உள்ளடக்கத்துக்குச் செல்

புரியாத புதிர் (2017 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரியாத புதிர் (Puriyatha Puthir (ஆங்கில மொழி: Mystifying Puzzle) என்பது 2017 இல் வெளிவந்த தமிழ் உளவியல் திகில் திரைப்படம் ஆகும். இதனை ரெபெல் படமனை நிறுவனம் தயாரித்தது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கினார். சாம் சி. எஸ். பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையமைத்ததுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் என்பவர் ஒளிப்பதிவாளராகப் பனிபுரிந்தார்.[1] 2013 ஆம் ஆண்டு படப்பிடிப்புத் துவங்கியது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிடுவதில் தாமதம் செய்ததால் செப்டம்பர் 1, 2017 இல் தான் படம் வெளியானது.[2]

கதைச் சுருக்கம்[தொகு]

ஒரு பெண் மாடியில் நின்றுகொண்டு ஒருவருக்கு செல்லிடத் தொலைபேசியின் மூலம் அழைப்பு விடுத்து மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறார். கதையின் நாயகனான கதிர் (விஜய் சேதுபதி) ஒரு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என நினைக்கிறார். மூன்று மாதங்கள் கழித்து, கதிரும் அவருடைய நண்பர்களான வினோத், டீஜே ஆகியோர் குடி மன்றத்தில் உள்ள போது பாலுணர்வுக் கிளர்ச்சி ஏற்படுத்தக்கூடிய நிகழ்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் . இதனைப் பார்ப்பது தவறு எனக் கதிர் எச்சரிக்கை செய்கிறான். ஆனால், அவர்கள் அதனை செவிமடுக்கவில்லை. தனது இசைநிலையத்திற்குச் செல்லும் வழியில் ஒருபேருந்தின் கண்ணாடியில் மீரா என பெண் ஒருவர் பெயர் எழுதுவதைப் பார்த்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை செய்கிறார்கள். அதே பெண்னை தனது கடையில் பார்க்கிறான். அவள் தனக்கு ஒரு சிவப்பு கின்னரப்பெட்டியை தனது வீட்டிற்கு வந்து விநியோகிக்க வேண்டுமாறு கேட்கிறார். அதனை கதிர் எடுத்துச் செல்ல அவர்கள் இருவரிடையே நட்பு மலர்கிறது. பின் அது காதலாகிறது. ஒரு நாள் இரவுக் கொண்டாட்டத்திற்குப் பிறகு தன்னை யாரோ பின்தொடருவதாக கதிரிடம் தெரிவிக்கிறார். அவரோ அறைக்குச் சென்று அனைத்துக் கதவுகளையும் தாழிட்டு பத்திரமாக இருக்குமாறு கூறுகிறார்.

வினோத் , தனது முதலாளியின் மனைவியுடன் உல்லாசமாக இருக்கும் நிகழ்படமானது முகநூலில் நுண்மமாக சென்றதனால் அவருடைய வேலை பறிபோனது. மேலும் அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களால் அவமானப் படுத்தப்படுகிறார். இதனால் மனமுடைந்தவர் தற்கொலை செய்கிறார்.

ஒரு நாள் கதிருடைய செல்லிடத் தொலைபேசிக்கு மீராவின் ஆபாச புகைப்படம் ஒன்று வருகிறது. அதனைத் தொடர்ந்து அவருடைய ஆபாச நிகழ்படமும் வருகிறது. கதிர், மீரா இருக்கும் கடையின் உரிமையாளரிடம் சண்டை போடுகிறார். கதிரின் நடவடிக்கை மீராவிற்கு குழப்பத்தை ஏற்படுத்தவே நடந்ததை அவர் அறிகிறார். இதனால் மனமுடைந்து அவரும் தற்கொலைக்கு முயல்கிறார். கதிர் அவரை மருத்துவமனையில் சேர்த்து குணமடையச் செய்கிறார். பின் மீராவை தன்னுடன் வைத்து பாதுகாக்கிறார்.

மீன்டும் ஒருநாள் கதிருக்கு மீராவின் குளியல் காட்சிகள் வரவே கதிர் அறையின் அனைத்து இடங்களிலும் ஒளிப்படக்கருவியைத் தேடுகிறார். ஆனால் அவருக்கு ஒரு நாட்குறிப்பு கிடைக்கிறது. அதில் அதில் இருந்த குறிப்புகள் மூலம் நடந்ததை அறிகிறார். மீராவும், மிருதுளாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதும் கதிரின் நண்பர்கள் செய்த ஒரு தவறினால் மிருதுளா தற்கொலை செய்தையும் அறிந்துகொள்கிறார். இதில் தனது தவறு எதுவும் இல்லை என்பதை மீராவிடம்தெரியப்படுத்த கதிர் முயல்கிறான். ஆனால் அவளும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்கிறார். தகவல் தொழில்நுட்ப வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துவதன் விளைவுகளை இதில் காட்சிப்படுத்திருப்பார்கள்.

கதை மாந்தர்கள்[தொகு]

  • விஜய் சேதுபதி (கதிர்)
  • காயத்ரி (மீரா)
  • மஹிமா நம்பியார் (மிதுளா)
  • அர்ஜுனன் (டீஜே)
  • ரமேஷ் திலக்

ஒலி வரி[தொகு]

Track listing
# பாடல்உருவாக்கம்Singer(s) நீளம்
1. "வெள்ளைக் கனவு"   ஹரிஹரன், ஹரினி 4:46
2. "லோலா (I)"   மரியா கவிதா தாமஸ் 4:17
3. "லோலா (II)"   ஆன்ட்ரியா ஜெராமையா 4:09
4. "பறக்கிறேன் நான்"   ஸ்ரீநிவாஸ்,மரியா கவிதா தாமஸ் 5:00
5. "மழைக்குள்ளே"   ஹரிசரன், சிரேயா கோசல் 5:10
6. "டேக் மீ ஹையர்"   சுஜித், கவிதா தாமஸ் 5:01
7. "கருப் பாடல்"   சென்னை ஆர்கெஸ்ட்ரா 3:17

சான்றுகள்[தொகு]

  1. http://www.sify.com/movies/vijay-sethupathy-s-mellisai-nearing-completion-news-tamil-odukDxbeajhsi.html
  2. http://www.ibtimes.co.in/puriyaatha-puthir-movie-review-here-what-audience-have-say-about-vijay-sethupathi-starrer-740607

வெளியிணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் புரியாத புதிர் (2017 திரைப்படம்)