தோடெலி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோடெலி மொழி
Dotyali
डोटेली
நாடு(கள்)நேபாளம்
பிராந்தியம்தூரமேற்கு பிராந்தியம் மற்றும் மத்தியமேற்கு பிராந்தியம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
நேபாளத்தில் 7,90,000  (2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு)[1]
தேவநாகரி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015, பகுதி 1, பிரிவு 6-இன் படி நேபாளத்தின் அரச மொழி நேபாளி மொழியாகும்[2]
மொழிக் குறியீடுகள்
ISO 639-3dty
மொழிக் குறிப்புdote1238[3]
நேபாளத்தின் அச்சாம் மாவட்டப் பெண், கறி மற்றும் மீன் வகைகளை சமைப்பது குறித்து தோடெலி மொழி மொழியில் பேசுகிறார்.

தோடெலி மொழி (Doteli, or Dotyali (डोटेली) இந்திய-ஆரிய மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி நேபாளத்தில், தூரமேற்கு பிராந்தியம் மற்றும் மத்தியமேற்கு பிராந்தியங்களில் 8,00,000 மக்கள் பேசுகின்றனர். இம்மொழி தேவநாகரி எழுத்துமுறையில் எழுதப்படுகிறது.

நேபாள அரசமைப்புச் சட்டத்தின் பகுதி 1, பிரிவு 6ன் கீழ், இம்மொழி நேபாள அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2] தோடேலி மொழி நான்கு முக்கிய வட்டார வழக்கு கொண்டது. அவைகள் பைத்தாடேலி, பஜாங்கி, தார்சூலி மற்றும் தோடேலி ஆகும்.

மாவட்ட வாரியாக வட்டார வழக்கு பெயர்கள்[4]
மாவட்டம் தோடேலி மொழியின் வட்டார வழக்கின் பெயர்
கைலாலி பைத்தாடேலி, பஜாங்கி
கஞ்சன்பூர் மாவட்டம் பைத்தாடேலி
டோட்டி மாவட்டம் தோடேலி
டடேல்துரா மாவட்டம் தோடேலி, ததேல்துரா
பைத்தடி மாவட்டம் பைத்தடி, தோடேலி
தார்ச்சுலா மாவட்டம் தார்ச்சூலி, தோடேலி
பஜாங் மாவட்டம் பஜாங்

தோடேலி மொழியானது, நேபாளி மொழியின் அச்சாமெலி மற்றும் பஜ்ஜுரேலி வழக்கு மொழிகளுக்கு நெருங்கிய தொடர்புடையது. மேலும் இம்மொழியின் உச்சரிப்பு, நேபாளி மொழியின் வட்டார வழக்கு மொழியான சூம்லி மொழியின் உச்சரிப்பை ஒத்ததாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தோடெலி மொழி at Ethnologue (18th ed., 2015)
  2. 2.0 2.1 Constitution Bill of Nepal 2072
  3. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2013). "Doteli". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. {{cite book}}: Invalid |display-editors=4 (help); Unknown parameter |chapterurl= ignored (help)
  4. A Sociolinguistic Study of Dotyali-LinSuN Central Department of linguistics, Tribhuvan University, Nepal and SIL International 2014

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடெலி_மொழி&oldid=2618365" இலிருந்து மீள்விக்கப்பட்டது