கயால்
கயால் | |
---|---|
வங்காள தேசத்திலுள்ள கயால் காளையொன்று | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. frontalis
|
இருசொற் பெயரீடு | |
Bos frontalis Lambert, 1804 |
மிதுன் என்றழைக்கப்படும் கயால் என்பது மாட்டு இனத்தை சேர்ந்த பழக்கப்படுத்தப்பட்ட பெரிய விலங்கு ஆகும். இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் வடக்கு மியன்மரிலும் பங்களாதேஷிலும் சீனாவின் யுனான் மாகாணத்திலும் பரவியுள்ளது.[1]
இதன் தோற்றம் குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன
- இது கடமா என்னும் காட்டு மாட்டினை பழக்கப்படுத்தி வந்திருக்கலாம்.[1]
- கடமா, நாட்டு மாடு இவற்றின் கலப்பினமாக இருக்கலாம்.[2] ஆனால் இன்றுவரை இது நிரூபிக்கப்படவில்லை.[3] கடமாவிலிருந்து காயல் பல குறிப்பிடத்தக்க அம்சங்களில் வேறுபடுகிறது.[4]
கயால்கள் மலைக்காடுகளில் பெரும்பாலும் வாழ்கின்றன. மலைப்பகுதிகளில் வாழும் தெற்காசிய இனக்குழுக்களில் திரிபுரா, மிசோரம், அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து பல குழுக்கள் இவற்றை வீட்டுவிலங்காக வளர்த்துவருகின்றனர். மேலும் சிட்டகாங்க் மலைப்பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன.[4] வடக்கு மியன்மரில் கச்சின் மாநிலத்திலும் யுனான் மாநிலத்தில் துரங் மற்றும் சல்வீன் ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படுகிறது.[1] அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் மாநில விலங்கு இதுவே ஆகும். மேலும் அருணாச்சல பிரதேச மக்களின் வாழ்க்கையில் இந்த கயால் இரு முக்கிய பங்கு வகிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Simoons, F. J. (1984). Gayal or mithan. In: Mason, I. L. (ed.) Evolution of Domesticated Animals. Longman, London. Pages 34–38.
- ↑ Payne WJA. (1970). Breeds and Breeding VI. Cattle Production in the Tropics. London: Longman Group Ltd.
- ↑ Uzzaman, Md. Rasel; Bhuiyan, Md. Shamsul Alam; Edea, Z.; Kim, K.-S. (2014). "Semi-domesticated and Irreplaceable Genetic Resource Gayal (Bos frontalis) Needs Effective Genetic Conservation in Bangladesh: A Review". Asian-Australasian Journal of Animal Sciences 27 (9): 1368–1372. doi:10.5713/ajas.2014.14159. பன்னாட்டுத் தர தொடர் எண்:1011-2367. https://dx.doi.org/10.5713/ajas.2014.14159. பார்த்த நாள்: 25 June 2017.
- ↑ 4.0 4.1 Lydekker, R. (1888–1890). The new natural history Volume 2. Printed by order of the Trustees of the British Museum (Natural History), London. Pages 179–181.