ஆக்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்சிசு
ஆக்சிசு ஆக்சிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆக்சிசு
மாதிரி இனம்
ஆக்சிசு ஆக்சிசு
எர்க்சுலெபென், 1777
சிற்றினம்

உரையினை காண்க

ஆக்சிசு (Axis) என்பது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் காணப்படும் மான் பேரினமாகும். தற்போது பெரும்பாலான வகைப்பாட்டியலர்களின் வரையறையின்படி, நான்கு சிற்றினங்கள் இப்பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளன. நான்கு சிற்றினங்களில் மூன்று பன்றி மான்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதன் பேரினப் பெயர் என்பது மூத்த பிளினி எல்டரின் இயற்கை வரலாற்றில் குறிப்பிடப்பட்ட ஒரு வார்த்தை ஆகும்.[1]

சிற்றினங்கள்[தொகு]

அமெரிக்கப் பாலூட்டி சமூகத்தினர் 2005ஆம் ஆண்டு வெளியிட்ட உலகின் பாலூட்டி சிற்றினங்கள் எனும் பனுவலின் மூன்றாவது பதிப்பைத் தொடர்ந்து, நான்கு சிற்றினங்கள் ஆக்சிசு பேரினத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.[2][3] இந்த நான்கு சிற்றினங்கள், இரண்டு துணைப்பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆக்சிசு எனும் துணைப்பேரினம் புள்ளிமானுடனும் கைலாபசு பிற சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[2]

படம் விலங்கியல் பெயர் பொது பெயர் பரவல்
ஆக்சிசு ஆக்சிசு சிட்டல், புள்ளிமான் அல்லது ஆக்சிசு மான் இலங்கை உட்பட இந்திய துணைக்கண்டம்
ஆக்சிசு கலாமியனென்சிசு கலாமியன் மான் பிலிப்பீன்சு பலவானில் உள்ள காலமியன் தீவுகள்
ஆக்சிசு குக்லி பாவேன் மான் அல்லது குக்லி மான் இந்தோனேசியாவில் உள்ள பாவியன் தீவு
ஆக்சிசு போர்சினசு இந்தியப் பன்றி மான் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்கு சமவெளி முதல் மியான்மர் வரை, இந்தோசீனாவின் சில பகுதிகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Pliny the Elder. "Natural History". Loeb Classical Library. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022. in India [...] a wild animal, named axis, with the hide of a fawn but with more spots and whiter ones
  2. 2.0 2.1 Wilson, D. E., and Reeder, D. M. (eds), தொகுப்பாசிரியர் (2005). Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14200344. 
  3. Mammal Diversity Database (2021-08-10), Mammal Diversity Database, Zenodo, பார்க்கப்பட்ட நாள் 2021-08-28
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சிசு&oldid=3616539" இலிருந்து மீள்விக்கப்பட்டது