உள்ளடக்கத்துக்குச் செல்

உருங்கியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருங்கியா
Rungia pectinata
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Rungia

உருங்கியா (தாவரவியல் வகைப்பாடு: Rungia) என்பது முண்மூலிகைக் குடும்பம் என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 207 பேரினங்களில் ஒன்றாகும்.[1] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளரை, Nees என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பர்.[2] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரியினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1832 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடப் பரவலிடம் என்பது, வெப்ப வலயம் உள்ள ஆப்பிரிக்கப் பகுதிகள், தெற்கு அரபு வளைகுடாப் பகுதிகள், வெப்ப வலய, அயன அயல் மண்டலம் உள்ள ஆசியன ஆகும்.

வளர் இயல்புகள்

[தொகு]

இது பல்லாண்டு வாழும் இயல்புடையது. இச்செடி 0.8 மீட்டர் உயரம் வரை கொத்துக்களாக வளரக்கூடியதாகும். பளபளப்பான பச்சை, நீள்வட்ட இலைகளைப் பெற்றிருக்கின்றன. இவ்விலைகள், ஒன்றுக்கொன்று செங்குத்தாக அருகில் உள்ள இலைகளுடன், இரட்டையாக (decussate) அமைக்கப்பட்டிருக்கின்றன. இலைகள் காளான் போன்ற சுவை மற்றும் மிருதுவான அமைப்பைக் கொண்டுள்ளன.உணவுக்காகவும் சில இனங்களின் பழங்கள் பயன்படுகின்றன. உருங்கியா ரெபன்சுஎன்ற இதன் இனம் மருத்துவக் குணங்களைப் பெற்றிருக்கிறது.[3]

இனங்கள்

[தொகு]

கியூ தாவரவியல் ஆய்வகம், இப்பேரினத்தின் இனங்களாக, 86 இனங்களை, பன்னாட்டு தாவரவியல் அமைப்புகளின் ஒத்துழைப்புகளோடு வெளியிட்டுள்ளது. அவை வருமாறு;—

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Acanthaceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச்சு 2024.
    "Acanthaceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச்சு 2024.
  2. "Rungia". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச்சு 2024.
    "Rungia". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச்சு 2024.
  3. Antiinflammatory, Diuretic and Antimicrobial Activities of Rungia pectinata Linn. and Rungi repens

இதையும் காணவும்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rungia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருங்கியா&oldid=3930928" இலிருந்து மீள்விக்கப்பட்டது