உள்ளடக்கத்துக்குச் செல்

தூய தமிழ்ப் பற்றாளர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூயதமிழ்ப் பற்றாளர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழாகச் செயல்பட்டு வரும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத் தமிழ் மொழியைப் பிழையில்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் தூயதமிழிலே பேசும் தனித்தமிழ்ப் பற்றாளர்களுக்கு, மாவட்டத்திற்கு ஒருவர் என்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அகராதியியல் நாள் விழாவில் வழங்கப்படும் விருதாகும்.[1] இந்த விருதுக்கான பாராட்டுச் சான்றிதழுடன், பரிசுத்தொகையாக ரூபாய் 20 ஆயிரம் வழங்கத் தமிழ்நாடு அரசாணை 2020 திசம்பர் 30-இல் வெளியிடப்பட்டது.[2]

இந்த விருதுக்கு விண்ணப்பிப்போரின் தமிழ்ப் பற்றை ஆராயும் வகையில், எந்த நாளில் வேண்டுமானாலும் முன்னறிவிப்பின்றி அலைபேசி வழியாக நேர்காணல் நடத்தப்பெற்று, அதன் வழியாக, தூயதமிழ்ப் பற்றாளர் விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். [3]

இதற்கு முன்பாக, இந்த விருது 2020-ஆம் ஆண்டில் மாநில அளவில் மூன்று பேர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.[4] அப்போது இந்த விருதுக்குப் பாராட்டுச் சான்றிதழுடன் பரிசுத் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டது.[5]

தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு

[தொகு]

2020 ஆம் ஆண்டில் ரூபாய் 5 ஆயிரம் பரிசுத் தொகையுடனான ”தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு” பெற்றவர்கள் பட்டியல் இது:

  1. சி. மணிகண்டன், கோயம்புத்தூர்.
  2. இரா. அரிதாசு, அரியலூர்.
  3. த. ஆரோக்கிய ஆலிவர் ராசா, திருச்சி.

தூயதமிழ்ப் பற்றாளர் விருதாளர்கள்

[தொகு]

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு விருதாளர்கள் பட்டியல்

[தொகு]

மாவட்ட வாரியாக, 2020 ஆம் ஆண்டு [6] மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் [7] [8] பெற்றவர்கள் பட்டியல்

வ.எண் மாவட்டம் 2020 ஆம் ஆண்டு
விருதாளர் பெயர்
2021 ஆம் ஆண்டு
விருதாளர் பெயர்
1 அரியலூர் அ. சிவபெருமான் -----
2 செங்கல்பட்டு முனைவர் சு. சதாசிவம் ”வாசல்” எழிலன் (எ) சு. கந்தசாமி
3 சென்னை முனைவர் சி. முத்துமாலை தாமரைப்பூவண்ணன் (எ) க. கோவிந்தராசு
4 கடலூர் பாண்டலம் புலவர் க. குணசேகரன் -----
5 தருமபுரி த. தங்கமுத்து பாவலர் பெரு. முல்லையரசு
6 திண்டுக்கல் முனைவர் ந. அறிவரசன் பண்ணை கோமகன் (எ) தே.ரா. கோபால்
7 ஈரோடு உ. கந்தசாமி -----
8 கள்ளக்குறிச்சி இ. நேரு செ.வ. மதிவாணன்
9 காஞ்சிபுரம் பாவலர் மா. வரதராசன் புலவர் வெற்றிச் செழியன்
10 கன்னியாகுமரி பி. வைஷ்ணா -----
11 கரூர் பாவலர் ப. எழில்வாணன் முனைவர் கடவூர் மணிமாறன்
12 கோயம்புத்தூர் முனைவர் அ. ஷர்மிளாபானு -----
13 கிருட்டிணகிரி கருமலைத் தமிழாழன் (எ) கி. நரேந்திரன் -----
14 மதுரை வ. வரதராஜன் -----
15 மயிலாடுதுறை முனைவர் ஞானம் (எ) நா. ஞானசேகரன் -----
16 நாகப்பட்டினம் கோவீ. ராசேந்திரன் -----
17 பெரம்பலூர் கௌதமன் நீல்ராசு மு. பரமசிவம் (எ) விளவை செம்பியன்
18 புதுக்கோட்டை முனைவர் வே. அழகுமுத்து -----
19 இராமநாதபுரம் கவிஞர் கு. அழகர்சாமி ப. சிவபிரகதீசு
20 இராணிப்பேட்டை த. பழனி -----
21 சேலம் இரா. மோகன்குமார் -----
22 சிவகங்கை க. ஆஷா பழ. பாசுகரன்
23 தஞ்சாவூர் தனியெழிலன் (எ) சதீஷ் -----
24 தேனி தி. இராஜபிரபா ஆ. சின்னச்சாமி
25 தென்காசி க. கருப்பசாமி -----
26 திருப்பத்தூர் சு. கதிர்வேல் -----
27 திருப்பூர் ச. காவியா -----
28 திருவள்ளூர் மே.மு. மணிமாறன் ச.ம. மாசிலாமணி
29 திருவண்ணாமலை செ. உதயணன் (எ) எழுஞாயிறு -----
30 திருவாரூர் இராம. வேல்முருகன் -----
31 திருநெல்வேலி பே. இராசேந்திரன் -----
32 திருச்சிராப்பள்ளி முனைவர் தி. வெ. இராசேந்திரன் பூ. இரவிக்குமார்
33 தூத்துக்குடி தி. உமாதேவி -----
34 வேலூர் வி. பத்மனாபன் (எ) வே. பதுமனார் -----
35 விழுப்புரம் செ. அழகுவேல் (எ) அழகர் -----
36 விருதுநகர் க. முத்துவிக்னேஷ் -----
37 நீலகிரி ----- -----
38 நாமக்கல் ----- -----

