உள்ளடக்கத்துக்குச் செல்

தேனி. மு. சுப்பிரமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேனி. மு. சுப்பிரமணி
பிறப்புமு. சுப்பிரமணி
மே 1, 1967[1]
தூத்துக்குடி,
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்பழனிசெட்டிபட்டி,
தேனி
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்தேனி எம். சுப்பிரமணி, முத்துக்கமலம்
கல்விஇதழியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டம்
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்எஸ். முத்துசாமி பிள்ளை (தந்தை),
கமலம் (தாய்)
வாழ்க்கைத்
துணை
உ. தாமரைச்செல்வி
பிள்ளைகள்முத்துக்கமலம் (மகள்)
உறவினர்கள்சகோதரர்கள் -2, சகோதரி -1
விருதுகள்தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது
வலைத்தளம்
http://muthukamalam.com
http://thenitimes.com

தேனி. மு. சுப்பிரமணி (Theni M. Subramani) தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரத்தைச் சேர்ந்த ஓர் தமிழ் எழுத்தாளராவார்.[2] எம் சுப்பிரமணி என்ற இயற்பெயரிலும் முத்துக்கமலம், தாமரைச்செல்வி என்ற புனைப்பெயர்களிலும் தமிழில் வெளியாகும் பல அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் துணுக்குகள் (குறுந்தகவல்கள்) மற்றும் நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றை எழுதிவருகிறார்.[3] கட்டுரைகள், பேட்டிக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது படைப்புகள் பல இதழ்களிலும் இணையத்திலும் வெளியாகி உள்ளன. சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா என்ற நூலுக்கு தமிழ்நாடு அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான கணினியியலில் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு வழங்கப்பட்டுள்ளது.[4]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

தேனி. மு. சுப்பிரமணி 1967 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் நாள் முத்துசாமிப்பிள்ளை கமலம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தேனி மாவட்டத்திலுள்ள பழனியப்பா வித்தியாலயம் பள்ளியில் தனது ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியையும், பழனியப்பா உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புக் கல்வியையும் படித்த இவர் தொடர்ந்து தூத்துக்குடி நகரத்திலுள்ள எசு. ஏ. வி. மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியையும் முடித்தார்.

தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டு ஆண்டுகள் மின்சாரப் பணியாளர் சான்றிதழ் பயிற்சி பெற்ற இவர் விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசு சிமெண்ட் கழக ஆலையில் ஒரு ஆண்டு காலம் மின்சாரப் பணியாளருக்கான தொழில் பழகுநர் பயிற்சியும் பெற்றார். பல்வேறு தனியார் நூற்பாலைகளில் மின்சாரப் பணியாளராகப் பணியாற்றிக் கொண்டே மின்சாரப் பணி மேற்பார்வையாளருக்கான தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதி மின்சாரப் பணி மேற்பார்வையாளராகப் பணி உயர்வும் பெற்றார்.

தொலைநிலைக் கல்வி முறையில் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்புத் துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், இதழியலில் முதுகலைப் பட்டயமும், தொழிலாளர் நலம் மற்றும் நிர்வாகச் சட்டத்தில் பட்டயமும் பெற்றிருக்கிறார்.

எழுத்துலகம்

[தொகு]

1983 ஆம் ஆண்டு முதல் தமிழ்ப் பத்திரிகைகளில் துணுக்குகள் எழுதத் தொடங்கி, இன்று வரை பல்வேறு பத்திரிகைகளில் நான்காயிரத்திற்கும் அதிகமான துணுக்குகள், ஆறுநூறுக்கும் மேற்பட்ட பொதுக் கட்டுரைகள், நூற்றுக்கு மேற்பட்ட கணினி தொடர்பான கட்டுரைகள், சில நேர்காணல்கள், 22 சிறுகதைகள், 260 புதுக்கவிதைகள் என்று தொடர்ந்து பல்வேறு இதழ்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

2006 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் முத்துக்கமலம் என்ற இணைய இதழைத் தொடங்கிப் பராமரித்து வருகிறார்.[5] தற்போது இவ்விதழ் ஒரு பன்னாட்டுத் தமிழ் இணைய இதழாகவும் (ISSN: 2454 - 1990), இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் (UGC (India) Approved List of Journal (No:64227) in Tamil) ஒன்றாகவும் கருதுமளவுக்கு உயர்ந்துள்ளது.

