மா. அமரேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட நம்பத்தக்க சான்றுகள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
links are not acceptable, If you disagree talk on my main user page
வரிசை 59: வரிசை 59:
அறம் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தையும் அமரேசன் நடத்தி வருகிறார்.
அறம் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தையும் அமரேசன் நடத்தி வருகிறார்.


# நடுங்கும் நிலம் நடுங்கா மனம்<ref>{{Cite web |url=https://www.commonfolks.in/books/d/nadungum-nilam-nadungaa-manam-poovulagu |title=நடுங்கும் நிலம் நடுங்கா மனம் (பூவுலகு) |website=CommonFolks |access-date=2021-07-02}}</ref>
# நடுங்கும் நிலம் நடுங்கா மனம்
# கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்<ref>{{Cite web |url=https://www.commonfolks.in/books/d/kannukku-pulapadaatha-thanneerum-pulapadum-unmaigalum-poovulagu |title=கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் (பூவுலகு) |website=CommonFolks |access-date=2021-07-02}}</ref>
# கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்
# சுற்றுச்சூழலும் சாதியப் புனிதமும்<ref>{{Cite web |url=https://www.panuval.com/sutruchuzhalum-saathiya-punithamum-10015463 |title=சுற்றுச்சூழலும் சாதியப் புனிதமும் |website=www.panuval.com |language=en |access-date=2021-07-02}}</ref>
# சுற்றுச்சூழலும் சாதியப் புனிதமும்
# சேரி ரெண்டுபட்டால்<ref>{{Cite web |url=https://www.commonfolks.in/books/d/seri-rendupattaal |title=சேரி ரெண்டுபட்டால் |website=CommonFolks |access-date=2021-07-02}}</ref>
# சேரி ரெண்டுபட்டால்
# இளையராசாவின் இசைப்பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள்.<ref>{{Cite web |url=https://in.pinterest.com/maamaresan/ |title=Ma.Amaresan (maamaresan) - Profile |website=Pinterest |language=en |access-date=2021-07-02}}</ref><ref>{{Cite web |url=https://www.pinterest.com/pin/727261039808929468/ |title=Pin on amaresan |website=Pinterest |language=en |access-date=2021-07-02}}</ref>
# இளையராசாவின் இசைப்பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள்
# ஆத்திசூடி மீள் வாசிப்பு
# ஆத்திசூடி மீள் வாசிப்பு<ref>{{Cite web |url=https://www.fliptamil.com/books/view/15746.aathichudi-meel-vaasippu |title=ஆத்திசூடி மீள் வாசிப்பு |website=www.fliptamil.com |access-date=2021-07-02 |Aathichudi meel vaasippu Book by மா. அமரேசன் ( None) Reviews @ fliptamil.com}}</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

12:41, 21 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்



மா. அமரேசன்
படிமம்:எழுத்தாளர் மா. அமரேசன்.jpg
பிறப்புசூலை 15, 1968
கரிக்காத்தூர்,
திருவண்ணாமலை மாவட்டம்
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்ஆரணி
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்அமர்
கல்விமுதுகலை சமூகவியல்,
முதுகலை சமூகப்பணி
பணிசமூகப்பணி
அறியப்படுவதுஎழுத்தாளர், புத்த சமய ஆய்வாளர்
சமயம்பௌத்தம்
பெற்றோர்மாசிலாமணி (தந்தை),
மனோன்மணி (தாய்)
பிள்ளைகள்மகள் - 2, மகன் - 1
வலைத்தளம்
https://ma-amaresan.blogspot.com

மா. அமரேசன் (M. Amaresan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆரணி நகரில் வாழ்ந்து வரும் ஒரு தமிழ் எழுத்தாளராவார்.

விளிம்புநிலை மக்களின் பொருளாதார மேம்பாடு, சமூக நிறுவனங்களை உருவாக்குதல், பெண்ணியம், நிலவுரிமை, நீர்வளம், சுற்றுச்சூழல், நுன்நிதியம், ஆகியனவற்றை மையமாக வைத்து எழுதி வருவதோடு புத்தசமய ஆய்வாளராகவும் அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு

அமரேசன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்திலுள்ள கரிக்காத்தூர் கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் தேதியன்று பெ. மாசிலாமணி, ப. மனோன்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை ஓர் இராணுவ வீர்ராவார்.

கல்வி

கரிக்காத்தூர், அரக்கோணம், ஆரணி என பல்வேறு ஊர்களில் தொடக்கக் கல்வியை முடித்த அமரேசன் சென்னை தண்டையார்ப்பேட்டையில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். அழகப்பா பல்கலைக்கழகத்தில் பொதுநிர்வாகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பும், முதுகலை சமூகவியல் பட்டத்தை சேலம் வினாயகாமிசன் பல்கலைக்கழகத்திலும், தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூகப்பணி பட்டமும் பெற்றார்.

தொழில்

1995 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு உரிமைசார் தொண்டு மற்றும் நுண்நிதி நிறுவனங்களிலும் இவர் களப்பணியாளர் முதல் ஒருங்கிணைப்பாளர் வரையிலான பதவிகளில் பணிபுரிந்தார்.

2013 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒப்பந்த பணியாளராகவும், புதுவாழ்வுத் திட்டத்தில் உதவி திட்ட மேலாளராகவும் பணிசெய்தார். தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள பீகார் கிராமிய ஊரக கிராமிய ஊரக வாழ்வாதார மேம்பாட்டு சங்கத்தில் தமிழ்நாடு தன்னார்வ வள மையத்தின் ஒப்பந்த பணியாளராகப் பணிபுரிகிறார்.

புத்தசமயப் பணி

தமிழகத்தில் பௌத்த கூட்டியக்கம் என்ற அமைப்பை உருவாக்கிய அமரேசன் அதன் வழியாக தமிழகத்திலுள்ள பல பௌத்த அமைப்புகளோடு தொடர்பு கொண்டு சென்னை அடையாறிலுள்ள மணிமண்டபத்தில் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 அன்று பௌத்தம் ஏற்போம் என்ற ஒரு நிகழ்வை நடத்தினார். இதன்பின்னர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமரேசன் புத்த சமயக் கருத்துகளை பரப்புரை செய்வதோடு மகாமங்கலா என்ற புத்தசமய திருமண இணையதளத்தையும் நட்த்தி வருகிறார்.

எழுதிய புத்தகங்கள்

மறுமலர்ச்சி இதழில் தொடங்கிய அமரேசனின் கட்டுரைப் பயணம் புதிய கோடங்கி, காக்கைச் சிறகினிலே, புதிய பார்வை, தமிழ்ச்செல்வி போன்ற இதழ்களிலும் தொடர்ந்தது. அறம் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தையும் அமரேசன் நடத்தி வருகிறார்.

  1. நடுங்கும் நிலம் நடுங்கா மனம்
  2. கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்
  3. சுற்றுச்சூழலும் சாதியப் புனிதமும்
  4. சேரி ரெண்டுபட்டால்
  5. இளையராசாவின் இசைப்பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள்
  6. ஆத்திசூடி மீள் வாசிப்பு

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._அமரேசன்&oldid=3200912" இலிருந்து மீள்விக்கப்பட்டது