பண்டைய தமிழ் நாட்டின் சட்ட அமைப்பு
தமிழ்நாட்டு வரலாறு |
தமிழக வரலாறு |
---|
பண்டைய தமிழகத்தின் சட்ட அமைப்புகள் அரசால் நிறுவப்பட்டன. இது தமிழ் கொள்கைகளான அறம், மறம், பழி மற்றும் நாணுதல் ஆகிவயற்றை அடிப்படையாக கொண்டிருந்தது. ஒரு மன்னன் அறம் தவறினால், அது அவனது குடிகளிடமிருந்து மாறாத பழியை அவனுக்கு கொண்டு சேர்க்கும். மறுபுறம், மன்னன் மறம் தவறினால், அது அவனுக்கு அவமானம் (நாணம்).
சேர, சோழ, பாண்டியர்களின் தலைநகரங்களில் அறம்கூறு அவைகள் இருந்தன.[1]
மன்னர்
[தொகு]இறுதி மேல்முறையீட்டு நீதிவானாக மன்னர் இருந்தார்.[2] ஒரு பாண்டிய மன்னர் தனது நீதிமன்றத்தில், நேர்மையற்ற ஒரு நபரை நீதிபதியாக நியமித்ததற்காக அவரை கொதிக்கும் நீரில் போட வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அரசரின் இந்த கருத்திலிருந்து, மன்னர்கள் நீதிபதிகளை நியமித்தனர் என்று ஊகிக்க முடியும்.[3] ஒரு குறிப்பிட்ட மன்னர் குளிக்கும் போது கூட நீதியைக் கடைபிடித்ததாக கூறப்படுகிறது.[4]
நல்லொழுக்கமும் வீரமும்
[தொகு]அறம் என்பது பொதுவாக நல்லொழுக்கம் என்று பொருள் கூறப்பட்டு சமசுகிருத சொல்லான தர்மம் என்ற சொல்லுக்கு இணையாக பயன்படுத்தப்பட்டாலும், இவற்றுக்கிடையேயான இடைத்தாக்கம் காரணமாக அவற்றுக்கிடையேயான தனிச் சிறப்பை வரைய இயலாது.[5] மறம் என்ற மற்றொரு கருத்துடன் அறம் என்ற கருத்தை இணைத்திருந்தனர்; அறம் என்பது நல்லொழுக்கம், நீதி, சூழ்நிலை மற்றும் மரபை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட செயல்களாகும்; மறுபுறம் வீரம், தைரியம், கோபம், வெறுப்பு, கொலை, வலிமை போன்றவற்றைக் குறிக்க மறம் பயன்பட்டது.[6] எனவே, இது தர்மம் என்ற கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது.[7] மறம் என்பது காலப்போக்கில் வீரத்தின் ஒரு பிரிவாக அதன் பயன்பாட்டில் சீரழிந்தது.[8]
அறம் மற்றும் மறத்தின் தனிச்சிறப்பானது பலம்வாய்ந்த அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தது. இதை சீனாவின் தற்காப்பு நற்பண்புகளுக்கும், தத்துவ நற்பண்புகளுக்கும் இடையிலான வேறுபாட்டுடன் ஒப்பிடப்படலாம்.
நீதிபதியாக அறம்
[தொகு]இந்த தெய்வீகப் பணியியல் சட்டத்தின் கொள்கையாக நீதி அல்லது அறம் இருந்தது. சங்க காலத்தில் நீதியை நிலைநாட்டக்கூடிய நபர்கள், அறம் என்ற சொல்லில் பொதிந்துள்ள சமத்துவக் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டனர்.[9] அறத்திற்கு விரிந்த அளவில் பொருள் உள்ளது. மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ளபடி அதற்கு எட்டு பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.[10]
திருக்குறலின் செங்கோண்மை என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர் இதைக் குறிப்பிடுகிறார்:
அரசாங்கம் குற்றங்களை ஆராய வேண்டும், யாரிடமும் விருப்பு வெறுப்பு காட்டாமல், குற்றத்துக்கு ஏற்ற தண்டனையை விதிக்க வேண்டும். குறள் 541 [11]
நீதிமன்றங்கள்
[தொகு]நீதிமன்றங்களுக்கு பல்வேறு பெயர்கள் இருந்தன: அறம் வழங்கும் மன்றம் (நீதியைப் பாதுகாக்கும் அவை), உலக அறவை (உலக நீதிக்கான இருக்கை) [12] மற்றும் அறம்கூறும் அவையம் (நீதி பேசும் மன்றம்). இச்சொல்லானது சங்க காலத்திற்குப் பிறகு தர்மாசனம் (தர்ம இடம்) என்ற பெயராக சமஸ்கிருதமயமாக்கப்பட்டது.