குறிப்புகள்:

  • 2020 ஆம் ஆண்டுக்கு நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களிலிருந்து விருதுக்குத் தகுதியுடையவர்களாக எவரும் தேர்வு செய்யப்படவில்லை.
  • 2021 ஆம் ஆண்டில் 13 மாவட்டங்கள் தவிர, 25 மாவட்டங்களிலிருந்து விருதுக்குத் தகுதியுடையவர்களாக எவரும் தேர்வு செய்யப்படவில்லை.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான விருதாளர்கள் பட்டியல்

[தொகு]

2022 ஆம் ஆண்டு [9] [10] மற்றும் 2023 ஆம் ஆண்டு[11], [12] விருது பெற்றவர்களின் பட்டியல்

வ.எண் மாவட்டம் 2022 ஆம் ஆண்டு
விருதாளர் பெயர்
2023 ஆம் ஆண்டு
விருதாளர் பெயர்
1 அரியலூர் த. தினேசு ப. பவித்ரா
2 செங்கல்பட்டு வா. பரணிப்பாவலன் நந்திவரம் பா. சம்பத்குமார்
3 சென்னை மெய்ஞானி பிரபாகரபாபு பி. தமிழழகன்
4 கடலூர் ச. கருத்தாளன் (எ) காளிதாசன் -----
5 தருமபுரி கோ. வெங்கடாசலம் (எ) பாவலர் கோ. மலர்வண்ணன் நா. நாகராஜ்
6 திண்டுக்கல் மோ. நாக அர்ஜூன் செ. மோகனபூபதி
7 ஈரோடு பெ. தனலட்சுமி சிவசங்கரன்
8 கள்ளக்குறிச்சி ச. வாசுதேவன் (எ) நடுநாட்டுத்தமிழன் -----
9 காஞ்சிபுரம் விண்மீன் (எ) சி. ஏமலதா -----
10 கன்னியாகுமரி தி. பாலசுப்பிரமணியன் -----
11 கரூர் ----- ந. ஸ்டாலின்
12 கோயம்புத்தூர் வே. குழந்தைசாமி -----
13 கிருட்டிணகிரி மு.சந்தோசுகுமார் -----
14 மதுரை சித்தார்த்பாண்டியன் (எ) பெ. தங்கபாண்டி ச. ஜாஹீர் உசேன்
15 மயிலாடுதுறை ----- -----
16 நாகப்பட்டினம் இர. அகிலா -----
17 பெரம்பலூர் அ.செந்தில்குமார் (எ) தமிழ்க்குமரன் -----
18 புதுக்கோட்டை மெ. சிவநந்தினி -----
19 இராமநாதபுரம் சு. சோலைராசா -----
20 இராணிப்பேட்டை அ. மீனா ம. அ. சையத் அசன் (எ) பாரிதாசன்
21 சேலம் முனைவர் தமிழ்ப்பரிதி மாரி -----
22 சிவகங்கை கோ. ஆனந்தா கு. சுமித்ரா
23 தஞ்சாவூர் பா. கோவிந்தராசன் ச. பெத்தையா
24 தேனி மு. சுப்பிரமணி ப. பாண்டியராசன்
25 தென்காசி இ. செல்வகவிதா -----
26 திருப்பத்தூர் ச. சரவணன் சா. செல்வகுமார்
27 திருப்பூர் பு. கீர்த்தனா முத்து. சுப்பிரமணியன்
28 திருவள்ளூர் முனைவர் சி. இராமச்சந்திரன் ப. இராசசேகர்
29 திருவண்ணாமலை கீர்த்தனா அ. அபிபெல்வியா
30 திருவாரூர் தி. தினேஷ்பாபு -----
31 திருநெல்வேலி வ. செல்வமாரிமுத்து -----
32 திருச்சிராப்பள்ளி நா. வை. சிவம் (எ) து. வை. சிவராமலிங்கம் தே. தன்ராஜ்
33 தூத்துக்குடி செ. அந்தோணி ராகுல் கோல்டன் த. இராம்குமார்
34 நாமக்கல் இர.கண்ணன் -----
35 நீலகிரி ----- -----
36 வேலூர் ம. ச. சந்தீப் முனைவர் பா. சம்பத்குமார்
37 விழுப்புரம் பெ. கலியன் ஐ. தமிழன்
38 விருதுநகர் பி. நிலா க. சதீஸ்குமார்

