பழங்களின் பல்வகைமை
மகரந்தச்சேர்க்கையின் பின் பூக்களின் சூலகம் பழமாக மாறுகிறது. சூலகத்தின் சுவர் சுற்றுக்கனியமாகவும் முதிர்ந்த சூல்வித்து வித்தாகவும் மாறுகிறது. இந்த மாற்றங்களின் அடிப்படையில் பழங்கள் வகைப்படுத்தப்படுவது பழங்களின் பல்வகைமையாகும்.
இந்த அடிப்படையில் பழங்கள் மூன்று வகைப்படும்.
- தனிப் பழம்
- திறள் பழம்
- கூட்டுப் பழம்
தனிப்பழம்
[தொகு]தனிப்பூவிலிருந்து தோன்றும் பழங்கள் தனிப்பழங்களாகும். சுற்றுக்கனியத்தின் இயல்புக்கேற்ப தனிப்பழங்களை சதைப்பழம், உலர்பழம் என இருவகைப்படுத்தலாம்.
தனிச் சதைப்பழம்
[தொகு]இவை தனிப்பழங்களாகும். சுற்றுக்கனியம் சதை கொண்டதாக அல்லது நாருள்ளதாகக் காணப்படும்.
எ.கா: தேங்காய்,மா, தக்காளி, கொய்யா, அப்பிள், தோடை, பூசணி முதலானவை
-
மாம்பழமும் அதன் குறுக்குவெட்டும்
தனி உலர் பழம்
[தொகு]இவை தனிப்பழங்களாகும். சுற்றுக்கனியம் சதைப்பற்றுக் குறைந்ததாகக் காணப்படும்.இதனால் பரம்பலடையும் போது உலர்ந்த நிலையில் காணப்படும்.
எ.கா: அவரை,வெண்டி, சோளம், கோதுமை, நெல், மரமுந்திரி, எருக்கு முதலானவை.
திரள் பழம்
[தொகு]ஒரு தனிப் பூவிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பழங்கள் ஒன்று திரண்ட நிலையில் உருவாகுதல் திரள் பழங்கள் எனப்படும்.
எ.கா: சீதாப்பழம்,அன்னமுன்னா, ஸ்ரோபெரி, தாழை, அலறி முதலானவை
கூட்டுப்பழம்
[தொகு]பூந்துணரிலிருந்து பழங்கள் ஒன்றிணைந்து உருவாகுதல் கூட்டுப்பழங்கள் ஆகும்.
எ.கா: அன்னாசி,பலா, ஈரப்பலா முதலானவை