உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம்

ஆள்கூறுகள்: 49°23′4.64″N 8°42′36.51″E / 49.3846222°N 8.7101417°E / 49.3846222; 8.7101417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம்
European Molecular Biology Laboratory (EMBL)
உருவாக்கம்1974
தலைமை இயக்குநர்எடித் கியர்டு[1]
கல்வி பணியாளர்
~95
அமைவிடம்
இணையதளம்www.embl.org

ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் (European Molecular Biology Laboratory) என்பது மூலக்கூற்று உயிரியல் ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இந்த ஆய்வகத்தின் ஆதரவு நாடுகளாக 28 உறுப்பு நாடுகளும், ஒரு நட்பு நாடும் ஒரு துணை உறுப்பு நாடும் உள்ளன.[2] ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் 1974-ல் உருவாக்கப்பட்டது. இந்த ஆய்வு நிறுவனம் உறுப்பு நாடுகளின் பொது ஆராய்ச்சி பணத்தால் நிர்வகிக்கப்படுகிறது.[3] ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் 110 சுயாதீன ஆராய்ச்சி மற்றும் சேவை குழுக்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் குழுக்களால் நடத்தப்படுகிறது. ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் உள்ள இக்குழுக்கள் மற்றும் குழுக்களின் பட்டியலை www.embl.org எனும் இணையத்தளத்தில் காணலாம். இந்த ஆய்வகம் ஆறு முக்கிய இடங்களிலிருந்து இயங்குகிறது: இவை:ஐடெல்பெர்கில் உள்ள முக்கிய ஆய்வகம் மற்றும் கிங்க்சுடனில் உள்ள தளங்கள் (ஐரோப்பிய உயிரித்தகவல் நிறுவனம், இங்கிலாந்தில், கிரெனோபிள் (பிரான்ஸ்), ஹாம்பர்க் (ஜெர்மனி), ரோம் (இத்தாலி) மற்றும் பார்சிலோனா (ஸ்பெயின்). EMBL குழுக்கள் மற்றும் ஆய்வகங்கள் மூலக்கூறு உயிரியல் மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் அடிப்படை ஆராய்ச்சியைச் செய்கின்றன. இந்த அமைப்பு அதன் உறுப்பு நாடுகளில் சேவைகள், புதிய கருவிகள் மற்றும் முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவுகிறது. ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள ஒரே முழு உறுப்பு நாடு இஸ்ரேல் .

வரலாறு

[தொகு]

ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் என்பது லியோ சிசிலார்டு,[4] ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஜான் கெண்ட்ரூவின் யோசனையின் கீழ் உருவானது.[5] ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் போன்ற ஒரு பன்னாடு ஆராய்ச்சி மையத்தை உருவாக்குவதே இவர்களின் இலக்காக இருந்தது. இது அமெரிக்க ஆதிக்கம் செலுத்தும் மூலக்கூறு உயிரியல் துறைக்குப் போட்டியாக இருந்தது.[6] கென்ட்ரூ 1982 வரை ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார். இவருக்குப் பிறகு லெனார்ட் பிலிப்சன் இப்பதவியினை வகித்தார்.[7][8][9] 1993 முதல் 2005 வரை, போடிசு கபடோசு[10][11] இயக்குநராகப் பணியாற்றினார். மேலும் 2005 முதல் 2018 வரை ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தின் நான்காவது இயக்குநரான இயன் மத்தாஜ் நியமிக்கப்பட்டார்.[12] சனவரி 2019-ல், எடித் ஹியர்ட் இயக்குநரானார். ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் இயக்குநர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி இவராவார்.

1968 இல் ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் மாநாடு ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. 14 அரசாங்கங்கள் கலந்துகொண்ட இந்த மாநாடு காரணமாக 1974-ல் ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தை முறையாக நிறுவ வழிவகுத்தது.

19 சனவரி 2022 அன்று, இந்த அமைப்பின் ஐந்தாண்டு அறிவியல் திட்டமான மூலக்கூறுகள் சுற்றுச்சூழல் அமைப்பு குறித்து ஹியர்ட் அறிவித்தார்.

ஆராய்ச்சி

[தொகு]
ஐடெல்பெர்க்கில் ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வக பிரதான நுழைவாயில்

ஒவ்வொரு ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகமும் குறிப்பிட்ட ஆராய்ச்சித் துறையுடன் செயல்படுகிறது. ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வக-ஐரோப்பிய உயித்தகவலியல் நிறுவனம் என்பது உயிர் தகவலியல்ஆராய்ச்சி மற்றும் சேவைகளுக்கான மையமாக உள்ளது. அதிக எண்ணிக்கையிலான அறிவியல் தரவுத்தளங்களை இலவசமாக உருவாக்கி பராமரிக்கிறது. கிரினோபல் (Grenoble) மற்றும் ஆம்பர்க்கு (Hamburg) பிரிவுகள் கட்டமைப்பு உயிரியலில் கவனம் செலுத்துகிறது.

ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம், உரோம்

ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வக உரோம் தளமானது மேல்மரபியல் மற்றும் நரம்பணுவியல் ஆய்வுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனாவில் உள்ள ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வக அறிஞர்கள், ஆரோக்கியம் மற்றும் நோய்களில் திசுக்கள் மற்றும் உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் உருவாகின்றன என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.[13]ஆய்டெல்பெர்க்கில் உள்ள தலைமையகத்தில், உயிரணு உயிரியல் மற்றும் உயிரியல் இயற்பியல், விருத்தியாக்க உயிரியல், மரபணு உயிரியல் மற்றும் கட்டமைப்பு மற்றும் கணக்கீட்டு உயிரியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பிரிவுகளுடன் உள்ளது. இத்துடன் மேற்கூறிய ஆராய்ச்சி பணிகளை நிறைவு செய்யும் ஆய்வுக் குழுக்களும் உள்ளன.

ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் பல அறிவியல் முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பழ ஈயில் கரு வளர்ச்சியின் முதல் முறையான மரபணு பகுப்பாய்வு கிறிஸ்டியன் நஸ்லீன்-வோல்ஹார்ட் மற்றும் எரிக் பிரான்சிசு வைசாசு ஆகியோரால் நடத்தப்பட்டது.[14] இதற்காக இவர்களுக்கு 1995-ல் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1980களின் முற்பகுதியில், ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் ஜாக்ஸ் துபோகேத் மற்றும் அவரது குழு உயிரியல் கட்டமைப்புகளுக்கான தாழ்வெப்பநிலை மின்னணு நுண்ணோக்கியினை உருவாக்கியது. இவர்களுக்கு 2017ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம், கிரெனோபிள்

அறிவியல் சேவைகள்

[தொகு]

ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் தனது ஐந்து ஐரோப்பியத் தளங்களில் கட்டமைப்பு உயிரியல், இயல்நிலை வரைவு மற்றும் வரிசைமுறையாக்க வசதிகள் உட்பட வெளிப்புற ஆராய்ச்சியாளர்களுக்கு மேம்பட்ட சோதனை மற்றும் தரவு சேவைகளை வழங்குவதை ஒரு முக்கிய பணியாகக் கொண்டுள்ளது. 2021-ல், ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் தன் ஐடெல்பெர்க் தலைமையகத்தில் உயர்-தெளிவு ஒளி மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கிக்கான புதிய மையத்தைத் தோற்றுவித்தது. இந்த மையம் உலகளவில் வருகை தரும் விஞ்ஞானிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளது. சமீபத்திய இயல்நிலை வரைவு தொழில்நுட்பங்களை நிபுணர் ஆலோசனை மற்றும் தொழில்துறை சார்ந்த முன்னேற்றங்களுடன் இணைப்பதன் மூலம் உயிர் அறிவியலுக்கான தனித்துவமான சேவை வசதியை வழங்குகிறது.[15]

பயிற்சி

[தொகு]
ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வக ஐடெல்பெர்க் கட்டிடங்கள், புதிய மேம்பட்ட பயிற்சி மையம் உட்பட

ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தின் மேம்பட்ட பயிற்சியானது இதன் ஐந்து முக்கிய பணிகளில் ஒன்றாகும்.[16] பல ஆண்டுகளாக, இந்த ஆய்வகம் பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதில் முதன்மையானது பன்னாட்டு முனைவர் பட்ட ஆய்வாகும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 200 மாணவர்கள் ஆய்வினை மேற்கொள்கின்றனர். 1997ஆம் ஆண்டு முதல் இந்த ஆய்வகம் இவர்களுக்குப் பட்டத்தை வழங்குவதற்கான உரிமையைப் பெற்றுள்ளதிலும் தற்போது மாணவர்கள் தங்கள் பட்டங்களை இந்த ஆய்வக கூட்டுப் பல்கலைக்கழகங்களிலிருந்தும் பெறுகின்றனர். ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் துறைகளுக்கிடையேயான முதுமுனைவர் திட்டம், ஆய்வாளர் வருகைத் திட்டத்தினையும் ஆதரிக்கின்றது.[17]

ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் மேம்பட்ட பயிற்சி மையம்

[தொகு]

மார்ச் 2010-ல், ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வக மேம்பட்ட பயிற்சி மையம் ஐடெல்பெர்க்கில் உள்ள பிரதான வளாகத்தில் திறக்கப்பட்டது. இது டி. என். ஏவின் இரட்டை சுருள் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.[18] இது அறிவியல் மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. மேலும் பயிற்சி ஆய்வகங்கள் மற்றும் விரிவுரை அரங்குகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.[19]

மேம்பட்ட பயிற்சி மையம் ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வக உயிர் அறிவியலுக்கான ஐரோப்பிய கற்றல் ஆய்வகத்தையும் (ELLS) செயல்படுத்துகிறது. இது மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மூலக்கூறு உயிரியலின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பயிற்சி அளிக்கிறது. மேலும் இது மாணவர் வெளித்தொடர்பு திட்டத்தையும் நடத்துகிறது.

