உள்ளடக்கத்துக்குச் செல்

புனித ஜார்ஜ் குருமுதல்வர் தேவாலயம், இடப்பள்ளி

ஆள்கூறுகள்: 10°1′19″N 76°18′19″E / 10.02194°N 76.30528°E / 10.02194; 76.30528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித ஜார்ஜ் குருமுதல்வர் தேவாலயம்
St. George's Forane Church
10°1′19″N 76°18′19″E / 10.02194°N 76.30528°E / 10.02194; 76.30528
அமைவிடம்கொச்சி, இடப்பள்ளி
நாடுஇந்தியா
சமயப் பிரிவுசிரோ மலபார் கத்தோலிக்க தேவாலயம்
வலைத்தளம்stgeorgeedappally.org
வரலாறு
முந்தைய பெயர்(கள்)Mart Mariam Church
நிறுவப்பட்டதுஅண். AD 593; 1432 ஆண்டுகளுக்கு முன்னர் (593)
அர்ப்பணிப்புபுனித ஜார்ஜ்
(முற்காலத்தில் மரியாள்)
நேர்ந்தளித்த ஆண்டு19 ஏப்ரல் 2015
Architecture
நிலைதேவாலயம்
செயல்நிலைசெயல்பாட்டில்
கட்டடக் கலைஞர்ஜெரில் ஜோஸ் மற்றும் கோஷி அகெக்ஸ், வாஸ்துஷில்பாலயா
ஆரம்பம்1 சனவரி 2001
நிறைவுற்றது19 ஏப்ரல் 2015

எடப்பள்ளி தேவாலயம் என்று உள்நாட்டில் அழைக்கப்படும் புனித ஜார்ஜ் குருமுதல்வர் தேவாலயம் என்பது கேரளத்தின், கொச்சியில் உள்ள இடப்பள்ளி ஒரு கத்தோலிக்க யாத்திரை தலமாக உள்ள தேவாலயம் ஆகும். இது புனித ஜார்ஜின் ஆசியாவின் மிகப்பெரிய தேவாலயம் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர்.

இந்த தேவாலயம் கி.பி 593 இல் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி முதல் நூற்றாண்டில் திருத்தூதர் தோமாவால் நிறுவப்பட்ட ஏழு தேவாலயங்களை அடுத்து இது கேரளத்தின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தேவாலயம் முதலில் 'கன்னி மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[1][2] 1080 ஆம் ஆண்டில், பழைய தேவாலயத்தை ஒட்டியே ஒரு புதிய தேவாலயம் கட்டப்பட்டது.[3] செயிண்ட் ஜார்ஜ் விருந்து (ஏப்ரல் 23) ஒரு பகுதியாக ஆண்டுதோறும் ஒன்பது நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.[4] இந்த தேவாலயத்துக்கு, கிறித்துவர்கள் மட்டுமல்லாது பிற சமயத்தினர் கூட வருகின்றனர், இங்கு தங்கம், கோழி, முட்டைகள் போன்றவை காணிக்கைகளாக அளிக்கப்படுகின்றன.[5]

இந்த தேவாலயம் கொச்சியின் வடகிழக்கில் தே. நெ 66 மற்றும் தே. நெ 544 ஆகியவற்றின் சந்திப்பிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் சுமார் 22 கி.மீ, தொலைவில் நெடும்பாசேரியில் உள்ள கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்   ஆகும். இடப்பள்ளி தொடருந்து நிலையம் 3 கிலோமீட்டர்கள் (1.9 mi) தொலைவில் உள்ளது.[6] நகரத்தின் தொடருந்து வலையமைப்பான கொச்சி மெட்ரோ தேவாலயத்தின் முன் ஓடுகிறது.[7]

குறிப்புகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-03. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
  2. "Indian cardinal does a Pope Francis at church blessing". Matters India. 20 April 2015. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
  3. "Between the old and the new church". The Hindu. 17 April 2015. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
  4. "St. George's Miraculous Syro Malabar Catholic Forane Church". Web India 123. 2015. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
  5. "Edappally Church, Kochi, Kerala, India". Tourfilla. 2015. Archived from the original on 14 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Makeover for Edappally railway station likely". Times of India. 29 December 2014. பார்க்கப்பட்ட நாள் 15 June 2015.
  7. "Kochi Metro route". Railway Technology. 2015. பார்க்கப்பட்ட நாள் 15 June 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]