உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜேந்திர குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜேந்திர குமார்
பிறப்புராஜேந்திர குமார் துலி
(1927-07-20)20 சூலை 1927 [1]
சியால்கோட், பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா), British India (present-day பஞ்சாப் (பாக்கிஸ்தான்), பாக்கித்தான்)
இறப்பு12 சூலை 1999(1999-07-12) (அகவை 71)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகர், தயாரிப்பாளர், director
செயற்பாட்டுக்
காலம்
1949–1998
வாழ்க்கைத்
துணை
சுக்லா
பிள்ளைகள்3 (குமார் கௌரவ் உட்பட)

இராஜேந்திர குமார் துலி (20 சூலை 1927 - 12 சூலை 1999) பாலிவுட் படங்களில் நடித்த ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். 1950 ஆம் ஆண்டில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், நான்கு பதின்ம ஆண்டுகளாக நீடித்த ஒரு வாழ்க்கையில் எண்பதிற்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார். இவர் 'ஜூபிலி குமார்' என்று பிரபலமாக அறியப்பட்டார். இவர் 1960 களில் மிகவும் வெற்றிகரமான இந்திய நடிகர்களில் ஒருவராக கருதப்பட்டார். அவர் தனது மகன் குமார் கௌரவ் நடித்த பல படங்களையும் தயாரித்தார். இந்திய அரசு அவருக்கு 1969 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.

தொழில்

[தொகு]

இராஜேந்திர குமாரின் குடும்பம் பிரித்தானியாவின் இந்தியாவின் பஞ்சாபில் வசித்து வந்தது. இவர் பிரித்தானியாவின் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் சியால்கோட்டில் ஒரு பஞ்சாபி இந்து குடும்பத்தில் பிறந்தார்.[2] அவரது தாத்தா ஒரு வெற்றிகரமான இராணுவ ஒப்பந்தக்காரர் மற்றும் அவரது தந்தை பிரித்தானியாவின் இந்தியாவின் சிந்தாவின் கராச்சியில் ஜவுளி வியாபாரம் செய்தார். இந்தியப் பிரிவினையின் போது, குடும்பத்தினர் நிலம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு இந்தியாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் பம்பாய்க்கு வந்தபோது, குமார் இந்தி திரையுலகில் தனது அதிர்ஷ்டத்தை முயற்சிக்க முடிவு செய்தார். அவர் ஒருபோதும் கதாநாயகனாக நடிக்க விரும்பவில்லை, இயக்குநர் எச்.எஸ். ராவெயிலுடன் உதவியாளராக பணிபுரிந்தார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக, ராவெய்ல் பணிபுரிந்த படங்கா, சாகை, பாக்கெட்மார் ஆகிய படங்களில் உதவியாளராகப் பணிபுரிந்தார்.

இந்த நேரத்தில், அவர் 1949 ஆம் ஆண்டு படங்கா திரைப்படத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில் அறிமுகமானார். அதன்பிறகு கிடார் ஷர்மாவின் 1950 திரைப்படமான ஜோகனில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் திலீப் குமார் மற்றும் நர்கிஸ் ஆகியோருடன் நடித்தார். அப்படத்தின் தயாரிப்பாளராக இருந்த தேவேந்திர கோயல் ஜோகனில் இராஜேந்திர குமாரின் நடிப்பைக் கவனித்து இவருக்கு 1955 ஆம் ஆண்டில் வசன் என்ற திரைப்படத்தில் ஒரு வாய்ப்பை அளித்தார். குமாருக்கு இந்தப் படத்திற்கான ஊதியமாக பதினைந்து நூறு ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது; இருப்பினும், இந்த படம் வெற்றி பெற்றதோடு குமாரின் முதல் வெள்ளி விழா படமாக அமைந்தது. 'ஒரு நட்சத்திரம் பிறந்தது' என்ற தலைப்பையும் அவருக்கு இப்படம் பெற்றுத்தந்தது.[3] 1957 ஆம் ஆண்டில் மெஹபூப் கானின் வசூல் சாதனை செய்த காவிய திரைப்படமான மதர் இந்தியாவில் இவருக்கு வழங்கப்பட்ட துணை கதாபாத்திரத்தில் மேலும் வெற்றியைப் பெற்றார், அதில் இவர் நர்கிஸ் கதாபாத்திரத்தின் மகனாக நடித்தார். ஒரு காதல் நாயகனாக இவரது முக்கிய வெற்றி அமித் சக்சேனாவின் இசையில் அமீதாவுடன் இணைந்து நடித்த கூஞ்ச் உதி செனாய் (1959) திரைப்படத்தால் அமைந்தது.