விசாரிக்கும் நீதிபதி
[தொகு]அனைத்து குடிமை மற்றும் குற்றவியல் வழக்குகளிலும் மன்னரே உச்சபட்ச நடுவராக இருந்தபோதிலும், நீதி பரிபாலிக்கும் அதிகாரம் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதி ஒரு விசித்திரமான தலையணியை அணிந்திருப்பார், இதன் மூலம் அவர்கள் நீதிமன்றத்தின், மற்ற அதிகாரிகளிடமிருந்து வேறுபட்டிருந்தனர். வழக்கு தொடுத்தவர்களுக்கு நீதி கட்டணமின்றி வழங்கப்பட்டது; ஆனால் தண்டனைகள் மிகவும் கடுமையானவை, எனவே குற்றங்கள் அரிதானவையாக நடந்தன.[13]
நீதிமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் நடத்தை நெறி தவறவில்லை. அவர்களின் முன் வந்த வழக்குகளின் விவரங்களை நன்கு ஆராய்ந்து, அவற்றை கூர்ந்து படித்து உண்மையைக் கண்டறிந்து தங்கள் தீர்ப்பை அளித்தனர். நீதிபதிகளாக இருந்தவர்கள் விருப்பு, வெறுப்பு மற்றும் அச்சம் அல்லது சார்பு போன்றவை இல்லாதவர்களாகவும் இவற்றிற்கு ஆட்படாதாவர்களாகவும் இருந்தனர். அவர்கள் சமத்துவத்தை பேணினர். அவர்கள் தங்கள் நேர்மை மற்றும் நாணயத்துக்காக அறியப்பட்டனர்.[14]
விசாரணை முறை
[தொகு]சில நேரங்களில் வழக்குகளுக்கு தீர்வுகாண விசித்திரமான முறைகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக குற்றம் சாட்டப்பட்டவரை தனது கையை ஒரு நாகப்பாம்பு உள்ள பானைக்குள் விடும்படி செய்வது. நாகம் அவரைக் கடித்தால், அவர் குற்றவாளி என்று, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது: நாகம் அவரைக் கடிக்கவில்லை என்றால், அவர் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டது.[15]
சாட்சிகள்
[தொகு]ஒரு குறிப்பிட்ட வழக்கு நீதிமன்றத்துக்கு வரும்போது, வழக்கு விசாரணையின்போது வழக்கு சம்பந்தமாக சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டது, இப்போது போல, அப்போதும் தவறான மற்றும் பொய் சாட்சிகள் இருந்தனர். பொய்யைக் கூறும் சாட்சியை சிறுபஞ்சமூலம் கண்டிக்கிறது. பொய் சாட்சி கூறுபவரை ஒரு நாட்டின் ஆறு குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற ஐந்து பேர் போலி சன்யாசிகள், ஒழுக்கம்கெட்ட இல்லத்தரசிகள், விசுவாசமற்ற அமைச்சர்கள், விபச்சாரம் செய்பவர்கள் மற்றும் கோள்மூட்டி விடுபவர் ஆகியோர் ஆவர். சிலப்பதிகாரத்தின் வெவ்வேறு இடங்களில், பொய் சாட்சி சொல்வது ஒரு பெரிய குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அக்காலத்தில் எவ்வளவு கவனமாக நீதி நிர்வகிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கின் கண்ணியம் பராமரிக்கப்பட்டது என்பதை நாம் காண்கிறோம்.[16]
சட்ட நூல்
[தொகு]தமிழ் சட்ட விதித்தொகுப்பு நூல் ஒன்று இருந்ததைக் குறிக்கும் குறிப்புகள் உள்ளன. ஆனால் அத்தகைய ஆவணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், சில வரலாற்றாசிரியர்கள் இது திருக்குறள் என்று கூறுகிறார்கள்; இருப்பினும் இது சர்ச்சைக்குரியது.[17]
குறிப்பிட்ட வழக்குகள்
