வித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ml:വിത്ത്
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: eu:Hazi
வரிசை 40: வரிசை 40:
[[es:Semilla]]
[[es:Semilla]]
[[et:Seeme]]
[[et:Seeme]]
[[eu:Hazi (botanika)]]
[[eu:Hazi]]
[[fa:بذر]]
[[fa:بذر]]
[[fi:Siemen]]
[[fi:Siemen]]

19:40, 18 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

பழமும் அதன் விதைகளும்
பல வகையான அவரை விதைகள்
இருவித்திலைத் தாவரமான வெண்ணெய்ப் பழத்தின் வித்துறை, வித்தகவிழையம், முளையம் போன்றவற்றைக் காட்டும் வரிப்படம்

வித்து அல்லது விதை என்பது ஓர் தாவரம் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ள, தன்னுள் உருவாக்கும் ஓர் தாவர அங்கமாகும். இந்த வித்தானது விழுந்து அல்லது விதைக்கப்பட்டு முளைப்பதன் மூலம் அவ்வினத்தைச் சேர்ந்த புதிய உயிரினம் உருவாகும்.

பலவகையான விதைகள் உள்ளன. சில தாவரங்கள் ஒரே ஒரு விதையை உருவாக்கும்; வேறு சில பன்மடங்கு விதைகளை உருவாக்குகின்றன; இன்னும் சில மிகக் குறைவான விதைகளை உருவாக்குகின்றன, மற்றும் சில அளவில் பெரிய விதைகளை உருவாக்குகின்றன. விதைகள் பொதுவாக கடினமான மேலுறை கொண்டும் அளவில் சிறியதாகவும் இருக்கும். அளவில் பெரிய தேங்காய் ஓர் விதையே.

விதைகள் நீர், காற்று மற்றும் அளவான வெப்பநிலை போன்ற தமக்கு சாதகமான சூழல் வழங்கப்படுகையில் முளைத்தல் செயல்முறை மூலம் நாற்றாக உருவாகும். பின்னர் அந்த நாற்று விருத்தியடைந்து புதிய தாவரமாக வளரும். முளைத்தல் செயல்முறைக்கு சூரிய ஒளி அவசியமில்லை. சில விதைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வித்து உறங்குநிலை என அழைக்கப்படும் ஒரு நிலையில் இருந்த பின்னரே முளைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.

விதைகளின் பருப்புப் பகுதியில் அவை வளர்வதற்குத் தேவையான உணவு சேமிக்கப்பட்டுள்ளதால் இத்தகைய விதைகள் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியோருக்கு நல்ல உணவாக அமைகிறது.

பூக்கும் தாவரங்களில் விதைகள் தாவரங்களின் பழங்களின் உள்ளே இருக்கின்றன. வித்துமூடியிலித் தாவரங்களில் விதையானது மூடி வைக்கப்படாமல் வெறுமையாக இருக்கும். மக்கள் விவசாயம் செய்யும் நெல்,கோதுமை,கம்பு,சோளம் முதலிய பலவகை தானியங்களும் விதைகளே.

விதையின் வெளிப்புறம் பாதுகாப்பிற்காக உறை ஒன்றால் சூழப்பட்டுள்ளது. இது வித்துறை அல்லது உமி என அழைக்கப்படுகிறது.



உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்து&oldid=1027629" இலிருந்து மீள்விக்கப்பட்டது