உள்ளடக்கத்துக்குச் செல்

கடுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
mustard seed, yellow
உணவாற்றல்1964 கிசூ (469 கலோரி)
34.94 g
சீனி6.89 g
நார்ப்பொருள்14.7 g
28.76 g
நிறைவுற்றது1.46 g
ஒற்றைநிறைவுறாதது19.83 g
பல்நிறைவுறாதது5.39 g
24.94 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(0%)
3 மைகி
தயமின் (B1)
(47%)
0.543 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(32%)
0.381 மிகி
நியாசின் (B3)
(53%)
7.890 மிகி
உயிர்ச்சத்து பி6
(33%)
0.43 மிகி
இலைக்காடி (B9)
(19%)
76 மைகி
உயிர்ச்சத்து பி12
(0%)
0 மைகி
உயிர்ச்சத்து சி
(4%)
3 மிகி
உயிர்ச்சத்து ஈ
(19%)
2.89 மிகி
உயிர்ச்சத்து கே
(5%)
5.4 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(52%)
521 மிகி
இரும்பு
(77%)
9.98 மிகி
மக்னீசியம்
(84%)
298 மிகி
பாசுபரசு
(120%)
841 மிகி
பொட்டாசியம்
(15%)
682 மிகி
சோடியம்
(0%)
5 மிகி
துத்தநாகம்
(60%)
5.7 மிகி
நீர்6.86 g
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

கடுகு (ஒலிப்பு) என்பது கடுகுத் தாவரங்களில் இருந்து பெறப்படும் ஒரு சிறிய, உருளை வடிவ விதையாகும்.

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.

கடுகுக்கு தன் சுவை கிடையாது . குளிர்ந்த நீருடன் சேரும் போது, அதன் மேல் தோல் அப்புறப்படுத்தப்பட, மைரோஸினேஸ் எனப்படும் நொதியம்(enzyme) வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணம். இந்திய சமையலில் சூடான எண்ணெயில் பொரித்து, அதன் மேல் தோலியை அகற்றுகிறார்கள். மேலை நாடுகளில் கடுகை பொடியாக அரைத்தோ அல்லது அரைத்த விழுதாகவோ முன்பாகவே தயார் செய்யப்பட்டதையே உணவில் பயன்படுத்துகிறார்கள்.

கொண்டுள்ள சத்துக்கள்

[தொகு]

கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கடுகில் செலினியம் அதிகம் செரிந்துள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. கடுகில் உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது. கடுகு[1] சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.

சமையலில் கடுகு

[தொகு]

கடுகு தாளிதம் செய்வதற்கு ஒரு முக்கிய பொருள். தாளித்தலின் போது எண்ணெயில் முதலிடப்படும் பொருள் இதுவாகும். இது நல்ல சுவைதரும்.கடுகு வாசனையும் தரும்.

மேலும் படிக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mustard Oil for Hair | Buy Mustard Oil Online – 100% Best Quality". www.standardcoldpressedoil.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.

2. கடுகு எண்ணெய் பற்றி மேலும் அறிய அல்லது வாங்க.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடுகு&oldid=4070621" இலிருந்து மீள்விக்கப்பட்டது