உள்ளடக்கத்துக்குச் செல்

செயற்கைத் தனிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  செயற்கைத் தனிமங்கள்
  அரிய கதிரியக்க இயற்கைத் தனிமங்கள்; பெரும்பாலும் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுபவை.

வேதியியலில் செயற்கைத் தனிமம் (synthetic element) என்பது பூமியில் இயற்கையாகக் காணப்படாமல் செயற்கை முறையில் மட்டுமே தயாரிக்க இயல்கின்ற தனிமம் ஆகும். இதுவரையில் 20 செயற்கைத் தனிமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அணு எண் 99 முதல் 118 வரையிலான தனிமங்கள் இவ்வாறு உருவாக்கப்பட்ட தனிமங்களாகும். இவை யாவும் நிலைப்புத்தன்மை குறைந்தவையாகவும் சிலநூறு நுண்ணொடிகள் முதல் ஓராண்டு வரையிலான அரைவாழ்வுக் காலம் பெற்றவையாகவும் உள்ளன.

இவை தவிர வேறு ஒன்பது தனிமங்கள் முதலில் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டன. ஆனால், பின்னாளில் அவை இயற்கையிலேயே அரிதாகக் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் குறிப்பாக 1940ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புளூட்டோனியம், அணுகுண்டு மற்றும் அணுக்கரு உலை போன்ற பயன்பாடுகளின் காரணமாக எளிய மாந்தருக்கும் அறியப்பட்ட தனிமமாக உள்ளது.

பண்புகள்

[தொகு]

செயற்கைத் தனிமங்கள் கதிரியக்கத் தன்மை கொண்டவையாகவும் விரைவாகச் சிதைவடைந்து பாரங் குறைந்த தனிமங்களாக மாறிவிடக் கூடியவையாகவும் உள்ளன. இவற்றின் அரைவாழ்வுக் காலம் பூமியின் வயதோடு ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. இவை நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றியிருக்கலாம்.[சான்று தேவை] பூமி தோன்றியபொழுது காணப்பட்டதாகக் கருதப்படும் தனிமங்கள் இன்று வரை சிதைவடைந்தபடியே உள்ளன. அணுகுண்டுகள் அல்லது அணுச்சோதனைகளில் ஈடுபடும் அணுக்கரு உலைகளிலும் அணுக்கருப் பிணைவு அல்லது நொதுமி ஈர்ப்புச் செயல்கள் வழியாகத் தோன்றும் துகள் முடுக்கிகளிலும் மட்டும் இத்தகைய செயற்கைத் தனிமங்களின் அணுக்கள் காணப்படுகின்றன.

பூமியின் மேலோடு, வளிமண்டலத்தில் காணப்படும் இயற்கை ஓரிடத்தான்களின் கணக்கிடப்பட்ட நிறைச் சராசரியின் அடிப்படையில் இயற்கை வாழ்வுக்கான அணுநிறை காணப்படுகின்றது. செயற்கைத் தனிமங்களைப் பொருத்த வரையில் அவை தயாரிக்கப்படும் தொகுப்பு முறைகளைச் சார்ந்தே ஓரிடத்தான்கள் உள்ளன. எனவே, இயற்கையில் காணப்படும் ஓரிடத்தான்கள் என்ற கருத்து பொருளற்றதாக இருக்கிறது.

ஆகவே, நிலையான ஓரிடத்தான்களின் அணுக்கருவில் உள்ள துகள்களின் மொத்த எண்ணிக்கை (நேர்மின்னிகளினதும் நொதுமிகளினதும் மொத்த எண்ணிக்கை) செயற்கைத் தனிமங்களின் சாரணுத் திணிவாகக் கொள்ளப்படுகிறது. அதாவது, நீண்ட அரைவாழ்வுக் காலம் கொண்ட ஓரிடத்தானின் அணுக்கருவில் உள்ள துகள்களின் மொத்தம் அடைப்புக் குறிக்குள் பட்டியலிடப்பட்டு சாரணுத் திணிவாகக் கருதப்படுகிறது.

வரலாறு

[தொகு]

செயற்கைத் தனிமங்களின் பட்டியல்

[தொகு]

இங்குத் தரப்பட்டுள்ள தனிமங்கள் பூமியில் இயற்கையாகக் காணப்படாதவை ஆகும். அனைத்தும் யுரேனியப் பின் தனிமங்களாகும். அணு எண் 99 மற்றும் அதைத் தொடர்ந்தவைகள்.

தனிமத்தின் பெயர் வேதியியல்
குறியீடு
அணு
எண்
உறுதியான முதல்
தொகுப்பு
ஐன்ஸ்டைனியம் Es 99 1952
பெர்மியம் Fm 100 1952
மெண்டலீவியம் Md 101 1955
நொபிலியம் No 102 1966
லாரன்சியம் Lr 103 1961
இரதர்ஃபோர்டியம் Rf 104 1966 (உருசியா), 1969 (அமெரிக்கா) *
தூப்னியம் Db 105 1968 (உருசியா), 1970 (அமெரிக்கா) *
சீபோர்கியம் Sg 106 1974
போரியம் Bh 107 1981
ஆசியம் Hs 108 1984
மெய்ட்னீரியம் Mt 109 1982
டார்ம்சிட்டாட்டியம் Ds 110 1994
இரோயன்ட்கெனியம் Rg 111 1994
கோப்பர்நீசியம் Cn 112 1996
உன்னுன்டிரியம் Uut 113 2003
பிளெரோவியம் Fl 114 1999
உன்னுன்பென்டியம் Uup 115 2003
லிவர்மோரியம் Lv 116 2000
உனுன்செப்டியம் Uus 117 2010
அனனாக்டியம் Uuo 118 2002
* கண்டுபிடிப்பு பகிர்ந்துகொள்ளப்பட்டது.

வழக்கமாக தொகுப்புமுறையில் தயாரிக்கப்படும் செயற்கைத் தனிமங்கள்

[தொகு]

அணு எண் 1 முதல் 98 வரையில் உள்ள அனைத்து தனிமங்களும் குறைந்த பட்சம் அரிதாகவாவது பூமியில் காணப்படுகின்றன. ஆனால் இங்கு தரப்பட்டுள்ள தனிமங்கள் வழக்கமாகத் தொகுப்பு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.இயற்கையிலேயே காணப்பட்டாலும் பிரான்சியம் தவிர மற்ற தனிமங்கள் யாவும் தொகுப்புமுறையின் போதே கண்டுபிடிக்கப்பட்டன.

தனிமத்தின் பெயர் வேதியியல்
குறியீடு
அனு
எண்
உறுதியான முதல்
கண்டுபிடிப்பு
டெக்னீசியம் Tc 43 1936
புரோமெத்தியம் Pm 61 1945
அசுட்டட்டைன் At 85 1940
பிரான்சியம் Fr 87 1939
நெப்டியூனியம் Np 93 1940
புளூட்டோனியம் Pu 94 1940
அமெரிசியம் Am 95 1944
கியூரியம் Cm 96 1944
பெர்க்கிலியம் Bk 97 1949
காலிபோர்னியம் Cf 98 1950

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கைத்_தனிமம்&oldid=2919108" இலிருந்து மீள்விக்கப்பட்டது