சாம் சி. எஸ்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம் சி. எஸ்.
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்இந்திய ஒன்றியம், கேரளம், மூணார்
இசை வடிவங்கள்திரைப்பட பின்னணி இசை
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர்
இசைத்துறையில்2010–தற்போது வரை

சாம் சி. எஸ். (Sam C. S.) என்பவர் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆவார், இவர் முதன்மையாக தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். இவர் ஓர் இரவு என்ற பரபரப்பூட்டும் தமிழ் திரைப்படம் வழியே அறிமுகமானார். பின்னர் அறிவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான அம்புலி படத்தில் பணியாற்றினார்.[1][2][3][4][5] இவர் பணியாற்றிய குறிப்பிடத்தக்க படங்களாக கைதி, புரியாத புதிர், விக்ரம் வேதா, ஒடியன், அடங்க மறு ராகெட்ரி: நம்பி விளைவு, இரவுக்கு ஆயிரம் கண்கள், சாம்ஹோய், நோட்டா போன்றவை ஆகும்

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சாம் இந்திய ஒற்றியம், தமிழ்நாட்டின், தேனியில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். தேனி, ராயப்பன் பட்டியில் உள்ள புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரியில் எம்.சி.ஏ மற்றும் எம்பிஏ பட்டப்பபடிப்புகளை முடித்தார். பிறகு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

தொழில்[தொகு]

சாமின் இசை ஆர்வமும் இசையை உருவாக்குவதற்கான உந்துதலும் இவரை வேலையை விட்டுவிட்டு பின்னணி இசை, திரைப்படப் பாடல்களுக்கு இசை அமைக்கும் பணியில் ஈடுபட வழிவகுத்தது.[6] மெல்ல மெல்ல திரைப்பட இசைத்துறையில் கால்பதிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து மெல்லிசை என்ற இசை பரபரப்பூட்டும் திரைப்படத்துக்கு இசையமைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது, பின்னர் அது புரியாத புதிர் என பெயர் மாற்றப்பட்டது.[7][8]

இந்த காலகட்டத்தில் இவர் நிறைய விளம்பரங்களுக்கு இசையமைத்தார், இதன் வழியாக இரட்டை இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரியை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அவர்கள் இவருக்கு விக்ரம் வேதா படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பை வழங்கினார். படத்தின் இசை பெருவெற்றியை ஈட்டி, இவருக்கு தமிழ் திரைப்படத் துறையில் உறுதியான பெயரைப் பெற்றுத் தந்தது.[9]

சாம் தனது அடுத்த பெரிய வெற்றியை 2018 இல் பெற்றார், இயக்குனர் வி. ஏ. ஸ்ரீகுமார் மேனன் இவருக்கு மோகன்லால் நடித்த ஒடியன் படத்தின் பின்னணி இசை வாய்ப்பை வழங்கினார்.

இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு[தொகு]

இசையமைப்பாளராக

ஆண்டு தமிழ் பிற மொழிகள்) மொழிமாற்ற வெளியீடுகள் குறிப்புகள்
2010 ஓர் இரவு (2010 திரைப்படம்)
2012 அம்புலி அம்புலி (தெலுங்கு)
2016 கடலை
2017 விக்ரம் வேதா விக்ரம் வேதா (2018) (இந்தி)
புரியாத புதிர் மெல்லிசை என்ற பெயரில் இசை வெளியிடப்பட்டது
2018 6 அத்தியாயம் ஒரு பாடல்; விளம்பரம்
தியா கனம் (தெலுங்கு) இதன் இசை கரு என்ற பெயரில் வெளியிடப்பட்டது
இரவுக்கு ஆயிரம் கண்கள்
மிஸ்டர். சந்திரமௌலி
கடிகார மனிதர்கள்
இலட்சுமி இலட்சுமி (தெலுங்கு)
வஞ்சகர் உலகம்
நோட்டா நோட்டா (தெலுங்கு)
ஒடியன் ( மலையாளம் ) பின்னணி இசை மட்டுமே
அடங்க மறு
2019 இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
கே - 13
100
அயோக்யா
தேவி 2 அபிநேத்ரி 2
கொரில்லா
கைதி
அர்ஜுன் சுராவரம் (தெலுங்கு)
ஜடா
2021 அனு அன்ட் அர்ஜுன் மொசகல்லு (தெலுங்கு)
2022 ராகெட்ரி: நம்பி விளைவு ராக்கெட்ரி: நம்பி விளைவு (இந்தி மற்றும் ஆங்கிலம்)
ராஜவம்சம்
கசடதபற (திரைப்படம்)
யாருக்கும் அஞ்சேல்
எண்ணித் துணிக
டூ ஸ்ட்டோக் (மலையாளம்)
சூர்பனகை நேனே நா (தெலுங்கு)
பெல்பாட்டம்
ஃப்ளாஷ் பேக்
சலூன்
கண்ணமூச்சி
ரவுடி பேபி
கடவுள் சகாயம் நடன சபா (மலையாளம்)
# லல்
சபாபதி
கோஸ்டி
ஆர்டி 69 (தெலுங்கு)

