செனாய்
ஷெனாய் அல்லது செனாய் என்பது நாதசுரம் போன்ற குழல்வகை காற்றிசைக் கருவி. வட இந்தியாவில் திருமணம் போன்ற நன்னாட்களிலும் ஊர்வலங்களிலும் வாசிக்கப்படும் இசைக்கருவி. குழல் போன்ற இக்கருவி, வாய் வைத்து ஊதும் மேற்புறத்தில் இருந்து கீழாக செல்லும் பொழுது குழாய் விரிவாகிக்கொண்டே போவது. இதில் ஆறு முதல் ஒன்பது துளைகள் இருக்கும். இதில் வாய் வைத்து ஊதும் பகுதியில் இரண்டு இரட்டைச் சீவாளிகள் (நான்கு) இருக்கும்.
உசுத்தாது பிசுமில்லா கான் புகழ்பெற்ற செனாய்க் கலைஞர். ஓரளவுக்குப் பரவலாக அறியப்பட்ட பிற கலைஞர்கள்: அகமதியா, ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜாஸ் இசைக் கலைஞர் யூசஃவ் லத்தீஃவ். ரோலிங்கு ஸ்டோன் (Rolling Stone) என்னும் இசைக்குழுவில் டேவ் மேசன் என்பவர் 1968 இல் ஸ்ட்ரீட் ஃவைட்டிங் மேன் (Street Fighting Man) என்னும் பாட்டில் செனாய் வாசித்தார்.
இசைக்கருவியின் வரலாறு
[தொகு]செனாய் இசைக்கருவி பாம்பாட்டிக்காரர்கள் பயன்படுத்தும் மகுடி அல்லது புங்கி (Pungi) என்னும் கருவியை மேம்படுத்தி காசுமீரப்பகுதியில் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது (உறுதியான செய்திகள் ஏதும் இப்போதைக்குக் கிடைக்கவில்லை).[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shehnai | musical instrument". Britannica. www.britannica.com.
- ↑ "shehnai". metmuseum.org. Allen Roda. பார்க்கப்பட்ட நாள் 27 May 2019.
- ↑ Gazetteer of the Union Territory Goa, Daman and Diu: district gazetteer, Volume 1. Gazetteer Dept., Govt. of the Union Territory of Goa, Daman and Diu. 1979.