உள்ளடக்கத்துக்குச் செல்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
சுவரொட்டி
இயக்கம்ரஞ்சித் ஜெயக்கொடி
தயாரிப்புபாலாஜி காபா
கதைரஞ்சித் ஜெயக்கொடி
இசைசாம் சி. எஸ்.
நடிப்புஹரீஷ் கல்யாண்
சில்பா மஞ்சுநாத்
மா கா பா ஆனந்த்
பால சரவணன்
ஒளிப்பதிவுகவின் ராஜ்
படத்தொகுப்புபவன் ஸ்ரீகுமார்
கலையகம்மாதவ் மீடியா
வெளியீடு15 மார்ச் 2019
ஓட்டம்153 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் (Ispade Rajavum Idhaya Raniyum [1] ) என்பது ரஞ்சித் ஜெயக்கொடி எழுதி இயக்கிய 2019 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழி காதல் பரபரப்பூட்டும் படம் ஆகும்.[2] இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மா கா பா ஆனந்த், பாலா சரவணன், சுரேஷ், பொன்வன்னன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பினை பவன் ஸ்ரீகுமாரும் ஒளிப்பதிவை கவின் ராஜும் செய்துள்ளனர்.[3][4] இத்திரைப்படம் 15 மார்ச் 2019 அன்று வெளியிடப்பட்டது.

கதைக்களம்

[தொகு]

இத்திரைப்படத்தின் கதை வேலையில்லாத இளைஞன் கெளதம் மற்றும் அவரது காதலிக்க விரும்பும் தாரா ஆகியோரைச் சுற்றிச் சுழல்கிறது. தாரா ஒரு வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். அவருக்கு அவரின் குடும்ப நண்பர் ரோஹித் உடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது. கெளதமின் பெற்றோர் விவாகரத்து பெற்றவர்கள் ஆவர். மேலும், அவரது தாயார் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். கெளதம் தனது தாயை வெறுக்கிறார். இதன் காரணமாக அவரது குழந்தைப்பருவம் இனிமையானதாக இல்லாமல் இருந்தது. கெளதமால் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத இயலாது. அவர் அதிகப்படியான உரிமை கொண்டாடக்கூடிய, மற்றவரை குற்றம் கூறக்கூடியவராகவும் இயல்புடையவர். மறுபுறம், தாரா, ஒரு சுதந்திரமான உற்சாகமான பெண். அவள் கெளதமைப் புரிந்து நடந்து கொள்கிறாள். ஒரு குறிப்பிட்ட நிலை வரை கெளதமைப் பொறுத்துக்கொள்கிறாள். அவன் கோபம் உச்சத்தை அடையும் போது, அவள் கெளதமுடனான தன் உறவை முறித்துக் கொள்கிறாள். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.

நடிகர்கள்

[தொகு]
  • கெளதமாக ஹரீஷ் கல்யாண்
  • தாராவாக சில்பா மஞ்சுநாத்
  • கெளதமின் நண்பன் ஆனந்தாக மா கா பா ஆனந்த்
  • கெளதமின் நண்பனாக பாலா சரவணன்
  • தாராவின் தந்தையாக சுரேஷ்
  • கெளதமின் தந்தையாக பொன்வண்ணன்
  • கெளதமின் தாய் சாருலதாவாக லிசி ஆண்டனி
  • சாருலதாவின் இரண்டாவது கணவராக வர்கீஸ் மாத்யூ
  • மோட்டார் வாகன ஓட்டுநராக அஸ்வந்த் திலக்
  • ரோகித்தாக ஆதித்யா
  • ரோகித்தின் நண்பனாக கார்த்திக் ராஜ்
  • கெளதமின் நண்பனாக மாரி
  • வழக்கறிஞராக ராஜ்மோகன்
  • தாராவின் தாயாக சுஜாதா பஞ்சு
  • திவ்யா
  • சிறுவயது கெளதமாக மாஸ்டர் அவினாஷ்
  • போதை மருந்துக்கு அடிமையானவராக ரஞ்சித் ஜெயக்கொடி (கேமியோ தோற்றம்)

தயாரிப்பு

[தொகு]

முன்னதாக புரியத புதிர் படத்தை இயக்கிய இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இந்த திரைப்படத்தை அறிவித்தார்.[5] இத்திரைப் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார் மற்றும் பியார் பிரேமா காதலுக்குப் பிறகு கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படமாக இது குறிப்பிடப்படுகிறது.[6] படத் தலைப்பில் இஸ்பேட் ராஜா என்ற சொற்றொடர் கிங் ஆஃப் ஸ்பேட்ஸின் பொருளைக் குறிக்கிறது, அதே நேரத்தில் படத்தின் தலைப்பில் இதய ராணி என்பது இதயங்களின் ராணி என்பதைக் குறிக்கிறது.

