உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்து ஆறு (யமுனை துணை ஆறு)

ஆள்கூறுகள்: 26°26′17″N 79°12′43″E / 26.43806°N 79.21194°E / 26.43806; 79.21194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்து ஆறு
Sindh River
சிந்து ஆறு, யமுனை ஆற்றின் துணையாறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம்
சிறப்புக்கூறுகள்
மூலம்மால்வா பீடபூமி
 ⁃ அமைவுவிதிஷா மாவட்டம், மத்தியப் பிரதேசம்
முகத்துவாரம்யமுனை ஆறு
 ⁃ அமைவு
இட்டாவா மாவட்டம், உத்தரப் பிரதேசம்
 ⁃ ஆள்கூறுகள்
26°26′17″N 79°12′43″E / 26.43806°N 79.21194°E / 26.43806; 79.21194
நீளம்470 km (290 mi)
வடிநில அளவு26,699 km2
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுகுவாரி ஆறு
 ⁃ வலதுபகுஜ் ஆறு

சிந்து ஆறு (Sindh River) என்பது யமுனை ஆற்றின் துணை ஆறாகும். இது இந்திய மாநிலங்களானமத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் வழியாகப் பாய்கிறது.

ஆற்றோட்டம்

[தொகு]

மத்தியப்பிரதேசத்தின் விதிசா மாவட்டத்தில் உள்ள மால்வா பீடபூமியில் சிந்து உருவாகிறது. இது மத்தியப் பிரதேசத்தின் குனா, அசோக்நகர், சிவபுரி, ததியா, குவாலியர் மற்றும் பிண்டு மாவட்டங்கள் வழியாக வடக்கு-வடகிழக்கு நோக்கிப் பாய்கிறது. பின்னர், உத்தரப் பிரதேசத்தின் ஜாலவுன் மாவட்டத்தில் யமுனா ஆற்றுடன் சம்பல் ஆற்றிற்கு முன்பாக இணைகிறது. இதன் மொத்த நீளம் 470 கிலோமீட்டர்கள் (290 mi) ஆகும். இதில் 461 கிலோமீட்டர்கள் (286 mi) மத்தியப் பிரதேசத்திலும் 9 கிலோமீட்டர்கள் (5.6 mi) உத்தரப் பிரதேசத்தில் பாய்கின்றது.[1]

துணை நதிகள்

[தொகு]

சிந்துவின் முக்கிய துணை நதிகள் பர்பதி, பஹுஜ், குவாரி (குன்வாரி) மற்றும் மஹுவார் ஆகும்.[1] மஹுவார் ஆறு உள்ளூரில் சமோஹா ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது முன்னாள் கரேரா வனவிலங்கு சரணாலயம் வழியாகச் செல்கிறது.

அணை

[தொகு]

சிவபுரி மாவட்டத்தில் சிந்து ஆற்றின் குறுக்கே மணிகேதா அணை கட்டப்பட்டுள்ளது. மோகினி சாகர் எனப் பெயரிடப்பட்ட தடுப்பு அணை கீழ்நோக்கி அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Water Resources". ENVIS Centre of Madhya Pradesh's State of Environment. Archived from the original on 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Dams, Rivers & People Dams, Rivers & People" (PDF). Archived from the original (PDF) on 5 November 2009.