1960 களில் இராஜேந்திர குமார் மிகப்பெரும் நட்சத்திரமாக உயர்ந்தார். இவர் நடித்த ஆறு அல்லது ஏழு படங்கள் 25 வாரங்களுக்கும் மேலாக ஓடிய நேரங்கள் இருந்தன. (இந்தியாவில் "வெள்ளி விழா படம்" என்று அழைக்கப்படுகிறது). ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இத்திரைப்படங்கள் "ஜூபிலி குமார்" என்ற புனைப்பெயரை இவருக்கு வழங்கியது.[4] தூல் கா பூல் (1959), கரானா (1961), தில் ஏக் மந்திர் (1963), மேரே மெஹபூப் (1963), சங்கம் (1964), ஆயி மிலன் கி பேலா (1964), அர்ஸூ (1965) உள்ளிட்ட பல வசூல் சாதனை செய்த வெற்றிப் படங்களில் இவர் நடித்தார். சூரஜ் (1966), ஜுக் கயா ஆஸ்மான் (1968), தலாஷ் (1969) மற்றும் கன்வார் (1970). சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் பரிந்துரையை தில் ஏக் மந்திர் (1963), ஆயி மிலன் கி பேலா (1964), அர்ஸூ (1965) ஆகிய படங்கள் இவருக்குப் பெற்றுத் தந்தன. சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான விருது சங்கம் (1964) திரைப்படத்தில் நடித்தமைக்காக இவருக்கு கிடைத்தது.[5] கே. ஆசிஃப்பின் முழுமையற்ற படமான சாஸ்தா கூன் மெஹங்கா பானி, சைரா பானுவுடன் இணைந்து நடித்தார். அவரது சகோதரர் நரேஷ்குமாரும் ஒரு இயக்குநராக இருந்தார். இவரை கோரா அவுர் கலா (1972) மற்றும் தோ ஜசூஸ் (1975) போன்ற படங்களில் இயக்கியுள்ளார்.

1972 முதல், அவர் ராஜேஷ் கண்ணாவிடமிருந்து போட்டியை எதிர்கொண்டார். இவரது பல படங்கள் தோல்வியை சந்தித்தன. பின்னர் அவர் 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களின் பிற்பகுதியிலும் குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Joshi, Lalit Mohan (31 July 1999). "Rajendra Kumar". The Guardian. https://www.theguardian.com/news/1999/jul/31/guardianobituaries1. பார்த்த நாள்: 10 May 2021. 
  2. Raheja, Dinesh. "Bollywood's Jubilee Kumar". Archived from the original on 11 February 2018. பார்க்கப்பட்ட நாள் 14 October 2011.
  3. Rajendra Kumar – Memories பரணிடப்பட்டது 12 மார்ச்சு 2014 at the வந்தவழி இயந்திரம்.
  4. Movies: Bollywood's Jubilee Kumar பரணிடப்பட்டது 10 செப்டெம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம்.
  5. 1st Filmfare Awards 1953 பரணிடப்பட்டது 12 சூன் 2009 at the வந்தவழி இயந்திரம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜேந்திர_குமார்&oldid=4183212" இலிருந்து மீள்விக்கப்பட்டது