பிக் பாஸ் தமிழின் இரண்டாம் சீசனின் வெற்றிக்குப் பிறகு ஸ்டார் விஜய் ஒளிபரப்பிய பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இந்த படத்திற்கான சுவரொட்டியன் முதல் தோற்றம் 14 அக்டோபர் 2018 அன்று விஜய் சேதுபதியால் வெளியிடப்பட்டது.[1] 6 பிப்ரவரி 2019 அன்று வெளியிடப்பட்ட முன்னோட்டப் படம் அர்ஜுன் ரெட்டியின் மறு ஆக்கமாக வரவிருக்கும் மற்றொரு காதல் படமான வர்மாவின் ஒளிப்படங்களை ஒத்திருந்தது.[7][8][9]

படத்தின் பாடல்கள் சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாக்கப்பட்டன. இந்த இசைத்தொகுப்பில் ஐந்து பாடல்கள் உள்ளன, அவை இறுதியில் பார்வையாளர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றன.[10][11] அனிருத் ரவிச்சந்தர் பாடிய கண்ணம்மா படத்தின் முதல் பாடல் 2019 ஜனவரி 9 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகியது.[12][13]

விஜய் சேதுபதி படத்தின் இசையமைப்பாளர் சாம் சி. எஸ். அவர்களால் பின்னணி பாடகராக களம் இறக்கப்பட்டதாகவும், படத்தின் ஏய் கடவுளே என்ற பாடலுக்கு தனித்துவமான குரலைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக உண்மையில் அவர் ஒரு பின்னணிப் பாடகராக அறிமுகமானார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.[14] குறிப்பிட்ட பாடல் 24 ஜனவரி 2019 அன்று படத்தின் இரண்டாவது தனிப்பாடலாக வெளியிடப்பட்டது.[15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Harish Kalyan's next titled Ispade Rajavum Idhaya Raniyum". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.
  2. "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!". samayam Tamil. 2018-10-14. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.
  3. RajKumar (2018-10-15). "Ispade Rajavum Idhaya Raniyum Tamil Movie (2019) | Cast | Songs | Teaser | Release Date". News Bugz. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.
  4. "Ispade Rajavum Idhaya Raniyum Starring Harish Kalyan, Shilpa Manjunath". https://silverscreen.in/videos/ispade-rajavum-idhaya-raniyum-starring-harish-kalyan-shilpa-manjunath/. 
  5. "First look out! Tamil star Harish Kalyan in Ispade Rajavum Idhaya Raniyum, out! See photo inside | Entertainment News". www.timesnownews.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.
  6. "Harish Kalyan plays a boxer in Ranjit's next". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.
  7. "Ispade Rajavum Idhaya Raniyum trailer: Harish Kalyan starrer is filled with love and passion". The Indian Express (in Indian English). 2019-02-06. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  8. "Trailer of Harish Kalyan-starrer Ispade Rajavum Idhaya Raniyum is out". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  9. "அர்ஜுன் ரெட்டியை நியாபகப்படுத்தும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்". Indian Express Tamil. 2019-02-06. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  10. Ispade Rajavum Idhaya Raniyum Tamil Mp3 Songs Download, பார்க்கப்பட்ட நாள் 2019-02-07
  11. "Sam CS to wrap Ispade Rajavum Idhaya Raniyum - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  12. "Anirudh sings for Ispade Rajavum Idhaya Raniyum". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  13. "Anirudh croons for 'Ispade Raajavum Idhaya Raniyum' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.
  14. "Vijay Sethupathi turns as singer for Sam CS". www.thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-20.
  15. "Here's Yei Kadavule, the second single from Harish Kalyan's Ispade Rajavum Idhaya Raniyum". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-02-07.