மிலீட்டஸ்
மிலீட்டஸ் Μῑ́λητος Milet | |
---|---|
இருப்பிடம் | Balat, Didim, அய்டன் மாகாணம், துருக்கி |
பகுதி | ஏஜியன் பிராந்தியம் |
ஆயத்தொலைகள் | 37°31′49″N 27°16′42″E / 37.53028°N 27.27833°E |
வகை | குடியேற்றம் |
பரப்பளவு | 90 ha (220 ஏக்கர்கள்) |
வரலாறு | |
கட்டுநர் | மினோவன் (later மைசீனியா) on site of the லூவியன் or Carian city[1][2][3] |
பகுதிக் குறிப்புகள் | |
பொது அனுமதி | Yes |
இணையத்தளம் | Miletus Archaeological Site |
மீலீட்டஸ் (Miletus (/maɪˈliːtəs/; கிரேக்கம்: Μῑ́λητος; இட்டைட்டு transcription Millawanda or Milawata (exonyms); இலத்தீன்: Miletus; துருக்கியம்: Milet) என்பது பண்டைய கிரேக்க நகரமாகும். இது அனத்தோலியாவின் மேற்கு கடற்கரையில், பண்டைய காரியாவில் உள்ள மேண்டர் ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகில் இருந்தது. [3] [4] இதன் இடிபாடுகள் துருக்கியின், அய்டன் மாகாணத்தில் உள்ள பாலாட் என்ற நவீன கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. கிமு 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பாரசீக ஆட்சிக்கு முன்பு பண்டையமி கிரேக்க நகரங்களில் மிகப் பெரிய மற்றும் பணக்காரர் நகரங்களில் ஒன்றாக இது கருதப்பட்டது. [5] [6]
கடல் மட்ட உயர்வு மற்றும் வண்டல்கள் படிவுகள் காரணமாக தளத்தில் முதல் குடியேற்றத்தின் சான்றுகளை அணுக முடியாததாகிவிட்டது. கிடைத்த முதல் சான்று புதிய கற்காலம் குறித்ததாகும். துவக்க மற்றும் மத்திய வெண்கலக் காலக் குடியேற்றம் மினோவன் நாகரீகத்தின் செல்வாக்கின் கீழ் வந்தது. பூர்வகுடிகளான லெஜ்கள் இடம்பெயரும் வகையில் கிரெட்டான்களின் வருகை நிகழ்ந்ததாக தொன்மக்கதை கூறுகிறது.
மிலிட்டசின் பதிவு செய்யப்பட்ட வரலாறானது ஹிட்டிட் பேரரசின் பதிவுகளுடனும், வெண்கல யுகத்தின் பிற்பகுதியில் பைலோஸ் மற்றும் நோசோஸின் மைசீனியன் பதிவுகளுடனும் தொடங்குகிறது. மிலிட்டஸ் ஆசியா மைனரின் கடற்கரையில் மைசீனிய கோட்டையாக கி.மு 1450 முதல் கி.மு. 1100 வரை இருந்தது.
கிமு 13 ஆம் நூற்றாண்டில் தென் மத்திய அனடோலியாவிலிருந்து லூவிய மொழி பேசுபவர்களும் தங்களை கேரியர்கள் என்று அழைத்துக் கொண்டவர்களும் இக்கு வந்து சேர்ந்தனர். அந்த நூற்றாண்டின் பிற்காலத்தில் மற்ற கிரேக்கர்கள் வந்து சேர்ந்தனர். அந்த நேரத்தில் இந்த நகரமானது இட்டைட்டு பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தது. அந்த பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிமு 12 ஆம் நூற்றாண்டில் நகரம் அழிக்கப்பட்டது. மேலும் கிமு 1000 இல் தொடங்கி அயோனியன் கிரேக்கர்களால் பரவலாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டது.
வரலாறு
[தொகு]கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரையில் மிலீட்டஸ் நகரம் கிரேக்கத்திலேயே முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருந்தது. இதன் பிறகே ஏதன்சுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது. பல நாட்டு வணிகர்கள் சந்தித்து பரிவர்த்தனை செய்துகொள்ளும் இடமாக இந்நகரம் இருந்தது. இந்நகரத்து செல்வர் பலர் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல தொழில்களை செய்தனர். சுமார் எண்பது ஊர்களில் இவர்களின் வணிகத் தலங்கள் இருந்தன. மிலீட்டஸ் நகர நிர்வாகத்துக்குக் கூட இந்த வணிகர்கள் கடன் கொடுத்து உதவியதாக தெரிகிறது.[7]
இந்த நகரத்தில்தான் கிரேக்கர்களினால் பெரிதும் போற்றப்பட்ட ஞானிகள் எழுவரில் முதல்வரான தேலேஸ் கிமு 624 பிறந்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Alice Mouton; Ian Rutherford; Ilya Yakubovich (7 June 2013). Luwian Identities: Culture, Language and Religion Between Anatolia and the Aegean. BRILL. pp. 435–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-25341-4.
- ↑ Alan M. Greaves (25 April 2002). Miletos: A History. Taylor & Francis. pp. 71–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-99393-4.
The political history of Miletos/Millawanda, as it can be reconstructed from limited sources, shows that despite having a material culture dominated by Aegean influences it was more often associated with Anatolian powers such as Arzawa and the Hittites than it was with the presumed Aegean power of Ahhijawa
- ↑ 3.0 3.1 Sharon R. Steadman; Gregory McMahon; John Gregory McMahon (15 September 2011). The Oxford Handbook of Ancient Anatolia: (10,000-323 BCE). Oxford University Press. p. 369 and 608. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-537614-2. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "SteadmanMcMahon2011" defined multiple times with different content - ↑ Luc-Normand Tellier, Urban World History: An Economic and Geographical Perspective, p. 79: “The neighboring Greek city of Miletus, located on the Meander river was another terminal of the same route; it exerted certain hegemony over the Black sea trade and created about fifty commercial entrepôts in the Aegean sea and Black sea region.
- ↑ A Short History of Greek Philosophy By John Marshall page 11 “For several centuries prior to the great Persian invasion of Greece, perhaps the very greatest and wealthiest city of the Greek world was Miletus”
- ↑ Ancient Greek civilization By David Sansone page 79 “In the seventh and sixth centuries BCE the city of Miletus was among the most prosperous and powerful of Greek poleis.”
- ↑ வெ. சாமிநாதசர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். p. 74.