இந்துஸ்தானி இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: si:හින්දුස්ථානී සංගීතය
வரிசை 49: வரிசை 49:
[[பகுப்பு:இந்துஸ்தானி இசை]]
[[பகுப்பு:இந்துஸ்தானி இசை]]


[[bn:হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত]]
[[de:Ustad]]
[[de:Ustad]]
[[en:Hindustani classical music]]
[[en:Hindustani classical music]]

10:27, 6 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

இந்துஸ்தானி இசை வட இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் சங்கீதப் பாரம்பரியமாகும். கருநாடக இசை போலவே இங்கும் தாளம், இராகம் முக்கியமான அங்கங்களாகும்.

இந்துஸ்தானி இசையின் ஆதி காலம்

வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே[மேற்கோள் தேவை] இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாமகானத்திலிருந்தே தோன்றியவை ஆகும்.

மாற்றங்கள்

13ம் நூற்றாண்டில் சாரங்கதேவரின் காலத்தின் பின் இஸ்லாமியர்கள் வடஇந்தியாவைக் கைப்பற்றிய பின் இந்தியாவின் கலாசாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல இந்திய இசையிலும் மார்றங்கள் ஏற்பட்டன.பாரசீகக் கலையுடன் இருந்த தொடர்பே இந்துஸ்தானிய இசைக்கும் கர்னாடக இசைக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளிக்குக் காரணமாகும்.

இந்துஸ்தானி இசையின் முன்னோடி

வட இந்திய இசை வளர்ச்சியுறக் காரணமாக இருந்தவர்களுள் அமிர்குஸ்ரு முன்னோடியாக இருந்தவர் ஆவர். இவர் பல தாளங்களையும், இராகங்களையும், உருப்படிகளையும், புதிய வாத்தியங்களையும் அறிமுகப் படுத்தினார். கி.பி 14ம், 15ம் நூற்றாண்டுகளில் இந்துஸ்தானி இசை மிகப் பெரிய வளர்ச்சி பெற்றது. வட இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்கள் தம் அரசவையில் இசைக்கலைஞர்களை ஆதரித்து இசைகலையை வளர்த்தார்கள்.

தான்சேன்

இந்துஸ்தானிய இசை வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் தான்சேன் ஆவார். இவர் அக்பரின் அரசவையில் இரத்தினக் கல் போல் விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவரும் பல இராகங்களை கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். கர்நாடக சங்கீத வித்துவான்கள் திருவையாறுக்கு சென்று தியாகராஜரின் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர்.

பிற இசை செல்வாக்கும் தொண்டாற்றியோரும்

வட இந்தியாவில் ஏற்பட்ட பல அரசியல் குழப்பங்களுக்கு உள்ளாகிய இந்துஸ்தானிய இசையும் அரேபியா, மொசப்பத்தேமியா, சின்ன ஆசியா, திபெத் இசைகளின் செல்வாக்கு காணப்படுகின்றது. மீராபாய், சூர்தாஸ், கபீர்தாஸ், துளசீதாஸ் போன்றோர் இந்துஸ்தானிய இசைக்கு பெரும் தொண்டாற்றினார்கள். 17ம் நூற்றாண்டில் மேள, தாட் போன்ற பதங்கள் இந்துஸ்தானிய இசையில் வழக்கத்திற்கு வந்தன. வேங்கடமகி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட 72 மேளகர்த்தாப் பத்ததி இந்துஸ்தானி இசையில் 10 தாட்கள் வகுக்க உதவியது.

உருப்படிகள்

18ம் நூற்றாண்டில் தப்பா என்னும் உருப்படி வகை அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றும் தும்ரி, தரானா, தாதரா போன்ற இலகு செவ்வியல் இசை உருப்படி வகைகள் தோன்றத்தொடங்கின.

