கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமுருகன் (Thirumurugan) என்பவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர் ஆவார்.[1] இவர் அதிக நேரம் தொடர்ச்சியாக புகைப்படக் கருவியினை இயக்கி படமாக்கியதற்கான கின்னசு உலக சாதனை படைத்துள்ளார்.[2][3] திருமுருகன், "சின்ன திரையின் புலி" என்றும் அழைக்கப்படுகிறார்.
சென்னை திரைப்பட நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்த திருமுருகன், கோகுலம் காலனி என்ற தொலைக்காட்சி தொடருடன் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்காக சின்னத்திரை கதைகளையும் இயக்கினார்.[4] இதன்பின் மெட்டி ஒலி என்ற படத்தை இயக்கி நடித்தார். கோலிவுட் திரையுலகில் இவரது நுழைவு எம் மகன் (2006) உடன் இருந்தது. அதிகம் பேசப்பட்ட. எம் மகன் வெற்றிக்குப் பிறகு, நடிகர் பரத்துடன் இணைந்து முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் நடித்தார்.[5]
இவர் நாதஸ்வரம் என்ற நாடகத்தையும் இயக்கினார். இதில் இவர் முன்னணி நடிகராகவும் நடித்தார். ஒரு நேரடி தொடரில், இவர் 23 நிமிடங்கள் மற்றும் 25 வினாடிகள் நீடித்த காட்சியினை தொடர்ச்சியாக ஒளிப்பதிவு கருவியினை இயக்கி படமாக்கினார். இது கின்னசு உலக சாதனையாக பட்டியலிடப்பட்டுள்ளது.[2][3]