அறிவியலும் சமூகமும்

[தொகு]

ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் அறிவியல் மற்றும் சமூகத் திட்டத்தையும் செயல்படுத்துகின்றது. இது பொது மக்களுக்கு அறிவியல் ஆராய்ச்சியில் தற்போதைய போக்கு, செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளைக் கொண்டுசெல்கிறது.[20]

உறுப்பினர்

[தொகு]
  Member States
  Associate Member States
  Prospect Member States

ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம் தற்போது 28 உறுப்பு நாடுகள், ஒரு துணை உறுப்பு நாடு மற்றும் ஒரு வாய்ப்புள்ள உறுப்பு நாடு ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.

உறுப்பு நாடுகள் [2] சேர்ந்த ஆண்டு
 ஆஸ்திரியா 1974
 பெல்ஜியம் 1990
 குரோவாசியா 2006
 செக் குடியரசு 2014
 டென்மார்க் 1974
 எசுத்தோனியா 2023
 பின்லாந்து 1984
 பிரான்சு 1974
 செருமனி 1974
 கிரேக்க நாடு 1984
 அங்கேரி 2017
 ஐசுலாந்து 2005
 அயர்லாந்து 2003
 இசுரேல் 1974
 இத்தாலி 1974
 லித்துவேனியா 2019
 லக்சம்பர்க் 2007
 மால்ட்டா 2016
 மொண்டெனேகுரோ 2018
 நெதர்லாந்து 1974
 நோர்வே 1985
 போலந்து 2019
 போர்த்துகல் 1998
 சிலவாக்கியா 2018
 எசுப்பானியா 1986
 சுவீடன் 1974
 சுவிட்சர்லாந்து 1974
 ஐக்கிய இராச்சியம் 1974
நேச உறுப்பு நாடு
 லாத்வியா 2020
இணை உறுப்பு நாடுகள்
 அர்கெந்தீனா 2014 - 2020
 ஆத்திரேலியா 2008

மேற்கோள்கள்

[தொகு]
  1. Noyes, Dan (2017-06-28). "EMBL Council selects next Director General". EMBL etc.. https://news.embl.de/lab-matters/embl-next-director-general/. 
  2. 2.0 2.1 "EMBL member states". European Molecular Biology Laboratory. 2021.
  3. Signing of the agreement to set up a European molecular biology research laboratory. CERN. 10 May 1973.
  4. Maas, W; Crow, J. F. (2004). "Leo Szilard: A personal remembrance". Genetics 167 (2): 555–8. doi:10.1534/genetics.104.030320. பப்மெட்:15238510. 
  5. Holmes, K. C. (2001). "Sir John Cowdery Kendrew. 24 March 1917 - 23 August 1997: Elected F.R.S. 1960". Biographical Memoirs of Fellows of the Royal Society 47: 311–332. doi:10.1098/rsbm.2001.0018. பப்மெட்:15124647. 
  6. "EMBL History". 2015. Archived from the original on 2014-04-13.
  7. Pettersson, U (2011). "Lennart Philipson: A fighter is gone". Proceedings of the National Academy of Sciences 108 (47): 18875. doi:10.1073/pnas.1116859108. பப்மெட்:22106290. Bibcode: 2011PNAS..10818875P. 
  8. Simons, K.; Mattaj, I. W. (2011). "Lennart Philipson (1929-2011)". Science 333 (6043): 711. doi:10.1126/science.1210990. பப்மெட்:21817041. Bibcode: 2011Sci...333..711S. 
  9. Baltimore, D. (2011). "Lennart Philipson (1929–2011): A Warrior Has Passed". PLOS Biology 9 (9): e1001153. doi:10.1371/journal.pbio.1001153. 
  10. Gilbert, N. (2010). "The labours of Fotis Kafatos". Nature 464 (7285): 20. doi:10.1038/464020a. பப்மெட்:20203577. 
  11. Kafatos, F. (2008). "Straight talk with...Fotis Kafatos". Nature Medicine 14 (9): 902–903. doi:10.1038/nm0908-902. பப்மெட்:18776875. 
  12. MATTAJ, Iain William. Who's Who. Vol. 2015 (online Oxford University Press ed.). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. (subscription required)
  13. "About EMBL | EMBL.org".
  14. Nüsslein-Volhard, C.; Wieschaus, E. (1980). "Mutations affecting segment number and polarity in Drosophila". Nature 287 (5785): 795–801. doi:10.1038/287795a0. பப்மெட்:6776413. Bibcode: 1980Natur.287..795N. 
  15. "Funding agreed for imaging technology centre at EMBL Heidelberg". 31 August 2017.
  16. "Missions | EMBL.org".
  17. Training at EMBL, EMBL website
  18. "University of Heidelberg – Press Releases". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-06-06.
  19. "Conferences and Courses". EMBL. 2020. பார்க்கப்பட்ட நாள் June 7, 2020.
  20. Science and Society Programme, EMBL website

வெளி இணைப்புகள்

[தொகு]