[தொகு]ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு என்னவென்றால், ஒரு இளைஞன் ஒரு பெண்ணின் காதலைப் பெற்றிருக்கிறான், ஆனால் அவளுடைய பெற்றோரின் சம்மதம் கிடைக்கவில்லை. இந்த வழக்கை அறம்கூறும் அவையத்தின்முன் கொண்டு செல்ல காதலன் சிந்திக்கிறான். ஒரு இளைஞன் ஒரு பெண்ணை அனுபவித்து அதன்பின் அவளை விட்டு வெளியேறி, அவளை திருமணம் செய்து கொள்ள மறுத்தால், அந்த பெண் அவையின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும், மேலும் உண்மையை விசாரித்து அறிந்து குற்றவாளியை தண்டிப்பது அவையின் கடமையாகும்.[18] சிலப்பதிகாரம் என்ற காவியத்தில், கோவலன் பாண்டிய நாட்டில் விசாரணையின்றி இகழ்வதற்குரிய வகையில் கொல்லப்படுகிறார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Bharathi Tamil Sangham (1968). The Sangham age: being essays on early Tamil literature together with English renderings of selected poems of the Sangham age. Bharathi Tamil Sangham. p. 68.
- ↑ Pālāmpāḷ, Ve (1998). Studies in the history of the Sangam age. Kalinga Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8516-387-1.
- ↑ Ca. Vē Cuppiramaṇiyan̲, Ka. Ta Tirunāvukkaracu (1963). Historical heritage of the Tamils. International Institute of Tamil Studies.
- ↑ N. Subramanian (1976). History of Tamilnad: to A.D. 1565. Koodal Publishers.
- ↑ Proceedings - Indian History Congress. Indian History Congress. 1984. p. 91.
- ↑ A social history of early India. Pearson Education India. 2009.
- ↑ Thirukkural, the daylight of the psyche. International Institute of Tamil Studies. 1987.
- ↑ Proceedings - Indian History Congress. Indian History Congress. 1984.
- ↑ Ca. Vē Cuppiramaṇiyan̲, Ka. Ta Tirunāvukkaracu (1983). Historical heritage of the Tamils. International Institute of Tamil Studies.
- ↑ Kamaliah, K. C. (1973). Preface in the Kuṛaḷ: a comparative study of the first forty couplets of the Kuṛaḷ. M. Seshachalam.
- ↑ Ronel, Natti (2008). Trends and Issues in Victimology. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4438-0069-3.
- ↑ Devi, Leela (1986). History of Kerala. Vidyarthi Mithram Press & Book Depot.
- ↑ Kanakasabhai, V. (1989). The Tamils Eighteen Hundred Years Ago. Asian Educational Services. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0150-5.
- ↑ Kiruṭṭin̲an̲, A. (2000). Tamil culture: religion, culture, and literature. Bharatiya Kala Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86050-52-1.
- ↑ Subramanium, N. (1980). Śaṅgam polity: the administration and social life of the Śaṅgam Tamils. Ennes Publications. p. 198.
- ↑ Triveni, Volume 61. Triveni Publishers. 1992.
- ↑ K. Kailasapathy, Kan̲akacāpapati Kailācapati (1968). Tamil heroic poetry. Clarendon P.
- ↑ Pālāmpāḷ, Ve (1998). Studies in the history of the Sangam age. Kalinga Publications.