எண்ணிம ஒலி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண்ணிம ஒலி நிலையம் (Digital audio workstation) எனப்படுவது இலத்திரனியல், இலத்திரனியல் அல்லாத ஒலிச்சாதனங்களின் உதவியோடு அல்லது ஒலி கருவிகளே இல்லாமல் கணினி மூலம் இசையை ஏற்படுத்தி பதிவு செய்யும் அமைப்பு ஆகும்.

ஒலி தயாரிப்பிற்குத் தேவையான வன்பொருட்கள், மென்பொருட்கள் ஆகியவற்றையும் சேர்த்து எண்ணிம ஒலி நிலையம் என அழைப்பர், ஆங்கிலத்தில் Digital Audio Workstation (DAW) எனலாம். இசைக்கருவிகளின் துணையின்றி அவற்றின் இசையை கணினி மூலம் ஏற்படுத்த முடிந்தாலும் நேரடி இசைக்கருவியில் உள்ள முழு பயனையும் பெற முடிவதில்லை. உதாரணமாக, வயலின் இசையை வயலின் இன்றி கணிணி மூலம் வயலினில் உள்ள அனைத்து சுரங்களையும் வாசிக்க முடிந்தாலும் வேகமும் நுணுக்கமும் சேர்ந்த இசைகளில் கணினி விசைப்பலகை மூலம் இது இயலாமல் போகிறது. இந்த குறையைத் தீர்ப்பதற்காகவே "கூட்டிணைப்புக் கருவி" (synthesizer) போன்ற வன்பொருள் சாதனங்கள் பயன்படுகிறது. சிந்தைசர் என்பது அனலொக் ஆக கொடுக்கப்படும் இசைக்கான குறிப்பலைகளை (signal) எண்ணிம (digital) குறிப்பலைகளாக கணினிக்கு அனுப்ப பயன்படுகிறது. சிந்தைசரானது உதாரணத்தில் குறிப்பிட்ட வயலினிற்கும் கணினி விசைப்பலகைக்கும் இடைப்பட்ட உள்ளீட்டு கருவியாக பயன்படுகிறது. இங்கு உதாரணத்திற்காகவே வயலின் இசைக்கருவி குறிப்பிடப்பட்டுள்ளது, சிந்தைசர் மூலம் நாம் கொடுக்கும் குறிப்பலைகளை கணினியில் எந்த ஒரு இசைக்கருவிற்கும் பயன்படுத்தலாம்.

ஒருங்கிணைந்த எண்ணிம ஒலி நிலையம்[தொகு]

ஒலிக் கட்டுப்பாட்டு அமைப்பு, ஒலி வடிவ மாற்றி, மற்றும் தேவையான சேமிப்புச் சாதனங்கள் ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்ட சாதனம் ஒருங்கிணைந்த எண்ணிம ஒலி நிலையம் ஆகும். அதிக நினைவுத்திறன் உள்ள ரம், வேகமான சி.பி.யு ஆகியவற்றின் வருகைக்கு முன்னரே இச்சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. எனினும் இன்று சாதாரணமாக எல்லாk கணினிகளிலும் எண்ணிம ஒலி நிலைய மென்பொருட்களைப் பயன்படுத்த முடிகிறது.

இலவச மென்பொருட்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணிம_ஒலி_நிலையம்&oldid=2745931" இலிருந்து மீள்விக்கப்பட்டது