உள்ளடக்கத்துக்குச் செல்

கிளெம் ஹில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளெமென்ட் " கிளெம் " ஹில் (Clement "Clem" Hill 18 மார்ச் 1877 5 செப்டம்பர் 1945) [1] ஒரு முன்னாள் ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 1896 மற்றும் 1912 க்கு இடையில் ஒரு மட்டையாளராக 49 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 3.412 ஓட்டங்களை எடுத்தார். அதில் அதிகபட்சமாக 191 ஓட்டங்களை எடுத்தார். இவர் பத்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆத்திரேலிய அணியின் தலைவராக இருந்தார், அதில் ஐந்து போட்டிகளில் வென்றார், ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்தார். இவர் ஓய்வு பெற்ற சமயத்தில் தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரரான ஹில் 3,412 ஓட்டங்கள் எடுத்தார். இது அந்தச் சமயத்தில் உலக சாதனையாக கருதப்பட்டது. இவர் சராசரியாக 39.21 ஓட்டங்களை எடுத்தார். 1902 ஆம் ஆண்டில், ஒரு நாட்காட்டி ஆண்டில் 1,000 தேர்வுத் துடுப்பாட்ட ஓட்டங்களை எடுத்த முதல் மட்டையாளர் ஹில் ஆவார். இது 45ஆண்டுகள் முறியடிக்கப்படாமல் இருந்தது. 1900-01 ஆம் ஆண்டில் தெற்கு ஆத்திரேலியாவுக்காக நியூ சவுத் வேல்ஸுக்கு எதிராக 365 ரன்கள் எடுத்ததே இவரின் அதிக பட்ச ஓட்டமாகும்.மேலும், தென் ஆத்திரேலிய துடுப்பாட்டச் சங்கம் 2003 ஆம் ஆண்டில் இவரது நினைவாக அடிலெய்ட் ஓவலில் ஒரு கிராண்ட்ஸ்டாண்ட் என்று பெயரிட்டது, மேலும் இவர் 2005 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் .தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 252 போட்டிகளில் விளையாடி 17, 213 ஓட்டங்களை எடுத்தார். இதில் 365 * இவரின் அதிகபட்ச ஓட்டமாகும்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

ஹில் 1877 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி தெற்கு ஆத்திரேலியாவின் அடிலெய்டில் ஹென்றி ஜான் ஹில் (ஜான் என்று அழைக்கப்பட்டார்) மற்றும் இவரது மனைவி ரெபேக்கா, நீ சாண்டர்ஸாகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[1] இவர் ஹென்றி ஹில் எம்.எச்.ஏவின் பேரன் ஆவார். துடுப்பாட்டத்தில் பெரிதும் ஈடுபட்ட ஒரு குடும்பத்தில் எட்டு மகன்கள் மற்றும் எட்டு மகள்களில் ஒருவராக கிளெம் இருந்தார். கென்ட் கவுண்டி துடுப்பாட்டச் சங்கத்திற்கு எதிரான போட்டியில் இவரது தந்தை வடக்கு அடிலெய்டு துடுப்பாட்ட அணி சார்பாக நூறு ஓட்டங்களை எடுத்தார். (102 ஆட்டமிழக்காதவர் ) இவரே அடிலெய்ட் ஓவலில் முதல் நூறு ஓட்டங்கள் அடித்ததாக கூறப்படுகிறது.[2] மற்ற ஆறு சகோதரர்கள் தெற்கு ஆத்திரேலியாவுக்காக விளையாடினர், 1912-13ல் ஒரே அணியில் மூன்று ஹில் சகோதரர்கள் பல போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

கிளெமின் தந்தை மெதடிஸ்ட் தேவாலயத்தில் செல்வாக்கு உள்ளவராக இருந்தார். கிளெமை உள்ளூர் மெதடிஸ்ட் பள்ளியான பிரின்ஸ் ஆல்பிரட் கல்லூரியில் கல்வி கற்க அனுப்பினார்.[1][3] கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் இவர் கலந்துகொண்டார். ஹில் தனது 13 ஆம் வயதில் தனது முதல் கல்லூரி போட்டியில் இழப்புக் கவனிப்பாளராகவும் மட்டையாளராக 10 ஆவது வீரராகக் களம் இறங்கினார்.16 ஆவது வயதில், இவர் கல்லூரிக்கு இடையேயான போட்டியில் 360 ஓட்டங்கள் எடுத்தார். இது பள்ளி மாணவர் அளவில் சாதனையாகக் கருதப்பட்டது. இதற்கு முன்னர் ஜோ டார்லிங் என்பாரின் சாதனையினை இவர் முறியடித்தார். இதுபோன்ற, ஆபத்தான ஹூக் ஷாட்டை தொடர்ந்து விளையாடினால், இவரை பள்ளி லெவன் வெளியேற்றுவதாக பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் அச்சுறுத்தினார்.[4]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Daly, John A. (1983). "Hill, Clement (Clem) (1877–1945)". Australian Dictionary of Biography – Online Edition. Australian National University. பார்க்கப்பட்ட நாள் 18 January 2008.
  2. Pollard (1988), pp. 530–533.
  3. "Hill, Henry John (1847–1926)". Australian Dictionary of Biography – Online Edition. Australian National University. 1972. பார்க்கப்பட்ட நாள் 18 January 2008.
  4. Robinson, pp. 116–126.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளெம்_ஹில்&oldid=4064507" இலிருந்து மீள்விக்கப்பட்டது