ஆடாசிட்டி (ஒலித் தொகுப்புக் கருவி)
![]() | |
![]() ஆடா சிட்டி மென்பொருள் கருப்பு வார்ப்புரு பதிப்பு 3 | |
உருவாக்குனர் | ஆடாசிட்டி உருவாக்கக் குழு |
---|---|
தொடக்க வெளியீடு | மே 28, 2000; 22 ஆண்டுகள் |
மொழி | சி சி++ |
தளம் | யுனிக்ஸ், Mac OS X, மைக்ரோசாப்ட் வின்டோஸ் |
கிடைக்கும் மொழி | பல்மொழி; தமிழிலும் உள்ளது |
உருவாக்க நிலை | செயல்பட்டுக் கொண்டிருக்கிறது |
மென்பொருள் வகைமை | ஒளி தொகுப்பு கருவி |
உரிமம் | குனூ பொதுமக்கள் உரிமம் |
இணையத்தளம் | https://www.audacityteam.org |
ஆடாசிட்டி ஒலித் தொகுப்புக் கருவி (Audacity audio editor) இலவசமாக பதிவிறக்கக்கூடிய திற மூல மென்பொருளாகும். இது விண்டோசு, மேக், லினக்சு போன்ற இயங்குதளங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு ஒலிக் கோப்பு வடிவங்களை கலக்கச் செய்தல், ஒலிப் பதிவு, இரைச்சல் நீக்கம் ஆகியனவற்றை இதன் மூலம் மேற்கொள்ளலாம். ஒலியின் பல்வேறு காரணிகளை மாற்றியமைத்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.
முதன் முதல் 1999ஆம் ஆண்டு இறுதியில் கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டோமினிக் மாச்சோனி என்பவராலும் ரோசர் டானென்பர்க் என்பவராலும் தொடங்கப்பட்டது. 28 மே 2008, 0.8 பதிப்பை வெளியிட்டார்கள்
10 அக்டோபர் 2011 வரை சோர்சுபோர்ச்சு தளத்தில் 76.5 மில்லியன் தரவிறக்கத்துடன் 11வது புகழ்பெற்ற மென்பொருளாக அத்தளத்தில் இருந்தநு. சிற்ந்த பல் ஊடக திட்டத்துக்கு வழங்கப்படும் சோர்சுபோர்ச்சு சமூகத்தின் தேர்வாக 2007 & 2009 ஆண்டுகளில் அடாசிட்டி திகழ்ந்தது. மார்ச்சு 2015 முதல் போசுஅப் என்னும் தளத்தில் செயல்படுகிறது.