உள்ளடக்கத்துக்குச் செல்

குவாரி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவாரி ஆறு (Kwari River) என்பது குன்வாரியின் ஆறு என்றும் என்று அழைக்கப்படுகிறது. இது மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேசம் சியோப்பூர், மொரினா, பிகைண்ட் மாவட்டங்கள் வழியாகப் பாய்கிறது.

நிலவியல்[தொகு]

குவாரி ஆறு தேவபுரா கிராமத்திற்கு அருகில் உருவாகிறது. குவாரி என்பது சிந்து நதியின் துணை நதியாகும். இது இட்டாவா மாவட்டத்தில் சிந்து நதியுடன் கலக்கிறது.[1] சிந்து ஆறு கீழ் நோக்கிப் பாய்ந்து பக்னாடாவில் யமுனை ஆறுடன் இணைகிறது. பிஜெய்பூர் மற்றும் கைலாரஸ் நகரங்கள் இந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.[2] இந்த ஆற்றின் மீது குவாரி பாலம் 1962இல் கட்டப்பட்டது. குவாரி ஆற்றின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 23 999 சதுர கி.மீ. ஆகும்.

Map


கலாச்சாரம்[தொகு]

இந்த ஆறு குறித்த செய்தி மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2]

ஆற்றின் மேற்பகுதியில் உள்ள விவசாயிகள் ஆற்றின் நீரைத் திசை திருப்புவதால் கடைமடைப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.[3]

சொற்பிறப்பியல்[தொகு]

புராணத்தின் படி, ஒரு உள்ளூர் கன்னிப்பெண் ரகசியமாகth தனது இரண்டு காளைகளைth தண்ணீர் குடிக்கக் கிணற்றுக்கு அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. நீர் மட்டம் மிகக் குறைவாக இருந்ததால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கொடுக்க முடியவில்லை. இருப்பினும், சிறுமி தனது ஆடைகளைக் கழற்றி பிரார்த்தனை செய்வதன் மூலம் தண்ணீரை உயர்த்த முடிந்தது. இதனை அறிந்த ஒருவன், அவளுடைய சக்தியைக் காண ஆர்வமாகக் கிணற்றுக்கு அவளைப் பின்தொடர்ந்தான். அந்த நபர் தனது நிர்வாணத்தைக் கண்டதை அந்தப் பெண், வெட்கத்தில் கிணற்றில் குதித்தாள். பின்னர் கிணற்றிலிருந்து நீர் பொங்கி நீரோட்டமாக மாறியது. எனவே அந்த ஆற்றிற்கு “கன்னி ஆறு” எனப் பொருள்படும் வகையில் "குவாரி நதி" என்று பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. 2.0 2.1 "Facts and Information about Kwari River". www.indiamapped.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-01.
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாரி_ஆறு&oldid=3183052" இலிருந்து மீள்விக்கப்பட்டது