உள்ளடக்கத்துக்குச் செல்

காக்கூர்

ஆள்கூறுகள்: 9°53′40″N 76°32′05″E / 9.89444°N 76.53472°E / 9.89444; 76.53472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காக்கூர்
சிற்றூர்
காக்கூர் is located in கேரளம்
காக்கூர்
காக்கூர்
Location in Kerala, India
காக்கூர் is located in இந்தியா
காக்கூர்
காக்கூர்
காக்கூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°53′40″N 76°32′05″E / 9.89444°N 76.53472°E / 9.89444; 76.53472
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம் எர்ணாகுளம்
மொழிகள்
 • அதிகாரப்பூரவமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
தொலைபேசி குறியீடு0485
வாகனப் பதிவுKL-17
அருகில் உள்ள நகரம்கொச்சி, கூத்தாட்டுக்குளம், பிரவோம், மூவாற்றுப்புழை

காக்கூர் (Kakkoor) என்பது இந்தியாவில் தெற்கே கேரளத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். காக்கூர் மலையாள நாட்காட்டியில் கும்பம் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் விவசாய விழாவான காக்கூர் காளா வயலுக்கு பிரபலமானது.

கக்கூர் சிற்றூரானது திருமரடி கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. இது பம்பகுடா, எலான்ஜி மற்றும் மரடி ஆகிய பஞ்சாயத்து, கூத்தட்டுளம் நகராட்சி ஆகியவற்றால் சூழ்ந்துள்ளது. காக்கூர் பம்பகுடா ஊராட்சி ஒன்றியத்துக்கும் மூவாற்றுப்புழை வட்டத்துக்கும் உட்பட்டதாக உள்ளது. மேலும் இது பிராவோம் சட்டமன்றத் தொகுதியிலும், கோட்டயம் நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேளாண்மையை நம்பியுள்ளனர். இங்கு பயிரிடப்படும் முக்கியப் பயிர்களாக நெல், வெனிலா, சாதிக்காய், அன்னாசி, ரப்பர் ஆகியவை உள்ளன.

காக்கூரின் அருகிலுள்ள நகரங்களானது கூத்தத்துக்குளம் (8.4   கிமீ [1] ), பிராவோம் (7.8   கிமீ [2] ), மூவாற்றுப்புழை (17.7   கிமீ [3] ), பாலா (30.1   கிமீ [4] ) மற்றும் தோடுபுழா (27.1   கிமீ [5] ). அருகிலுள்ள முக்கிய மாநகரங்கள் எர்ணாகுளம் (35.5   கிமீ [6] ) மற்றும் கோட்டயம் (43.4   கிமீ [7] ) போன்றவை ஆகும்.

காக்கூரில் பிரபலமாக அறியப்பட்ட இடங்களாக அம்பாசெரிக்காவு கோயில், எருமேலி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில், திரிப்பாததிரிகுளங்கர கோயில், முள்ளவள்ளி சிவ சங்கரநாராயணர் கோயில், செயின்ட் ஜோசப் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் புனித மேரி ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் அட்டின்குன்னு.

காக்கூர் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றது. கேரள அரசால் டெக்னோலோட்ஜ் [8] இன் கிராமப்புற ஸ்மார்ட் ஸ்பேஸ் திட்டம் கக்கூரில் அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து வரும் தொடக்க தொழில்களை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட முதல் பிரிவு இதுவாகும்.

வரலாறு

[தொகு]

காக்கூரானது திருவிதாங்கூர் இராச்சியத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. இப்போது கேரள மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்ததுவருகிறது.

போக்குவரத்து

[தொகு]

சாலை

[தொகு]

காக்கூர் சாலை வலைப்பின்னலால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலை 42 காக்கூரின் மையப்பகுதி வழியாக செல்கிறது. திருவனந்தபுரம் மற்றும் அங்கமாலியை இணைக்கும் பிரதான மத்திய சாலை (எம். சி சாலை) 8.4 கி.மீ தொலைவில் உள்ளது. இது மாநில நெடுஞ்சாலை 42 உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகத்தால் அதிவிரைவு, விரைவு, குறைந்த நிறுந்தம் கொண்ட பேருந்து மற்றும் குளிர்சாதன வசதி உடைய, சாராரண பேருந்துகள் உள்ளிட்ட நீண்ட தூர மற்றும் குறுகிய தூர பேருந்துகளை இயக்குகிறது. இதனுடன் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தொடருந்து

[தொகு]

தற்போது காக்கூரில் தொடருந்து வசதி இல்லை. காக்கூருக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் பிராவோம் சாலை (11.7   கி.மீ), எர்ணாகுளம் சந்திப்பு (35.9   கி.மீ), எர்ணாகுளம் நகர தொடருந்து நிலையம் (38.5   கி.மீ), ஆலுவா (38.1), கோட்டயம் (42.8)   கிமீ) போன்றவை ஆகும்.

