ஐயோனியன் கிளர்ச்சி
ஐயோனியன் கிளர்ச்சி | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிரேக்க பாரசீகப் போர்கள் பகுதி | |||||||||
ஐயோனியன் கிளர்ச்சியின் இடம் மற்றும் முக்கிய நிகழ்வுகள். |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
ஐயோனியா Aeolis Doris காரியா ஏதென்சு எரீத்திரியா சைப்பிரசு | அகாமனிசியப் பேரரசு | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
அரிசுடோகோரசு † Charopinos † Hermophantus Eualcides † Melanthius Dionysius of Phocaea Histiaeus † Hecataeus Onesilus † | Megabates Artaphernes Daurises † Hyamees Otanes தேடிஸ் |
ஐயோனியன் கிளர்ச்சி (Ionian Revolt) என்பது பாரசீகப் பேரரசின் ஆட்சிக்கு கீழ் சின்ன ஆசியாவில் இருந்த கிரேக்கப் பகுதிகளான அயோலிஸ், டோரிஸ், சைப்பிரசு, காரியாவில் போன்ற பல பகுதிகளில் உருவான இராணுவக் கிளர்ச்சிகளாகும். இது கிமு 499 முதல் கிமு 493 வரை நீடித்தது. கிளர்ச்சியின் மையமாக ஆசியா மைனரின் கிரேக்க நகர அரசுகளை ஆள பாரசீகர்களால் நியமிக்கப்பட்ட சர்வாதிகரிகளில்,[சான்று தேவை] அதிருப்தியாளர்களான மிலீட்டசின் இரண்டு சர்வாதிகாரிகளான ஹிஸ்டியாயஸ் மற்றும் அரிசுடோகோரசு ஆகியோர் இருந்தனர். இதற்கு முன்னதாக கிமு 540 இல் ஐயோனியா நகரங்கள் பாரசீகர்களால் கைப்பற்றப்பட்டன. அதன்பின்னர் அவர்களுக்கு அடங்கிய பூர்வீக கிரேக்கர்களை ஆட்சியாளர்களாக நியமித்து தங்களுக்கு கீழ் அப்பகுதிகளை ஆள அனுமதித்தது. இவ்வாறு சுமார் அரை நூற்றாண்டாக பாரசீக ஆதிக்கத்தில் அனதோலியாவின் கிரக்க அரசுகள் இருந்தன. அதன்பிறகு அவை பாரசீகத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று முன்புபோல தன்னாட்சி நடத்த விரும்பின.
இதற்குக் கிரேக்கத்தில் உள்ள எசுபார்த்தா, ஏதென்சு போன்ற முதன்மையான நகர அரசுகளின் உதவியை எதிர்பார்த்தன. இதன்பொருட்டு மிலீட்டசின் ஆட்சியாளரான அரிசுடோகோரசு எசுபார்த்தவுக்கு சென்று அதன் உதவியைக் கோரினார். ஆனால் எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை. அதன்பிறகு ஏதென்சை நாடி வந்தார். ஏதென்சு 20 கப்பல்களை அனுப்பி உதவியது. எரீத்திரியா நகர அரசு ஐந்து கப்பல்களை அனுப்பி உதவியது.
மிலீட்டசு நகர அரசின் தலைமையில் சின்ன ஆசியாவின் கிரேக்கர்கள் புரட்சிக்கு புறப்பட்டனர். என்றாலும் அவர்களுக்குள் புகைச்சல் இருந்ததால், புரட்சியை திறம்பட நடத்தி வெற்றிபெறத் தெரியவில்லை. புகைச்சலும், துரோகங்களும் சூழ்ந்த நிலையில் கி.மு. 494 இல் கிரேக்க கடற்படைகள் பாரசீகர்களின் கடற் படைகளை ஏஜியன் கடலின் ஒரு பகுதியில் சந்தித்தன. லேட் சமர் எனப்படும் இச்சமரின் முடிவில் பாரசீகர்கள் வெற்றியை ஈட்டினர். பாரசீகர்கள் தங்கள் வெற்றிக்குப் பிறகு புரட்சிக்கு தலைமை வகித்த மிலீட்டசு நகரை அழித்தனர். இதன் பிறகு சின்ன ஆசியா மீண்டும் பாரசீகர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.[1]
அயோனியன் கிளர்ச்சியானது கிரேக்கத்திற்கும் பாரசீக பேரரசுக்கும் இடையிலான முதல் பெரிய மோதலை உருவாக்கியது. மேலும் இது கிரேக்க பாரசீகப் போர்களின் முதல் கட்டத்தைக் குறிக்கிறது. சின்ன ஆசியா மீண்டும் பாரசீக ஆட்சிக்குள் கொண்டு வரப்பட்டாலும், ஏதென்சு மற்றும் எரீத்திரியா ஆகிய நகர நாடுகள் இந்த கிளர்ச்சிக்கு ஆதரவளித்ததற்காக அவற்றை தண்டிப்பதற்கு டேரியஸ் சபதம் செய்தார். மேலும், எரோடோடசின் கூற்றுப்படி, கிரேக்கத்தின் எண்ணற்ற நகர அரசுகள் தனது பேரரசின் நிலைத்தன்மைக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதைக் கண்ட டேரியஸ் முழு கிரேக்கத்தையும் கைப்பற்ற முடிவு செய்தார். கிமு 492 இல், கிரேக்க-பாரசீகப் போர்களின் அடுத்த கட்டமான கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் முதல் படையெடுப்பு, அயோனியன் கிளர்ச்சியின் நேரடி விளைவாகத் தொடங்கியது.
குறிப்புகள்
[தொகு]- ↑ வெ. சாமிநாதசர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 187–188.