கொரியன் பரப்பிசை (கே பாப்)
கொரியன் பரப்பிசை (கே பாப்) | |
---|---|
நாகரிகம் துவக்கம் |
|
மண்பாட்டு தொடக்கம் | 1940 ஆம், தென் கொரியா |
இசைக்கருவிகள் |
|
உள்ளூர் நிகழ்வுகள் | |
கொரியன் பரப்பிசை அல்லது கே பாப் தென் கொரியாவில் உருவான பிரபலமான இசை வகை ஆகும்.[1] கே பாப் என்ற வார்த்தை 1990ஆம் ஆண்டு காலங்களில் உருவாக்கினாலும் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த வார்த்தை பிரபலமானது. கே பாப் என்பது தென் கொரியாவில் உள்ள உள்நாட்டு பரப்பிசை இசையை குறிக்கிறது.[2][3] இந்த இசையானது நவீன காலத்திற்கு ஏற்றவாறு பாடுதல், டிரம் இயந்திரம், மின்னணு டிரம், கிரவ கிதார், ஒலி கிதார், சின்தசைஸர், கிளபம், எண்ணிம ஒலி நிலையம், தாள இசைக்கருவி, க்ரோவ் பாக்ஸ் போன்ற கருவிகளின் மூலம் இசை தட்டுகள் உருவாக்கப்படுகின்றன. நவீன கே-பாப் கலாச்சாரம் ஹாட் (H.O.T) என்ற ஆண்கள் இசைக்குழுவிருந்து 1996 ஆம் ஆண்டில் இருந்து இளைஞர்களிடமிருந்தும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது இந்தக் கலாச்சாரம் கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, இந்தியா, இலத்தீன் அமெரிக்கா, வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hartong, Jan Laurens (2006). Musical terms worldwide: a companion for the musical explorer. Semar Publishers. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-7778-090-4. பார்க்கப்பட்ட நாள் 5 December 2011.
Since the 1990s, popular genres like rap, rock and techno house have been incorporated into Korean popular music, setting the trend for the present generation of K-pop, which often emulates American models.
- ↑ "케이팝 - 한국민족문화대백과".
- ↑ "케이팝 - 국립중앙도서관". Archived from the original on 2017-06-02. பார்க்கப்பட்ட நாள் 2019-03-07.