வானூர்தி

[தொகு]

காக்கூருக்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம் நெடும்பசேரியின் கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் (49)   கி.மீ) இது பல்வேறு சர்வதேச நாடுகளுக்கு வானூர்தி வசதிகளைக் கொண்ட சர்வதேச வானூர்தி நிலையமாகும்.

நலவாழ்வு

[தொகு]
  • அரசு. ஹோமியோபதி மருந்தகம், காக்கூர்
  • ஆரம்ப சுகாதார மையம், திருமாரடி

கல்வி

[தொகு]
  • அரசு. தொழிற்கல்வி மேல்நிலைப்பள்ளி, திருமரடி
  • புனித அன்ஸ் கார்மல் பப்ளிக் பள்ளி, திருமரடி
  • அட்வெஞ்சர் மேல்நிலைப்பள்ளி, வெட்டிமூட்
  • செயின்ட் மேரிஸ் எல்பி & யுபி பள்ளி, அஞ்செல்பேட்டி
  • டி.எம். ஜேக்கப் நினைவு அரசு கலைக் கல்லூரி, மணிமலகுன்னு
  • எம்.ஜி பல்கலைக்கழக செவிலியர் கல்லூரி, மணிமலகுன்னு

காக்கூர் காளவயல்

[தொகு]

காக்கூர் காளாவயல் என்பது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் கொண்டாடப்படும் பின் அறுவடைத் திருவிழா ஆகும். திருவிழா பொதுவாக மலையாள நாட்காட்டியின் அடிப்படையில் கும்பம் மாதத்தில் நடத்தப்படுகிறது. இந்த திருவிழா முக்கியமாக காக்கூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. முந்தைய காலங்களில் இந்த திருவிழா விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் இடையில் விவசாய பொருட்களின் சந்தைக்கான இடமாக பயன்படுத்தப்பட்டது. காளாவயல் என்ற சொல்லுக்கு கால்நடை சந்தை என்று பொருள்.

தற்போது காளவயல் கேரள வரைபடத்தில் ஒரு முக்கிய சுற்றுலா பகுதியாகும். இந்த விழாவுடன் கலவண்டியோட்டம் (கால்நடை பந்தயம்), மராமாடி, மோட்டர் கிராஸ் போன்ற பல சாகச விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இவற்றைக் காண கேரளம் முழுவதிலும் இருந்து மக்களுடன் பல வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர்வாசிகள் காக்கூருக்கு வந்து இந்நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவை ஒளிப்படக் கலைஞர்கள் பலவிதமாக படம்ப பிடிக்க ஒரு வாய்ப்பாகும். இருப்பினும், காளைகள் மற்றும் பிற விலங்குகள் போட்டியாளர்களால் துன்புறுத்தப்படுவதாக கூறிய விலங்கு உரிமை ஆர்வலர்கள் எழுப்பிய ஆட்சேபனைகள் காரணமாக கால்நடை பந்தயங்கள் சமீபத்தில் தடை செய்யப்பட்டன.

இந்த வரலாற்று திருவிழாவானது சுற்றுப்புறத்தில் உள்ள இரண்டு கோயில்களுடன் தொடர்புடையது, இவை இந்த திருவிழாவில் முக்கிய பங்கு வகிக்கிறன்றன. இந்தத் திருவிழாவுடன் தொடர்புடைய கோயில்கள் எடப்ரா பகவதி கோயில், திருமரடி மற்றும் கக்கூரின் அம்பாசெரிகாவ் கோயில் ஆகியவை ஆகும். இந்த இரண்டு தெய்வங்களும் சகோதரிகள் என்று நம்பப்படுகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு இவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் சந்தர்ப்பம் இதுவாகும். இது மலையாள மாத கும்பத்தின் அஸ்வதி, பரணி, கார்த்திகா மற்றும் ரோகிணி நட்சத்திரங்களில் கொண்டாடப்படுகிறது.

வழிபாட்டுத் தலங்கள்

[தொகு]
  • ஸ்ரீ அம்பாசெரிகாவு கோயில், காக்கூர்
  • முள்ளவாலி சிவ சங்கரநாராயணர் கோயில், காக்கூர்
  • எருமேலி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில், காக்கூர்
  • திரிபாததிரிகுளங்கர கோயில், காக்கூர்
  • செயின்ட் ஜோசப் கத்தோலிக்க தேவாலயம், காக்கூர்
  • செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் சர்ச், அட்டின்குன்னு

குறிப்புகள்

[தொகு]
  1. "Google Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
  2. "Google Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
  3. "Google Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
  4. "Google Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
  5. "Google Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
  6. "Google Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
  7. "Google Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
  8. "TECHNOLODGE - Rural Smart Space | Piravom". technolodge.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கூர்&oldid=2902940" இலிருந்து மீள்விக்கப்பட்டது