ஜெசினுலசு
Appearance
ஜெசினுலசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | பிசிடே
|
பேரினம்: | ஜெசினுலசு பிளைத், 1845
|
ஜெசினுலசு (Gecinulus) என்பது மரங்கொத்தி குடும்பமான பிசிடேயில் உள்ள பறவைகளின் பேரினமாகும். இந்தப் பேரினத்தின் பறவைகள் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.
வகைப்பாட்டியல்
[தொகு]ஜெசினுலசு பேரினமானது இங்கிலாந்து விலங்கியல் வல்லுநரான எட்வர்ட் பிளைத் என்பவரால் 1840ஆம் ஆண்டில் வெளிர் தலை மரங்கொத்திக்கு (ஜெசினுலசு கிராண்டியா) இடமளிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.[1] 1831ஆம் ஆண்டில் ஜெர்மன் பறவையியல் வல்லுநரான பிரெட்ரிக் போயீ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பண்டைய கிரேக்கச் சொல்லின் பொருளானது "பூமி" அல்லது "தரை"யில் "நகர்ந்து செல்லும்" என்று பொருள்படும்.
இந்தப் பேரினம் மூன்று சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[2]
படம் | விலங்கியல் பெயர் | பொது பெயர் | பரவல் |
---|---|---|---|
ஜெசினுலசு இராபிள்சீ | ஆலிவ் முதுகு மரங்கொத்தி | மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், புரூணை மற்றும் இந்தோனேசியா | |
ஜெசினுலசு கிராண்டியா | வெளிர் தலை மரங்கொத்தி | வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் | |
ஜெசினுலசு விரிடிசு | மூங்கில் மரங்கொத்தி | மியான்மர், லாவோஸ், தாய்லாந்து மற்றும் மலாய் தீபகற்பம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Edward Blyth (1845). "Notices and descriptions of various new or little known species of birds". Journal of the Asiatic Society of Bengal 14, Part 1 (159): 173–220 [192]. https://www.biodiversitylibrary.org/page/40131963.
- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Woodpeckers". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 17 May 2020.