லிசி ஆண்டனி
லிசி ஆண்டனி | |
|---|---|
| பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 2011–தற்போது |
| அறியப்படுவது | தரமணி தங்க மீன்கள் |
| பிள்ளைகள் | 1 |
லிசி ஆண்டனி (Lizzie Antony) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ்த் திரையுலகில் பெரும்பாலும் துணை நடிகையாகப் பணிபுரிகிறார். தங்க மீன்கள் (2013), தரமணி (2017) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.[1] திரைப்படங்கள் தவிர, விளம்பரங்கள், குறும்படங்கள் மற்றும் வலைத் தொடர்களிலும் லிசி நடித்துள்ளார்.[2]
ஒவ்வொரு ஆண்டும் 100 பெண் சாதனையாளர்களுக்காக தி இந்தியன் நேஷனல் பார் அசோசியேஷன் (INBA) ஏற்பாடு செய்துள்ள 'The Phenomenal She' என்ற விருதை 2022இல் இவர் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகை லிசி ஆண்டனி ஆவார்.[3]
தொழில்
[தொகு]புகழ்பெற்ற திரைப்படப் படைப்பாளி ராம் இயக்கிய தங்க மீன்கள், படத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியை ஸ்டெல்லா மிஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தபிறகு கவனிக்கப்படத்தக்கவராக மாறினார். இப்படத்தில் இவரின் நடிப்புக்காக விமர்சகர்களும், பார்வையாளர்களும் பாராட்டப்பட்டார்.[4][5][6]
லிசி சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் முதுகலைப் பட்டம் பெற்றவர். மேலும் பயிற்சி பெற்ற பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். தரமணி படத்தில் இவரது இயல்பான நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது [4][7] பின்னர் இவர் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற பேரன்பு திரைப்படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்தார்.[8][9] இப்படங்கள் இவரை தமிழ்ப் படங்களில் அடையாளம் காணக்கூடிய நடிகையாக்கியது.[10] மேலதிக ஊடக சேவையில் வெளியான மேதகு படத்தில் இலங்கையின் முன்னாள் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்காவாக நடித்தார்.[11]
திரைப்படவியல்
[தொகு]திரைப்படங்கள்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | |
|---|---|---|---|
| 2011 | தூங்கா நகரம் | வட்டாச்சியரின் மனைவி | |
| 2012 | நாங்க | செய்தியாளர் | |
| 2013 | தங்க மீன்கள் | ஸ்டெல்லா மிஸ் | |
| கருப்பம்பட்டி | மீனாட்சி | ||
| 2014 | குக்கூ | மகிமை | |
| 2017 | பாம்பு சட்டை | ||
| தரமணி | காவல் ஆணையரின் மனைவி | ||
| 2018 | பரியேறும் பெருமாள் | கல்லூரி பேராசிரியர் | |
| 2019 | பேரன்பு | ஸ்டெல்லா | |
| இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் | சாருலதா | ||
| கே-13 | தங்கம் | ||
| போதை ஏறி புத்தி மாறி | ஜனனியின் அம்மா | ||
| இக்லூ | மாதங்கி | ||
| மிஸ்டர். லோக்கல் | கீர்த்தனாவின் வழக்கறிஞர் | ||
| நாடோடிகள் 2 | சௌமியாவின் அம்மா | ||
| 2021 | மேதகு | சிறிமாவோ பண்டாரநாயக்கா | |
| நெற்றிக்கண் | சோபியாவின் தாய் | ||
| பெண் பாதி ஆடை பாதி | அன்னி | ||
| சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் | விளையாட்டு பயிற்சித் துறைத் தலைவர் | ||
| ரைட்டர் | அமுதா | ||
| தீர்ப்புகள் விற்கப்படும் | மருத்துவர் | ||
| 2022 | சாணி காயிதம் | வழக்கறிஞர் ராணி | |
| நட்சத்திரம் நகர்கிறது | |||
| கட்டா குஸ்தி | வீராவின் அத்தை | ||
| கணெக்ட் | லிஸி | ||
| ராங்கி | பிரியா | ||
| 2023 | பொம்மை நாயகி | ||
| டி3 |
வலைத் தொடர்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | வலை | |
|---|---|---|---|---|
| 2019 | பிங்கர்டிப் | மாதங்கி | ஜீ5 | |
| போலீஸ் டைரி 2.0 | ||||
| 2020 | பப்கோவா | |||
| 2022 | பிங்கர்டிப் (பருவம் 2) | |||
| விக்டிம் | கோமாதா | சோனிலைவ் | ||
| 2023 | ஒரு கோடை கொலை மர்மம் | ஜீ5 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lizzie Antony's elated about the feedback from audience". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 April 2019. Retrieved 25 May 2019.
- ↑ "Eligible குணச்சித்திர நடிகை!". 18 July 2021. http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=18291&id1=3&issue=20210718. பார்த்த நாள்: 19 July 2021.
- ↑ "Being part of good films, not screen time, matters: Lizzie". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 April 2023. Retrieved 11 April 2023.
- ↑ 4.0 4.1 Ahamed, Nabil (28 August 2017). "தரமணி'யில் பெண்களின் குரலைப் பேசியுள்ளார் ராம் - நடிகை லிஸி ஆண்டனி". என்டிடிவி. Retrieved 21 February 2019.
- ↑ CR, Sharanya (27 August 2017). "It was my friends who suggested I take up acting: Lizzy Antony". Retrieved 21 February 2019.
- ↑ Subramanian, Anupama (29 August 2017). "Lissy Antony wants to do meaty roles". தி டெக்கன் குரோனிக்கள். Retrieved 21 February 2019.
- ↑ "கிளிசரின் போடாமல் நடிகையை அழ வைத்த இயக்குநர்". IndiaGlitz. 28 August 2017. Retrieved 21 February 2019.
- ↑ "Lizzie Antony is on a roll". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 March 2019. Retrieved 31 March 2019.
- ↑ "Ispade Rajavum Idhaya Raniyum Review". India Glitz. 15 March 2019. Retrieved 17 March 2019.
- ↑ "ராம் கிளிசரின் போடாமல் அழ வைத்தார் 'தரமணி' லிஸி ஆண்டனி". 28 August 2017. Retrieved 21 February 2019.
- ↑ "'மேதகு' தந்த மகிழ்ச்சி". 28 June 2021. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/687072-medhagu-movie.html. பார்த்த நாள்: 19 July 2021.