எம். சி. ரோடு
கேரளத்தின் முதலாம் மாநில நெடுஞ்சாலை | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
பராமரிப்பு கேரள அரசின் பொதுப்பணித் துறை | |
நெடுஞ்சாலை அமைப்பு | |
முதன்மை நடுவண் சாலை அல்லது எம். சி. ரோடு கேரளத்தின் முதலாம் மாநில நெடுஞ்சாலை ஆகும். இது 240.6 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. இதை கேரள அரசின் பொதுப்பணித் துறை மா.நெ 1 (SH 1) என்று நிர்வகிக்கிறது. இது திருவிதாங்கூரின் திவானாக இருந்த கேசவதாச இராசாவினால் கட்டமைக்கப்பட்டது.
வழித்தடம்
[தொகு]திருவனந்தபுரத்தின் கேசவதாசபுரத்தில் தொடங்கி வெம்பாயம், வெஞ்ஞாறமூடு, கிளிமானூர், நிலமேல், சடையமங்கலம், ஆயூர், கொட்டாரக்கரை, அடூர், பந்தளம், செங்கன்னூர், திருவல்லா, சங்கனாச்சேரி, , சிங்கவனம், கோட்டயம், ஏற்றுமானூர், குறவிலங்காடு,கூத்தாட்டுகுளம், மூவாற்றுப்புழை, கீழில்லம், பெரும்பாவூர், காலடி வழியாக அங்கமாலி வரை நீள்கிறது. இது அங்கமாலியில் 47 ஆவது தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது. இது திருவனந்தபுரம், கொல்லம், பத்தனந்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், எறணாகுளம் ஆகிய மாவட்டங்களைக் கடக்கிறது.[1].
முதன்மைத்தன்மை
[தொகு]இது திருவிதாங்கூர் இராச்சியத்தின் தலைநகரை இராச்சியத்தின் பெரும்பாலான பெருநகரங்களுடன் இணைக்கும் முதன்மை நெடுஞ்சாலையாக அமைந்திருந்தது. சபரிமலை புனித யாத்திரை மேற்கொள்ளும் பலரும் இவ்வழியே உள்ள பல கோவில்களை வழிபட்ட வண்ணம் பயணிக்கின்றனர்.
வழியில் உள்ள நகரங்கள்
[தொகு]- திருவனந்தபுரம்
- கிளிமானூர்
- கொட்டாரக்கரை
- அடூர்
- பந்தளம்
- செங்கன்னூர்
- திருவல்லா
- சங்கனாச்சேரி
- சிங்கவனம்
- கோட்டயம்
- ஏற்றுமானூர்
- குறுவிலங்காடு
- கூத்தாட்டுக்குளம்
- மூவாற்றுப்புழை
- பெரும்பாவூர்
- காலடி
- அங்கமாலி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கேரள பொதுப் பணித் துறை - மாநில நெடுஞ்சாலை". கேரள பொதுப் பணித் துறை. Archived from the original on 1 திசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 5 சனவரி 2013.