ஆந்தரகோசெரசு
Appearance
ஆந்தரகோசெரசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகுநாணி
|
வகுப்பு: | பறவை
|
வரிசை: | புசெரோடிபார்மிசு
|
குடும்பம்: | புசெரோடிடே
|
பேரினம்: | ஆந்தரகோசெரசு எல். ரெய்ச்சென்பாச், 1849
|
சிற்றினம் | |
|
ஆந்தரகோசெரசு (Anthracoceros) என்பது புசெரோடிடே குடும்பத்தில் உள்ள இருவாட்சிப் பறவைகளின் பேரினமாகும்.
இந்த பேரினத்தை ஜெர்மன் இயற்கை ஆர்வலர் லுட்விக் ரீச்சன்பாக் 1849ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். இந்த மாதிரி இனம் பின்னர் மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி (ஆந்தரகோசெரசு கொரோனாட்டசு) என அழைக்கப்பட்டது. இதன் பெயரானது பண்டைய கிரேக்கத்தில் "நிலக்கரி கருப்பு" எனப்பொருள் படும் ανθραξ anthrax, ανθρακος anthrakos சொல்லிலிருந்தும் ”கொம்பு” எனப் பொருள்படும் κερας keras, κερως kerōs வார்த்தையிலிருந்து தோன்றியது.[1] 2013ல் மூலக்கூறு வகைப்பாட்டியல் ஆய்வின் அறிக்கையின்படி ஆந்தரகோசெரசு பேரினம் மூன்று சாம்பல் இருவாச்சி சிற்றினமுடைய ஒசையோசெரசு பேரினத்தின் சகோதர பேரினமாக அறியப்பட்டது.[2]
இந்த பேரினத்தில் ஐந்து இனங்கள் உள்ளன: [3]
படம் | விலங்கியல் பெயர் | பொது பெயர் | பரவல் |
---|---|---|---|
ஆந்தரகோசெரசு கொரோனாட்டசு | மலபார் கறுப்பு வெள்ளை இருவாச்சி | இந்தியா, இலங்கை | |
ஆந்தரகோசெரசு அல்பிரோசுடிரிசு | ஓரியண்டல் பைட் இருவாச்சி | வங்கதேசம், பூட்டான், புரூணை, கம்போடியா, சீனா (குவாங்ஷி, யுன்னான் மற்றும் திபெத்), கிழக்கு மற்றும் வட இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் | |
ஆந்தரகோசெரசு மலாயானசு | கருப்பு இருவாய்ச்சி | புரூணை, தாருஸ்ஸலாம், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து | |
ஆந்தரகோசெரசு மார்ச்சே | பலவன் இருவாச்சி | பலவன் தீவு | |
ஆந்தரகோசெரசு மொன்டானி | சுலு இருவாய்ச்சி | பிலிப்பைன்ஸ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jobling, J.A. (2019). del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J.; Christie, D.A.; de Juana, E. (eds.). "Anthracoceros". Handbook of the Birds of the World Alive: Key to Scientific Names in Ornithology. Lynx Edicions. பார்க்கப்பட்ட நாள் 23 July 2019.
- ↑ Gonzalez, J.-C.T.; Sheldon, B.C.; Collar, N.J.; Tobias, J.A. (2013). "A comprehensive molecular phylogeny for the hornbills (Aves: Bucerotidae)". Molecular Phylogenetics and Evolution 67 (2): 468-483. doi:10.1016/j.ympev.2013.02.012.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2019). "Mousebirds, Cuckoo Roller, trogons, hoopoes, hornbills". World Bird List Version 9.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 23 July 2019.