வெளியிடப்பட்ட நூல்கள்

[தொகு]
  1. தமிழ் இணையச் சிற்றிதழ்கள்
  2. தமிழ் விக்கிப்பீடியா (மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், நவம்பர், 2010)
  3. சுவையான 100 இணையதளங்கள்
  4. மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்
  5. மகளிருக்கான 100 இணையதளங்கள்
  6. அதிசயங்கள்! உலக அதிசயங்கள்!
  7. அற்புத மகான்கள்
  8. இந்திய தேசியப்பூங்காக்கள்
  9. உலகச் சிறப்பு தினங்கள்
  10. கேரளக் கோயில்கள், தொகுதி 1
  11. கேரளக் கோயில்கள், தொகுதி 2
  12. தமிழகக் கோயில்கள், தொகுதி 1
  13. பயனுள்ள 100 இணையதளங்கள்
  14. கேரளக் கோயில்கள் பாகம் 1
  15. கேரளக் கோயில்கள் பாகம் 2
  16. விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க [6]
  17. சாமான்யனின் சந்தேகங்கள் பாகம் 1
  18. சாப - விமோசனக் கதைகள் [7]

பிற சிறப்புகள்

[தொகு]

வகிக்கும் பதவிகள்

[தொகு]
  • கணித்தமிழ்ச் சங்கம் மதுரைக் கிளை மற்றும் சங்கம் தமிழ் அறக்கட்டளைகளில் 2012 ஆம் ஆண்டு முதல் முறையே செயற்குழு உறுப்பினராகவும் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கின்றார். 2017 ஆம் ஆண்டு முதல் தேனி தமிழ்சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பெற்றுச் செயல்பட்டு வருகிறார்.[8]

வகித்த பதவிகள்

[தொகு]
  • தூத்துக்குடி பாரதி கலை இலக்கிய மன்றம், நெல்லை வ.உ.சி மாவட்ட துணுக்கு எழுத்தாளர் சங்கம், தேனி வெள்ளிமணி இளந்தளிர் மன்றம், நீலகிரி தமிழ் எழுத்தாளர் பேரவை, தேனி இலக்கியப் பணிமன்றம் போன்ற மொழிசார் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.
  • 2010 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இரண்டு அமர்வுகளில் பங்கேற்று கட்டுரைகள் வாசித்தார். வலைப்பூக்கள், விக்கிப்பீடியா தொடர்பாக அரங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து பங்கேற்றார்.
  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும் பல்வேறு கருத்தரங்குகளில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்புரையாற்றியுள்ளார். மாணவர்களுக்கு பயன்படும் இணையத் தமிழ் பயிலரங்கங்களை இவர் நடத்தியுள்ளார்

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தேனி மு.சுப்பிரமணி, தேனித் தமிழ்ச் சங்கம்
  2. ".:Sahitya Akademi:". sahitya-akademi.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-07.
  3. "தேனி மு.சுப்பிரமணி". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-03-07.
  4. "புத்தாண்டு விழாவில் 27 நூல்களுக்கு விருது - பரிசு". தின பூமி. பார்க்கப்பட்ட நாள் 2021-03-07.
  5. "Welcome To TamilAuthors.com". www.tamilauthors.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-07.
  6. https://books.dinamalar.com/details.asp?id=28338
  7. வாசகர் வட்டம்
  8. "TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - உறுப்பினர்கள் - தேனி மு. சுப்பிரமணி (Theni M. Subramani)". www.thenitamilsangam.org. பார்க்கப்பட்ட நாள் 2021-03-07.
  9. Kalvi Malar, Dinamalar
  10. Dina Thanthi

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனி._மு._சுப்பிரமணி&oldid=4120712" இலிருந்து மீள்விக்கப்பட்டது