குறிப்புகள்:

  • 2022 ஆம் ஆண்டுக்கு கரூர், மயிலாடுதுறை, நீலகிரி மாவட்டங்களிலிருந்து விருதுக்குத் தகுதியுடையவர்களாக எவரும் தேர்வு செய்யப்படவில்லை.
  • 2022 ஆம் ஆண்டில் இவ்விருது பெற்றவர்களில் தமிழ்ப்பரிதி மாரி (சேலம்) மற்றும் மு. சுப்பிரமணி (தேனி) ஆகியோர் விக்கிப்பீடியா பயனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 2023 ஆம் ஆண்டில் 21 மாவட்டங்கள் தவிர, 17 மாவட்டங்களிலிருந்து விருதுக்குத் தகுதியுடையவர்களாக எவரும் தேர்வு செய்யப்படவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தூய தமிழ் பற்றாளர் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு - தினமலர் நாளிதழ் செய்தி (22-01-2021)
  2. தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு - பிடிஎப் கோப்பிலான தகவல்
  3. தூயதமிழ்ப் பற்றாளர் விண்ணப்பப் படிவத்தில் கடைசியாக இடம் பெற்றிருக்கும் குறிப்பு
  4. தூய தமிழ்ப் பற்றாளர் விருதுக்கு 3 பேர் தேர்வு - தினமணி நாளிதழ் செய்தி (11-3-2020)
  5. தூய தமிழில் பேசுவோருக்கு ரூ. 5 ஆயிரம் பரிசுத்தொகை - ஆசிரியர் மலர் செய்தி
  6. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் விருது வழங்கலுக்கான அரசாணை (ப) எண்:33, நாள்:26-2-2021
  7. தமிழ் அகராதியியல் நாள் விழா: விருதுகள் வழங்கி கவுரவிப்பு (செய்தி),
  8. தமிழ் அகராதியியல் நாள் விழா: 13 பேருக்கு தூய தமிழ்ப் பற்றாளர் விருது (தினமணி நாளிதழ் செய்தி)
  9. தமிழ்ப் பற்றாளா்கள் 38 பேருக்கு விருது: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா் (தினமணி நாளிதழ் செய்தி)
  10. வீரமாமுனிவர் பிறந்தநாளை முன்னிட்டு 38 தமிழ்ப் பற்றாளர்களுக்கு விருதுகள் - அமைச்சர் சாமிநாதன் வழங்கினார் (தினத்தந்தி நாளிதழ் செய்தி)
  11. தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 480, நாள்: 07-03-2024, தமிழ் வளர்ச்சித் துறை
  12. தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர் விருதுகள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார் (தினமணி நாளிதழ் செய்தி)