நாட்காட்டி ஆண்டு
நாட்காட்டி ஆண்டு (calendar year) என்பது எந்த ஒரு நாட்காட்டியின் புத்தாண்டு நாளில் துவங்கி, அடுத்த புத்தாண்டு நாளுக்கு முந்தைய நாளில் முடிவடைகிறது.[1]
பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டி ஆண்டு பன்னாட்டளவில் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. கிரிகோரியன் ஆண்டு ஆங்கில மாதமான சனவரி 1ஆம் நாளில் துவங்கி, டிசம்பர் 31ஆம் நாளில் முடிவடைகிறது. கிரிகோரியன் நாட்காட்டிப் படி சாதாரண ஆண்டுகளில் 365 நாட்களும்,நெட்டாண்டுகளில் மட்டும் 366 நாட்களைக் கொண்டிருக்கும்.
காலாண்டு
[தொகு]நிதி மற்றும் நிர்வாக வசதிக்காக நாட்காட்டி ஆண்டை மூன்று மாதங்கள் கொண்ட நான்கு காலாண்டாக பிரித்துள்ளனர்.
- முதல் காலாண்டு (Q1): சனவரி 1ஆம் நாள் முதல் மார்ச் 31ஆம் நாள் முடிய உள்ள 90 கொண்டது. (நெட்டாண்டுகளில் மட்டும் 91 நாட்கள்)
- இரண்டாம் காலாண்டு, (Q2): 1 ஏப்ரல் முதல் 30 சூன் முடிய 91 நாட்கள்
- மூன்றாம் காலாண்டு (Q3): 1 சூலை முதல் 30 செப்டம்பர் முடிய 92 நாட்கள்
- நான்காம் காலாண்டு (Q4): 1 அக்டோபர் முதல் 31 டிசம்பர் முடிய 92 நாட்கள்.
இந்தியாவில்
[தொகு]ஊழியர்களுக்கு நாட்காட்டி ஆண்டு அடிப்படையில் ஊதியம், ஊதிய உயர்வு ஓய்வூதியம் மற்றும் விடுமுறைகள் வழங்கப்படுகிறது.
ஆண்டுகளின் ஒப்பீடு
[தொகு]வானியலிலும் அன்றாட வாழ்விலும் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான ஆண்டுகளின் ஒப்பீடு கீழே தரப்பட்டுள்ளது. பொதுவான பயன்பாட்டில் உள்ளவை அட்டவணையின் மேல்பகுதியில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
| ஆண்டு வகை | ஆங்கிலத்தில் | கால அளவு (நாட்கள்) | விளக்கம் |
|---|---|---|---|
| சாதாரண ஆண்டு | Common Year | 365 | பிப்ரவரி 28 நாட்களைக் கொண்ட ஒரு சாதாரண நாட்காட்டி ஆண்டு. |
| நெட்டாண்டு (லீப் ஆண்டு) | Leap Year | 366 | பருவகாலங்களுடன் நாட்காட்டியை இணைக்க ஒரு கூடுதல் நாள் (பிப் 29) சேர்க்கப்படும் ஆண்டு. |
| கிரெகொரியின் ஆண்டு | Gregorian Year | 365.2425 | நவீன நாட்காட்டியின் சராசரி ஆண்டு நீளம். |
| சூரிய ஆண்டு | Solar Year | ~365.242 | பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் பொதுவான காலம். (வெப்பமண்டல ஆண்டைக் குறிக்கும்.) |
| வெப்பமண்டல ஆண்டு | Tropical Year | 365.24219 | இரு அடுத்தடுத்த வசந்தகால சம இரவுப் பகல் நிலைகளுக்கு இடைப்பட்ட காலம் (பருவக்காலங்களின் அடிப்படை). |
| விண்மீன் ஆண்டு | Sidereal Year | 365.25636 | நிலையான விண்மீன்களைப் பொறுத்து பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம். |
| ஜூலியன் ஆண்டு | Julian Year | 365.25 | வானியலில் ஒளியாண்டு போன்றவற்றை கணக்கிடப் பயன்படும் நிலையான அலகு. |
| சந்திர ஆண்டு | Lunar Year | ~354.37 | 12 முழு நிலவுச் சுழற்சிகளைக் (Synodic months) கொண்ட காலம். (சூரிய ஆண்டை விட சுமார் 11 நாட்கள் குறைவு). |
| அண்மைநிலை ஆண்டு | Anomalistic Year | 365.25964 | பூமி சூரியனுக்கு மிக அருகில் வரும் நிலையிலிருந்து அடுத்த அதே நிலை வரையிலான காலம்(Perihelion). |
| கிரகண ஆண்டு | Eclipse / Draconic Year | 346.62007 | சூரியன் மீண்டும் அதே நிலவுக்கணுவை (Lunar node) வந்தடைய ஆகும் காலம். (கிரகண காலங்களை கணிக்க பயன்படும்). |
| சோதிக் ஆண்டு | Sothic Year | ~365.25 | சிரியசு (Sirius) விண்மீன் மீண்டும் தோன்றும் இடைவெளி (பண்டைய எகிப்து முறை). |
| பெஸலியன் ஆண்டு | Besselian Year | ~365.2422 | ஒரு குறிப்பிட்ட சூரிய தீர்க்கரேகையை அடிப்படையாகக் கொண்ட பழைய வானியல் அளவு. |
| காசியன் ஆண்டு | Gaussian Year | 365.25690 | காசியன் ஈர்ப்பு மாறிலியை அடிப்படையாகக் கொண்ட ஒரு தத்துவார்த்த ஆண்டு. |
| விண்மீன் மண்டல ஆண்டு | Galactic Year | ~22.5 - 25 கோடி ஆண்டுகள் | சூரிய குடும்பம் பால்வெளி மண்டலத்தின் மையத்தை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம். (பிரபஞ்ச ஆண்டு / பால்வெளி ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது). |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்க்ள்
[தொகு]- ↑ "calendar year". Merriam-Webster. Retrieved 6 August 2014.