வேறு பலரின் சேவைகள்

பலர் இந்துஸ்தானிய இசை சம்பந்தமான பல நூல்களை எழுதியுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்துஸ்தானி இசையை போற்றிப் பாதுகாக்க யாரும் இல்லாத சமயத்தில் விஷ்ணு திகம்பர பலுஸ்கர், பண்டிட் V.N. பாத்கண்டே ஆகிய அறிஞர்கள் பல நூல்களை எழுதினார்கள். இவர்கள் இருவரும் சங்கீத லிபி முறையை அறிமுகப்படுத்தினார்கள். இவர்கள் இருவரும் கல்லூரிகளையும் நிறுவி இசை பயிற்றுவித்தார்கள்.

தற்போது கல்லூரிகளும், சேவைகளும்

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்திய அரசாங்கம் இந்துஸ்தானி இசையை வளர்க்க பல வழிகளிலும் முயற்சி செய்து வருகிறது. டெல்லி, லக்னோ ஆகிய இடங்களில் உள்ள சங்கீத நாடக அகடமி பல இசை விழாக்களையும் இசைப்போட்டிகளையும் நடத்தி இசை உலகில் திறமை உள்ளவர்களை வெளிக்கொணரும் அரிய சேவையை ஆற்றி வருகின்றன. இந்திய வானொலி, தூரதர்ஷன் போன்றவையும் இசை வளர்ச்சிக்கு பெரும் துணை புரிகின்றன. வெளிநாட்டவர்களும் இந்தியாவுக்கு வந்து இந்திய இசையை கற்றுச் செல்கிறனர். மும்பாய், பூனா, பெங்களூர், ஸாஹூர், குவாலியர், பரோடா, தஞ்சாவூர், மைசூர், திருவனந்தபுரம், கொல்கத்தா போன்ற இடங்களிலெல்லாம் இசைக்கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. தற்பொழுது அகில இந்தியாவிலும் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இசை சம்பந்தமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிரபல இந்துஸ்தானி வாத்தியக் கலைஞர்கள்

  • வீணை: Birendra Kishore Roy Chowdhury, Zia Mohiuddin Dagar, Asad Ali Khan
  • விசித்திர வீணை: Lalmani Misra, Gopal Krishna, Gopal Shankar Misra
  • சாரங்கி: ராம் நாராயண்
  • சித்தார்: Imdad Khan, Enayet Khan, ரவி சங்கர், Vilayat Khan, Pandit Habib Khan, Nikhil Banerjee, Rais Khan, Abdul Halim Jaffer Khan, Imrat Khan, Shahid Parvez, Indranil Bhattacharya, Budhaditya Mukherjee, Sanjoy Bandopadhyay
  • Sarod: Allauddin Khan, Brij Narayan , Hafiz Ali Khan, Radhika Mohan Moitra, Timir Baran, Ali Akbar Khan, Amjad Ali Khan, Buddhadev Dasgupta, Vasant Rai, Sharan Rani, Aashish Khan
  • Surbahar: Imdad Khan, Enayet Khan, Annapurna Devi, Imrat Khan
  • ஷெனாய்: பிஸ்மில்லா கான்
  • Bansuri: Pannalal Ghosh, Hariprasad Chaurasia, Raghunath Seth
  • Santoor: Shivkumar Sharma, Bhajan Sopori, Omprakash Chaurasiya
  • Sarangi: Ram Narayan, Bundu Khan
  • Esraj: Ashesh Bandopadhyay, Ranadhir Roy
  • வயலின்: V. G. Jog, Gajananrao Joshi, N. Rajam
  • தபேலா: Ahmed Jan Thirakwa, Chatur Lal, Shamta Prasad, Kanthe Maharaj, Alla Rakha, Anokhelal Misra, Keramatullah Khan, Kishen Maharaj, Zakir Hussain, Aban E. Mistry

மேலும் காண்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துஸ்தானி_இசை&oldid=589675" இலிருந்து மீள்விக்கப்பட்டது