப்படுகிறது.
- P. a. meinertzhageni வடமேற்கு இந்தியாவில் காணப்படுகிறது
- மைசூர் சரளைக்காட்டுக் காடை (P. a. salimalii) தென்னிந்தியாவின் கருநாடகத்தின் சில பகுதிகளில் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]இவை புதர்க்காடையை உருவில் மிகவும் ஒத்துள்ளன. புதர்க்காடைக்குக் கண்ணின்மேல் இருக்கும் புருவம் இதற்கு இல்லை. இதன் தொண்டையின் நிறம் செம்பழுப்பிற்கு பதிலாக செங்கல் சிவப்பில் இருக்கும். இவை புதர்க்காடைகளுடன் சேர்ந்து மேயக்கூடியவை. இவை சிறு கூட்டமாக கூடி வாழக்கூடியவை. இவை திடீரென்று தாவரங்களில் இருந்து மொத்தமாக எழுந்து பறக்கும் போது மட்டுமே கண்ணில் படுகின்றன. இவை 6.7–7.25 அங்குலம் (17.0–18.4 செமீ) நீளமுள்ளதாகவும், 64–85 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.[2] இவ்வினத்தின் ஆண்பறவைகளுக்கு கழுத்தில் புள்ளிகள் மங்கலான பாக்கு நிறத்தில் இருக்கும். பெண் பறவைகளுக்கு இப்புள்ளிகள் இருக்காது.
பரவலும் வாழ்விடமும்
[தொகு]மலைக்காடைகள் இந்தியாவின் மேற்குப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவை. இவை இடம்பெயராத இனம் என்று நம்பப்படுகிறது. இவை வறண்ட பகுதிகளில் புதர்கள் நிறைந்த புல்வெளிகள் மற்றும் முட்செடிகள் நிறைந்த புதர்கள் உள்ள பகுதியில் காணப்படுகின்றன. இவை 600 மீட்டர் (2,000 அடி) உயரத்திற்கு மேல் உள்ள பகுதியில் அரிதாகவே காணப்படுகின்றன.[3]
நிலை
[தொகு]மலைக்காடைகள் மிகவும் பரந்த வாழிடப் பரப்பைக் கொண்டுள்ளன. இதை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்று பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் மதிப்பிட்டுள்ளது. இவற்றின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை என்றாலும், வேட்டையாடுதல் மற்றும் இதன் வாழ்விட அழிப்பால், இதன் எண்ணிக்கை மெதுவாக குறைந்து வருகிறது. இவற்றின் எண்ணிக்கை வீழ்ச்சியின் விகிதம், இந்த இனத்தை அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம் என்ற பிரிவில் பட்டியலிடுவதற்கு போதுமானதாக இல்லை.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 BirdLife International (2016). "Perdicula argoondah". IUCN Red List of Threatened Species 2016: e.T22679002A92797941. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22679002A92797941.en. https://www.iucnredlist.org/species/22679002/92797941. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Hume, A.O.; Marshall, C.H.T. (1880). Game Birds of India, Burmah and Ceylon. Vol. II. Calcutta: A.O. Hume and C.H.T. Marshall. p. 122.
- ↑ McGowan, P.J.K.; Boesman, P. (1994). Rock Bush-quail (Perdicula argoondah). In: del Hoyo, J., Elliott, A., Sargatal, J., Christie, D.A. & de Juana, E. (eds.) (2014). Handbook of the Birds of the World Alive. Lynx Edicions, Barcelona. Retrieved 2 August 2015