மு. சுப்பிரமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. சுப்பிரமணி (பிறப்பு: 1961) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். புதுவை வானொலியில் இவரது கவிதைகள், சிறுகதைகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. “திசை எட்டும்” எனும் மொழிபெயர்ப்புக் காலாண்டிதழின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் எழுதிய “அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._சுப்பிரமணி&oldid=3614109" இருந்து மீள்விக்கப்பட்டது