மைசூர் சரளைக்காட்டுக் காடை
மைசூர் சரளைக்காட்டுக் காடை (Perdicula argoondah salimalii) என்பது இந்திய தீபகற்பத்தின் சில பகுதிகளில் காணப்படும் காடை ஆகும். இது மலைக்காடையின் அங்கீகரிக்கப்பட்ட மூன்று கிளையினங்களில் ஒன்றாகும்.
விளக்கம்
[தொகு]இவை அளவில் மலைக்காடையை உருவில் மிகவும் ஒத்ததாக இருக்கும். இவற்றின் உடலின் மேற்பகுதி, இறக்கைகள், வால் ஆகியன செங்கல் சிவப்பாக இருக்கும். அடிவயுறும், வாலின் கீழிறகுகளும், பக்கங்களும் லேசான செங்கல் சிவப்பு நிறத்தில் இருக்கும். மற்றபடி மலைக்காடைகளைப் போலவே கருங்கோடுகளும் கறைகளும் பெற்றிருக்கும். பெண் பறவையின் உடலின் மேற்பகுதி செங்கல் சிவப்பாக கரும் பட்டைகளின்றியும், உடலின் கீழ்ப் பகுதி வெளிர் மஞ்சளாக இளம் செம்பழுப்புத் தோய்ந்து காணப்படும்.[1]
பரவலும் வாழ்விடமும்
[தொகு]இந்தக் காடைகள் தென்னிந்தியாவின் கருநாடகத்தின் சில பகுதிகளில் குறிப்பாக சித்திரதுர்க்கா மாவட்டத்தில் சிவப்பு பரற் கற்கள் நிறைந்த பகுதியில் இவை காணப்படுகின்றன. இதன் உடல் நிறம் அந்த நிலப்பகுதிக்கு பொருந்த அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.[1]
இவற்றின் பழக்கவழக்கமும், இனப்பெருக்கமும் மலைக்காடையை ஒத்ததாக இருக்கும்.[1]