பாடகராக

ஆண்டு திரைப்படம் பாடல்கள்
2010 ஓர் இரவு (2010 திரைப்படம்) உச்சி மலையில்
காதலா
2012 அம்புலி அம்புலி கருப்பொருள் இசை
2016 கடலை கண்ண்குள்ளே வந்து
ஆதங்கரை
2017 விக்ரம் வேதா கருப்பு வெள்ளை
எது நியாயம்
ஒரு கத சொலட்டா
2018 இரவுக்கு ஆயிரம் கண்கள் ஏ பா எப்பப்பா
நைட்ஸ் ஆஃப் நெவர்லேண்ட்
வின்ட்ஸ் ஆப் டார்கஸ்ட் ஹவர்
மிஸ்டர். சந்திரமௌலி கல்லூலியே
கண்டபடி
ஏதேதோ அனேனே
மிஸ்டர். சந்திரமௌலி கருப்பொருள் இசை
கடிகார மனிதர்கள் தீர ஒரு
ஏனோ
இலட்சுமி இறைவா இறைவா
நோட்டா யார் காளிக்கு
அடங்க மறு ஆங்கு வாங்கு
2019
கே - 13 ஒரு சாயங்காலம்
100 நண்பா
தேவி 2 லவ், லவ் மீ
அபிநேத்ரி 2 லவ், லவ் மீ
கைதி த ஹாட் பிரியாணி
எத்ர்னல் லவ் ஆப் பாதர்
நீள் இரவில்
நைட் ஆப் டார்க்
அர்ஜுன் சுராவரம் பேங் பேங்
வரவிருக்கிறது ராஜவம்சம் மானே உன்ன
மாப்பிள்ள வந்தா

பாடலாசிரியராக

ஆண்டு திரைப்படம் பாடல்கள்
2017 புரியாத புதிர் மழைகுள்ளே
விக்ரம் வேதா போகாத என்னவிட்டு
2018 இரவுக்கு ஆயிரம் கண்கள் உயிர் உருவாத
ஏ பா எப்பப்பா
ஏன் பெண்ணே நிய்யும்
மிஸ்டர். சந்திரமௌலி கல்லுலியே
தீராத வலி
நோட்டா யார் காளிக்கு
2019 100 நண்பா
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கண்ணம்மா
ஏண்டி ரசாத்தி
ஏனோ பெண்ணே
கொரில்லா யாரடியோ
சிம்ப் பாடல்

விருதுகள்[தொகு]

ஆனந்த விகடன் சினிமா விருதுகள்

விஜய் விருதுகள்

குறிப்புகள்[தொகு]

 

  1. "Director Vijay's film with Prabhudheva could be Tamil remake of 'Charlie'". 23 September 2017.
  2. "Adanga Maru: Jayam Ravi announces title of his next film, will go on floors on 14 December- Entertainment News, Firstpost".
  3. http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/nov/22/mr-chandramouli--to-get-started-1708521.html
  4. https://www.thenewsminute.com/article/shalini-pandey-arjun-reddy-fame-team-jiiva-next-73771
  5. http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/dec/26/jiivas-next-a-heist-comedy-1736786.html
  6. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/for-both-puriyaatha-puthir-and-vikram-vedha-i-composed-the-music-for-the-script-first-sam-cs/articleshow/60234027.cms
  7. "New trailer of Vijay Sethupathy's Puriyatha Puthir is out! Watch it here". 22 August 2017.
  8. "Puriyatha Puthir: Five reasons to watch this Vijay Sethupathi film - Times of India".
  9. "Madhavan at Vikram Vedha success meet: 'I've consumed 240 reviews since the film's release'- Entertainment News, Firstpost".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_சி._எஸ்.&oldid=3944410" இலிருந்து மீள்விக்கப்பட்டது