பாம்பு சட்டை (2017 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாம்பு சட்டை
இயக்கம்ஆதம் தாசன்
தயாரிப்பு
கதைஆதம் தாசன்
இசைஅஜீஸ் (பாடகர்)
நடிப்பு
ஒளிப்பதிவுகே. ஜி. வெங்கடேஷ்
படத்தொகுப்புஎஸ்.பி. ராஜா சேதுபதி
கலையகம்
  • மனோபாலா தயாரிப்பு நிறுவனம்
  • சினிமா நகரம்
விநியோகம்அபி & அபி பிக்சர்சு
வெளியீடு24 மார்ச்சு 2017
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாம்பு சட்டை (Paambhu Sattai) ஒரு இந்திய தமிழ் மொழி அதிரடித் திரைப்படம் ஆகும்.  இத்திரைப்படம் அறிமுக இயக்குநர் ஆதம் தாசனால் எழுதி இயக்கப்பட்டுள்ளது.  பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், குரு சோமசுந்தரம் மற்றும் முக்தா பானு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மனோபாலா தயாரித்துள்ளார்.  இத்திரைப்படத்திற்கான இசை அஜீஸ் (பாடகர்) ஆல் ஆக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நீட்டிக்கப்பட்ட  தாமதத்திற்குப் பிறகு 24 மார்ச் 2017 இல் வெளியாகியுள்ளது.[1][2][3]

கதைக்களம்[தொகு]

தட்சிணா மூர்த்தி தனது ஒழுக்க நெறிகளின் காரணமாக அடிக்கடி தனது வேலையை இழக்கும் இளைஞன் ஆவான். இவனது மைத்துனி/அண்ணி மலர் நகைக்கடையில் பணிபுரியும், தன்னம்பிக்கையுள்ள அழகிய இளம்பெண் ஆவாள். மலர் தனது கணவனை (தட்சணாவின் சகோதரன்) திருமணமான ஒரு மாதத்தில் இழந்து விடுகிறாள். அறியப்படாத காரணங்களுக்காக அவளது கணவர் அவர்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகில் உள்ள இரயில் தண்டவாளத்தில் இறந்து கிடக்கிறார்.  இளம் விதவையாக இருப்பினும் மலரும், தட்சணாவும் ஒரே கூரையின் கீழ் வசித்து வருகின்றனர். தனது அண்ணனை விரும்பியதற்காக அவளது குடும்பத்தையே இழந்து வந்த காரணத்தால் மலர் மீது தட்சணா மரியாதை கொண்டுள்ளான். தட்சணா தனது அண்ணியிடம் மறுமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி அவளை இசையச் செய்ய முயற்சிக்கிறான். ஆனால், தொடர்ந்து மலர் அதற்கு மறுத்து வருகிறாள்.

தட்சணா நீர் பாட்டில் விநியோகம் செய்யும் கடையொன்றில் வேலைக்குச் சேர்கிறான். அவனுடைய வேலையின் தன்மை அவனைப் பலவிதமான மக்களை அறிமுகப்படுத்தி வைக்கிறது. ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, தனது வாடிக்கையாளர் நிறுவனத்தில் ஒன்றான  ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுடன் தட்சணாவிற்குக் காதல் வருகிறது. வேணியின் தந்தையார் நகரசுத்தி தொழிலாளி இவர்களது காதலை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், மலருக்கும் தட்சணாவுக்கும் உள்ள  உறவை சந்தேகிக்கிறார்.  இதன் விளைவாக, மலர் தனது இரண்டாவது திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். தட்சணா மலருக்கு தகுந்த மணமகனைக் கண்டுபிடிக்கிறான். ஆனால், அந்த மணமகனோ தனது பொருளாதார நெருக்கடியினால், திருமணத்திற்குத் தயாராய் இல்லை. தட்சணா ஜீவாவின் நிதி நெருக்கடியைத் தீர்க்க பணம் சேகரிக்க முயற்சிக்கிறான். மலரின் திருமணம் நடக்க தட்சணா செய்யும் முயற்சிகளில், பல நல்ல மனிதர்கள்  பணம் தருகின்றனர். இருப்பினும், போதுமான பணம் சேரவில்லை. 

நடிப்பு[தொகு]

தயாரிப்பு[தொகு]

இப்படத்தின் தயாரிப்பு 2014 ஆம் ஆண்டின் பின்பகுதியில் தொடங்கியது. பாபி சிம்ஹா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஆதம் தாசனின் அறிமுகப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாயினர். இத்திரைப்படமானது தொடக்கத்தில் மனோபாலாவின் பிக்சர் ஹவுஸ் ஸ்டூடியோ மற்றும் சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரின் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் கூட்டுத்தயாரிப்பாக தொடங்கியது.[4][5] முக்தாபானு தனது காட்சிகளை மார்ச் 2015 இல் தனது காட்சிகளை நடித்து முடித்து தான் ஒரு விற்பனைப் பெண்ணாக நடித்துள்ளதாக நடித்துள்ளதாக தெரிவித்தார்.[5] இத்திரைப்படம் 2015 ஆம் ஆண்டின் மத்தியில் முடிக்கப்பட்டு சூலை 2015 இல் பின்னணி ஒலிப்பதிவு நடைபெற்றது.[6]

மிக நீண்ட காலத் தயாரிப்புத் தாமதத்திற்குப் பின், இத்திரைப்படம் சினிமா சிட்டியின் கே. கங்காதரன் என்பவருக்கு விற்கப்பட்டு விட்டதாகவும், அவர் திரைப்படத்தை திசம்பர் 2016 இல் வெளியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்குப் பிறகும் பல தாமதங்களை் கடந்து, இத்திரைப்படம் அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனத்தின் உதவியோடு மார்ச் 2017 இல் திரைக்கு வந்தது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bobby Simha’s next film titled Paambhu Sattai". The Times of India. 14 December 2015. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Bobby-Simhas-next-film-titled-Paambhu-Sattai/articleshow/45504516.cms. 
  2. "Bobby Simha to romance Keerthy Suresh in 'Paambhu Sattai'". Only Kollywood. 5 January 2015.
  3. "Actress mistaken for a salesgirl". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Actress-mistaken-for-a-salesgirl/articleshow/46702135.cms. பார்த்த நாள்: 14 January 2017. 
  4. "I'm a dreamer who is easily distracted". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Im-a-dreamer-who-is-easily-distracted/articleshow/46419737.cms. பார்த்த நாள்: 14 January 2017. 
  5. 5.0 5.1 "Bobby Simha’s next film titled Paambhu Sattai". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Bobby-Simhas-next-film-titled-Paambhu-Sattai/articleshow/45504516.cms. பார்த்த நாள்: 14 January 2017. 
  6. "Paambu Sattai will be like a 90s Rajini film". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Paambu-Sattai-will-be-like-a-90s-Rajini-film/articleshow/48084056.cms. பார்த்த நாள்: 14 January 2017. 
  7. "Paambu Sattai to release on December 2nd". behindwoods.com. 5 November 2016. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.